அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகளுள் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் அந்நாட்டில் பிரச்சினை என்பது தெளிவாக தெரிகின்றது என வழக்கறிஞர் சாரா நாதன் தெரிவித்தார்.
மேலும், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுபவர்களை விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு அதிக சித்திரவதை செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும் இலங்கையில் நடைபெறுகின்றது என தெரியவருகின்றது என சாரா நாதன் தெரிவிக்கையில்,
அதனை உடனே மறுத்த அட்மிரல் திஸர சமரசிங்க, அப்படி எதுவும் நடைபெறவில்லை எனவும், சாராவின் வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வளித்து மீள்குடியேற்றம் செய்து அவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டிருக்கும் நிலையில் நாடு திரும்பும் தஞ்சக் கோரிக்கையாளர்களை நாம் என்ன செய்வோம் என கொஞ்சம் ஆவேசமாக கேட்டிருந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பதினெண்மரையும் ஒரு பரீட்சார்த்தமாக தான் அனுப்பியுள்ளோம் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten