தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 augustus 2012

20ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு


எச்சரிக்கை இளகிய இதயம் படைத்தோர் இதைதவிர்ப்பது நல்லது (வீடியோ இணைப்பு)

20ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு – எச்சரிக்கை இளகிய இதயம் படைத்தோர் இதைதவிர்ப்பது நல்லது (வீடியோ இணைப்பு)
துருக்கியின் ஒட்டோமான் இராஜ்யத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சுமார் 10 இலட்சம் ஆர்மேனியர்கள் சீரியா பாலைவனம் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
சொல்லொனாத் துன்பம் நிறைந்த அந்தப் பயணத்தை Death march அதாவது ‘மரணத்தை நோக்கிய பயணம்” என்று வரலாற்று ஆய்வார்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அந்தப் பயணத்தின் பொழுது படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், சித்திரவதைகள் என்று அனைத்துமே அளவுக்கு அதிகமாக இடம்பெற்றன.
மாதக்கணக்காக இடம்பெற்ற அந்த நடைபயணத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள், நடக்கமுடியாமல் தடுமாறியவர்கள், விழுந்தவர்கள் அனைவருமே இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
பயணத்தின் இடைநடுவே ஆர்மேனிய இளம் பெண்கள் ஆடைகள் எதுவும் இன்றிப் பயணம் செய்யவேண்டும் என்று துருக்கியப் படை வீரர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அழகான இளம்பெண்கள் போர் முனைகளில் உள்ள துருக்கியப்படை வீரர்களின் பாலியல் தேவைகளைப் பூத்தி செய்வதற்காக பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டார்கள்.
உலகத்தில் இடம்பெற்ற இன அழிப்புக்கள் (Genocide ) வரிசையில் 20ம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு என்று அடையாளப்படுத்தப்படுகின்ற ஆர்மேனிய மக்கள் மீது துருக்கி மேற்கொண்ட இன அழிப்பு பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.
http://asrilanka.com/2012/07/31/4893

Geen opmerkingen:

Een reactie posten