தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 september 2012

கோதபாய ராஜபக்‌ஷ ஒரு மனநோயாளி - விளக்குகிறார் மனோதத்துவ நிபுணர் பிரையன் செனவிரத்ன (வீடியோ இணைப்பு)

இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மருத்துவர் பிரையன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மைத்துனரான இவர் ஒரு மனோதத்துவ நிபுணர் ஆவார்.

கோத்தபாய ஒருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரயன் தெரிவித்துள்ளார். இதனால் கோத்தபாய மிகவும் ஆத்திரமடைந்து காணப்படுகிறார் என அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இன்னும் விடுதலைப் புலிகள் இருப்பதாக இவர் கனவு காண்பதாகவும், புலிகள் ஒரு நாள் மீண்டும் வருவார்கள் என்றும், தற்போது கூட நாட்டில் புலிகள் ஆயுதத்துடன் நடமாடுகின்றார்கள் என்று கூறிவரும் கோத்தபாய, ஒரு பிரம்மையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

புலிகளை அழிக்கிறேன், அழிக்கிறேன் என்று அடிக்கடி கூறிவந்த கோத்தபாய, புலிகளை வெற்றிகொண்ட பின்னரும் அவர்களுடன் ஆயுதப் போராட்டம் இன்னமும் நடைபெறுவதாகவும், யார் என்ன கதைத்தாலும் உடனே ஆத்திரமடையும் கோத்தபாய ராகபக்‌ஷ தனிமையில் இருந்து எதையோ யோசித்தவாறு ஒவ்வொரு நாட்களையும் நகர்த்துவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் தம்மை தாக்கக்கூடும் எனவும், தமது குடும்பத்துக்கு இதனால் பல ஆபத்துகள் வர இருப்பதாகவும் கோத்தபாய அடிக்கடி கூறிவருகிறார். அதுமட்டுமல்லாது புலிகள் விமானம் மூலம் வந்து இலங்கை மீது தாக்குதல் நடத்திவிட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறி, வான் படையை பலப்படுத்தவும், மற்றும் கடற்படையைப் பலப்படுத்தவேண்டும் என்று இவர் அடிக்கடி கூறிவருவதாகச் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற செயற்பாடுகளை வைத்து பார்க்கும்போது கோத்தபாய நிச்சயமாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார் நிபுணர் பிரையன் செனவிரத்ன.

2006ம் ஆண்டு விடுதலைப் புலிகள் கோத்தபாய ராஜபக்‌ஷ மீது நடாத்திய தற்கொலைத் தாக்குதலின்போது தலையில் காயமடைந்த கோத்தபாய மனநிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளார் என அவரது குடும்ப நண்பர் ஒருவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் உள்ள ப்ரிமென்ரல் டவுன் ஹோல் வரவேற்பறையில் “இலங்கை ஈழம் மனித உரிமைகள்’’ பற்றிய நீண்ட கருத்தரங்கு ஒன்றை நிகழ்த்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

08 Sep 2012

Geen opmerkingen:

Een reactie posten