தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 augustus 2012

கால்நூற்றாண்டைக் கடந்த இலங்கை இந்திய ஒப்பந்தமும் ஹரிகரனின் கருத்தும்!



ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா ஆகியோருக்கு இடையே 1987 யூலை 29 அன்று கைச்சாத்திடப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு தற்போது

  25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலை என்ன? அதுபற்றி 1987-90 வரையான காலப்பகுதியில், சிறிலங்காவில் இந்தியப் படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அதில் பணியாற்றிய கேணல் ஹரிகரன் [Col. R. Hariharan] மதிப்பீடு செய்கிறார்.
 
கேள்வி:
1987 யூலை 29 அன்று ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் பிரதிநிதித்துவமானது இராஜதந்திர ரீதியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக தற்போது பலர் கருதுகின்றனர். 1987-90 வரையான காலப்பகுதியில், இந்தியப் படைகள் கடமையில் ஈடுபட்டிருந்த போது, சிறிலங்காவில் பணியாற்றிய ஒருவர் என்ற ரீதியில் இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?
 
பதில்:
புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காத் தமிழர்களில் சிலர், ராஜீவ் காந்தி – ஜெயவர்த்தனா ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் பிரதிநிதித்துவமானது இராஜதந்திர ரீதியில் தோல்வியடைந்ததாக கருதுகிறார்கள். இந்த உடன்பாடானது இராஜதந்திர முயற்சியை விட மூலோபாய பிரதிநிதித்துவத்தையே அதிகம் கொண்டுள்ளது. சிறிலங்கப் படைகள் வடக்கிலிருந்து பின்வாங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஏற்றுக்கொண்டதன் பின்னரே இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
 
முற்றுகையிடப்பட்டிருந்த யாழ் மக்களுக்கு தேவையான உணவுப் பொதிகளை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் வீசின. இது பூமாலை நடவடிக்கை எனப் பெயர் சூட்டப்பட்டது. இப்பூமாலை நடவடிக்கையைத் தொடர்ந்து வேறெந்த வெளித் தரப்பினதும் உதவியைப் பெறமுடியாது என உணர்ந்து கொண்ட ஜெயவர்த்தனா, இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். இந்தியாவின் உதவியை சிறிலங்கா தட்டிக்கழித்திருந்தால், இந்தியாவானது இந்த விடயத்தில் தனது பலத்தைப் பயன்படுத்துவதில் எந்தவொரு தயக்கத்தையும் காண்பித்திருக்காது.
 
இந்நடவடிக்கையானது இந்திய தேசம் சிறிலங்காவில் பிறிதொரு பங்களாதேசத்தைச் சந்திப்பதுடன், சுதந்திர தமிழீழத்தை உருவாக்கும் என்பது சிறிலங்காத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது, ஐக்கிய சிறிலங்காவிற்கு இந்தியா தனது ஆதரவை வழங்குவதற்கான உறுதிமொழியாக காணப்பட்டது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்குவது தொடர்பில் சிறிலங்கா அரசுக்கு மேலும் கால அவகாசத்தை உருவாக்குவதன் மூலம் சுதந்திர ஈழத்திற்கான போராட்டத்தை தணிக்கவும் உதவியது. இதனால் சிறிலங்காத் தமிழர்களில் ஒரு சாரார் இந்தியாவின் செயலால் ஆத்திரமுற்றனர்.
 
இந்த உடன்பாடானது இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. முதலாவதாக, இந்த உடன்பாடு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பனிப்போரைத் தழுவியதாகும். அதாவது பனிப்போர் காலப்பகுதியில் இந்தியாவின் நட்பு நாடாக விளங்கிய ஆப்கானிஸ்தானிவ் சோவியத் யூனியன் கிளர்ச்சிப் போரை மேற்கொண்டிருந்த போது, அமெரிக்காவானது சிறிலங்காவில் தாக்குதலை மேற்கொள்வதற்கான முயற்சியில் இறங்கியிருந்தது. இந்த உடன்பாட்டின் மறுபகுதியானது, சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர்கள் பெரும்பான்மை மக்கள் போன்று உரிமைகள் பெற்று வாழ்வதை உறுதிப்படுத்துவதுடன் தொடர்புபட்டதாகும். அமெரிக்காவானது சிறிலங்காவில் தனது தடத்தைப் பதிப்பதை இந்த உடன்பாடு தடுக்கின்றது.
 
