தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை
ஆகுதியாக்கிய எம்மண்ணின் மைந்தர்களை நினைவு கூர நெதர்லாந்து வாழ் தமிழ்
மக்கள் கலந்து கொண்டார்கள்.
12.45 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பமாகி பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைத்தனர். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து. 01.35 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டு அடுத்து அகவணக்கமும் இடம்பெற்றது. 01.37இற்கு எங்கள் காவியநாயகர்களுக்கு மாவீரர் குடும்பத்தினர் ஈகைச்சுடரேற்றலை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து அந்த சூரியப் புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவினர் தமது எழுச்சிகானங்களால் எம்கார்த்திகைப் பூக்களுக்குவணக்கம் செலுத்தினர் அதனைத் தொடர்ந்துஎழுச்சிநடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பனவும் வெகுசிறப்பாக இடம்பெற்றன. இப்புனிதநன்னாளில் தலைவன் வழியில் மாவீரர் அடி தொடர்ந்து அவர் கனவை நனவாக்குவோம் என்று அனைவரும் எழுந்து நின்று உரத்தகுரலில் உறுதியெடுத்துக் கொண்டனர்.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பிக்கமிகு உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு இறுதியாக தமிழீழ தேசிய கையேந்தலைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்றபாடல் அனைவரும்
எழுந்து நின்று கைதட்டி உணர்வுடன் பாடிசுமார் 20:00 மணியளவில் நிகழ்வுகள் நிறைவு பெற, அனைத்து தமிழ் உறவுகளும் அமைதியாக எம் மண்ணின் மைந்தர்களின் நினைவுகளை தம் நெஞ்சிலே சுமந்த வண்ணம் அமைதியாக கலைந்து செல்ல நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

http://www.tamilwin.com/show-RUmtzBRcSWmp4I.html
Geen opmerkingen:
Een reactie posten