18.05.2009 மாலை 5 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இப் புகைப்படங்கள் இத் தேதியில் எடுக்கப்பட்டது என்பதனைக் காட்டும் மீட்டா டாக் ஆதாரங்களும் உண்டு ! முள்ளிவாய்காலில் 58ம் படைப்பிரிவினரும், 53ம் படைப்பிரிவினரும் சந்தித்த தேதி 18.05.2009 மாலையாகும். இதன்போதே இலங்கை இராணுவத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கடற்கரைப் பகுதியில் நிற்கவேண்டிய இராணுவத்தினர், இவ்விடத்தில் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். 53ம் படைப்பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் இப்படையணியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு குழுவும், இனந்தெரியாத இப் பிரதேசத்தில் புலிகளின் உறுப்பினர்களைக் கொல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை இப் புகைப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
1ம் படத்தில் காணப்படும் உயர் அதிகாரி, அவரது சீருடையை உற்றுநோக்கினால் அதில் 53 வது படையணிக்கான இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம். ரேடியோவில் எவருடனோ அவர் தொடர்பில் உள்ளார். இவர் தனது உயரதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அடுத்து என்ன செய்வது என்பதனை திட்டமிடும் படம் இது. இப் படத்தில் விடுதலைப் புலிகளின் உடலங்கள் எதுவும் இல்லை. 2ம் படத்தை உற்றுநோக்கினால், அதில் 5 உடலங்கள் உள்ளது. இவ்வுடலங்களில் ஒன்று பொதுமக்களின் உடலமாக இருக்கவேண்டும். கடைசியாக கறுப்பு நிற கால்சட்டையுடன் காணப்படும் உடலத்தை உற்றுநோக்குங்கள். அவர் கால்கள் கட்டப்பட்டு இருப்பதை காணமுடியும் !
அதாவது இறந்த உடலம் ஒன்றுக்கு இவர்கள் கால் கட்டுப் போடவில்லை. அப்படியான ஒரு தேவை இவர்களுக்கு இருந்திருக்கவில்லை. உயிருடன் பிடித்த போராளி இல்லையேல் பொதுமகன் ஒருவரையே இலங்கை இராணுவத்தின் 53 வது படைப் பிரிவினர் கொன்றுள்ளனர். இவர்கள் யார் யார் என்பது தொடர்பாக, ஒரு நோட் புத்தகத்தில் எழுதப்படுவதும், இவர்களை இராணுவம் முன்னரே அறிந்திருந்ததும் போல, இவர்கள் நடவடிக்கை தெரிவதையும் படத்தில் காணலாம். அதாவது முள்ளிவாய்க்கால் பகுதியில் சரண்டைந்த இல்லையேல் உயிருடன் பிடிக்கப்பட்ட சிலரை இவ்வாறு கொண்டு சென்று சுட்டுச் சாவடித்துள்ளனர் இலங்கை இராணுவத்தினர். காலத்தின் தேவை கருதி இப் புகைப்படங்களை நாம் வெளியிட்டுள்ளோம் !
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கிக்கொண்டு இருக்கும்வேளையில், பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பெருவாரியாகக் கலந்துகொள்ளவேண்டும் ! சில நாடிகளில் குழப்பகரமான சூழ் நிலை காணப்படுவது யாவரும் அறிந்ததே. இதனை இட்டு மக்கள் சலிப்படையத் தேவையில்லை. பிரித்தானியாவில் கடந்த முறை இடம்பெற்றதுபோல, இம் முறையும் லண்டன் நகர மையப்பகுதியான trafalgar square இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நடக்கவிருக்கிறது.
Geen opmerkingen:
Een reactie posten