தமிழர் பிரச்சினை தொடர்பில் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதில் இந்த உடன்பாடு தவறியுள்ளதாயினும், சிறிலங்கா அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, வடகிழக்கு மாகாணம் உருவாவதற்கான வழியை இந்த உடன்பாடு வகுத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றுசேர்த்து வடகிழக்கு மாகாணத்தை உருவாக்குவதற்கு கருத்து வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என இந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் தெளிவின்மை காணப்படுகின்றது. இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்;ட இரு தரப்புக்களாலும் வாய்மொழி மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
 
தமிழ் சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆனால் தமிழ் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் இந்த உடன்பாட்டில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களின் உரிமை இதில் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தமிழ் ஆயுதக் குழுக்களும், தமிழ் அரசியற் கட்சிகளும் தமது போராட்டத்தை நடாத்திச் செல்வதற்கு இந்தியாவின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் இத்தமிழ் பிரதிநிதிகள் தமது சொந்தக் கருத்துக்களுக்க அப்பால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தியாவுடன் மிக நெருங்கிய அரசியற் தொடர்பைக் கொண்டிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி [TULF], இந்த உடன்படிக்கை தொடர்பில் சில தெளிவின்மையைக் கொண்டிருந்த போதிலும், இதனை ஏற்றுக்கொண்டது. இதுபோன்றே, TELO,EPRLF,PLOTE ஆகிய மூன்று மிகப் பெரிய தமிழ் ஆயுதக் குழுக்களும் இதனை ஏற்றுக்கொண்டனர்.
 
ஆனால் இந்த உடன்பாட்டை பிரபாகரன் ஏற்றுக் கொள்வதற்கான நிர்ப்பந்தத்தை வழங்க வேண்டியிருந்தது. அவர் இந்தியாவின் நோக்கம் தொடர்பில் சந்தேகம் கொண்டிருந்தார். ஏனையவர்களுடன் பிரபாகரனை இணைப்பதற்கு, பிரபாகரனுடனான எம்.ஜி.ஆரின் செல்வாக்கை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. சிங்கள பெரும்பான்மையினர் இந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராய்ந்து அதிருப்தி கொள்வதற்கான கால அவகாசத்தை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனா வழங்கவில்லை.
 
தற்போது இதனை மீட்டுப் பார்க்கையில், இவ்உடன்படிக்கை தொடர்பாக சிறிலங்கர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகும் என்பதை ஜெயவர்த்தனா எதிர்பார்த்திருந்ததை என்னால் உணரமுடிகிறது. சிறிலங்கா இராணுவத்தினரும் இந்த உடன்படிக்கை தொடர்பில் திருப்தி கொண்டிருக்கவில்லை எனக் கூறப்பட்டது. தனக்கெதிராக ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுப்பதற்காகவே இந்தியப் படைகள் சிறிலங்காவுக்கு வரவேண்டும் என்பதை ஜெயவர்த்தனா விரும்பியிருந்தார்.
 
இந்த அடிப்படையில் ஏற்பட்ட பேரம்பேசலின் விளைவாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகளை யுத்தத்தில் ஈடுபடுத்துவதில் ஜெயவர்த்தனா செயற்பட்டார். ஜே.வி.பி கிளர்ச்சியை முறியடிப்பதற்கும் ஜெயவர்த்தனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். இந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதில் சிறிலங்காவும் தவறிழைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கில், இரு நாட்டுத் தலைவர்களும் இந்த உடன்படிக்கையின் பொதுநோக்கத்தை நிறைவுபடுத்துவதற்குப் பதிலாக தமது சொந்த நோக்கை அடைந்தகொள்வதற்காகவே இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.
 
கேள்வி:
உண்மை நிலைப்பாடு தொடர்பாக ஆராய்ந்து கொண்ட இந்திய இராணுவத்தினர், இந்த உடன்படிக்கையை மிக வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் ஏன் எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை?
 
