புலம்பெயர்வாளர்கள் தங்களுக்குள் உதவி செய்து கொள்வது அல்லது ஏனைய அகதிகளுக்கு உதவி செய்வது என்பன சட்டவிரோத ஆட்கடத்தல் என்ற தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கனேடிய உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கை அகதிகளை சட்டவிரோத குடியேறிகள் என்ற வகையில் தடுத்து வைக்கும் கனேடிய சட்டத்தின் பகுதிகள், சர்வதேச அகதி சட்டங்களை புறந்தள்ளும் வகையி;ல் அமைந்துள்ளதாகவும் கனடாவின் கனேடிய உயர்நீதிமன்றத்தில் அந்த நாட்டின் பிரதம நீதியரசர் பெவரெலி மிச்செலின் தெரிவித்துள்ளார்.
2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் கனடாவுக்கு அகதிகளுடன் சென்ற ஒசியன் லேடி மற்றும் சன்சீ கப்பல் என்பவை தொடர்பிலான வழக்கு விசாரணையின் போதே பிரதம நீதியரசர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சன்சீ கப்பலை பொறுத்தவரையில் தாய்லாந்தில் இருந்து புறப்பட்ட பின்னர் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமது உறவுகள் மற்றும் ஏனைய அகதிகளை பராமரித்தவர்கள் கடத்தலுக்கு உதவினார்கள் என்று குற்றம் சுமத்தப்படுவது சட்டத்துக்கு புறம்பானது என்று பிரதமநீதியரசர்ää குறிப்பிட்டுள்ளார்
கப்பலில் பணியாற்றியவர்கள் மற்றும் குளிரில் நடுங்கும் மகளுக்கு போர்வையை போர்த்திவிட்ட தந்தை, உணவு வழங்கியவர்கள் என்போர் ஆட்கடத்தல்களுக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ஹாப்பரின் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட நீதிமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை சர்வதேச அகதிகள் சட்டத்தை புறக்கணிக்கும் செயல் என்றும் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சன் சீ கப்பல் ஊடாக 2010ம் ஆண்டு கனடாவுக்கு சென்ற சுமார் 500 அகதிகளும் ஓசியன் லேடி கப்பல் அகதிகளும் கனடாவினால் வதிவிடவியலாளர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு 76 அகதிகளை ஏற்றிச்சென்றமைக்காக பணம் பெற்றார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேர் கடத்தல்காரர்களாக கருதி விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtzBRdSWmqyF.html
Geen opmerkingen:
Een reactie posten