தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 4 juni 2018

ரஜினியை எதிர்த்து எச்சரிக்கை சுவரொட்டிகள்! பிரித்தானிய திரையரங்குகளில் தன்மானத்தமிழர் படை

எது ஒன்றிற்கும் கருத்து கூறாத நடிகர் ரஜினிகாந் நடந்து முடித்த தூத்து குடி துயரத்திற்கு கருத்து சொன்னார்.
இது அவரின் சினிமா வாழ்க்கைக்கும், எதிர்கால அரசியல் ஆசைக்கும் பெரும் சறுக்கலாக அமைந்து விட்டது.
பாதிக்கபட்ட மக்களை பார்த்து விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவர் நடந்து கொண்ட விதமும் அங்கு தெரிவித்த கருத்துக்களும் தமிழ்மக்களின் உணர்வை சீண்டுவதாக அமைந்துவிட்டது.
அவரின் நடவடிக்கைக்கு எதிர்வினையாக அவரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் காலா திரைப்படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் எனும் கோரிக்கை உலகம் முழுவதிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றது.
நோர்வே சுவிஸ் நாடுகளுக்கான திரைப்பட விநியோகித்தர்கள் தம் நாடுகளில் படம் வெளியிடப்படாதென அறிவித்து அதிரடி காட்டினார்கள்.
இந்த நிலையில் பெருமளவான தமிழர்கள் வாழும் பிரித்தானியாவில் திரைப்படம் வெளியாகுமா வெளியாகாதா எனும் குழப்பமான நிலையில் நேற்றைய தினம் அந்நாட்டின் சினிமா திரையரங்குகள், பொது இடங்கள் வர்த்தக நிலையங்கள் என நாடு முழுவதும் பரவலாக “தன்மானத் தமிழர் படை”
என்ற பெயரில் ரஜனியையும் காலாவையும் புறக்கணிக்குமாறு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளன.
இதனால் அங்கும் திரைப்படம் வெளியாகுமா என்ற ஐயம் உருவாகி உள்ளது.







http://www.ibctamil.com/actors/80/101545?ref=ibctamil-recommendation

Geen opmerkingen:

Een reactie posten