பதில்:
இந்திய இராணுவம் என்பது இந்திய அரசாங்கத்தின் கருவியாகும். சிறிலங்கா இராணுவத்திற்கும், தமிழ் இராணுவத்திற்கும் இடையில் ‘மோதல் தவிர்ப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவதை’ மட்டுமே இந்திய இராணுவமானது தனது மட்டுப்படுத்தப்பட்ட ஆணையாகக் கொண்டிருந்தது. இந்த உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று தமிழ் மக்களுக்கான சுயாட்சியை சிறிலங்கா வழங்கமுடியும். தான் இந்தியாவுக்கு கட்டுப்பட மாட்டேன் என்பதை சிறிலங்காவுக்கு திரும்பியிருந்த பிரபாகரனால் வழங்கப்பட்ட சுதுமலைத் தீர்மானத்திலிருந்து அறியமுடிந்தது. ஆயுதக் கையளிப்பின் போது புலிகள் அமைப்பு பயன்படுத்த முடியாத ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். இதன் மூலம் ஆயுதக் கையளிப்பு விடயத்தில், இவர்கள் ஏனைய தமிழ இராணுவ அமைப்புக்கள் போல் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள் என்பதை அறியமுடிந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதங்களை தூக்குவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னர் புலிகள் அமைப்பு ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களை படுகொலை செய்யத் தொடங்கினர். இதன் விளைவாக, இடைக்கால நிர்வாகம் என்பது செயலற்றதாகியது. இது இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆபத்தை எதிர்நோக்குவதை தெளிவாக காண்பித்தது.
 
இந்திய புலனாய்வு அமைப்புக்கள் [இராணுவப் புலனாய்வுப் பிரிவு நீங்கலாக] இந்த உடன்படிக்கையை பிரபாகரன் ஏற்றுக்கொள்வதற்கான உந்துதலை வழங்கமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சில சலுகைகளை வழங்குமாறும், இந்தி-இலங்கை ஒப்பந்தம் தொடர்பில் பிரபாகரன் நம்பிக்கை கொள்வதற்கான சில ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் இந்திய புலனாய்வு அமைப்புக்கள், இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை வழங்கியிருக்க முடியும். பிரபாகரனின் பிடிவாதம் தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புக்கள் குறைவாக மதிப்பீடு செய்திருந்தனர் என்பதை மட்டுமே என்னால் கருதமுடிகிறது. இந்த உடன்படிக்கையின் வெற்றிக்கு புலிகள் மிகப் பெரிய தடையாக இருந்திருப்பார்கள் என்பதை எவரும் நியாயப்படுத்த முடியாது. இந்திய அரசாங்கம், புலனாய்வு அமைப்புக்கள், மற்றும் தமிழீழத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுதக்குழுவை வழிநடாத்திய பிரபாகரனின் ஒற்றை மனப்போக்கை புரிந்து கொள்ளத் தவறிய இராணுவத்தினர் போன்ற பலரும் இந்திய-இலங்கை ஒப்பந்ததின் தோல்விக்கு காரணமாக உள்ளனர்.
 
கேள்வி:
இந்த உடன்படிக்கைக்கு மீண்டும் புத்துயிர் வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்றனவா?
 
பதில்:
இந்த உடன்படிக்கை வரையப்பட்டு நீண்ட காலமான நிலையிலும், இது செயற்பாட்டிலிருக்கவில்லை. மாகாண சபைகளை உருவாக்கி மக்களுக்கு சுயாட்சியை வழங்குவதற்கேற்ற வகையில் 13வது திருத்தச் சட்டம் வரையப்பட்டுள்ளது. முற்றுமுழுதாக நிறைவேற்றவிட்டாலும் கூட, தமிழ் மக்கள் ஐந்து பத்தாண்டுகால தமது அரசியல் போராட்டத்தை குறிப்பாக மே 2009ல் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தொடர்வதற்கான கருவியாக 13வது திருத்தச்சட்டம் அமைந்துள்ளது.
 
கேள்வி:
இந்த உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்துவதில் சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகியன இணைந்து செயலாற்றுவதுடன், தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை வென்றெடுக்க வேண்டும். இந்நிலையில் இந்தியாவால் இதனை நிறைவேற்ற முடியுமா?
 
பதில்:
சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளாக அமைதி நிலவுகின்ற போதிலும், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு சிறிலங்காவுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை இதயசுத்தியுடன் முன்னெடுப்பது தொடர்பில் சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் புரிந்துணர்வு ஒன்று ஏற்படுமிடத்து இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும். 1971ல் பங்களாதேசத்துடன் திருமதி இந்திரா காந்தி உடன்பாட்டை மேற்கொண்டார். அதேபோன்று 1987ல் ராஜீவ், சிறிலங்காவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஆனால் தற்போது இந்தச் சவால்களை முன்னெடுப்பதில் ஆர்வங்கொண்ட இந்தியத் தலைவர்கள் ஒருவரையும்.

Geen opmerkingen:

Een reactie posten