தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 8 november 2011

இலங்கையில் ஐந்து செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டன – அரசாங்கம்

5 news websites blocked in SriLanka : Government

Canadian indicted in terror case



இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் ஐந்து  செய்தி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தனிப்பட்டவர்களின் கீர்த்திக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டமையை அடுத்தே இந்த இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாக ஊடக அமைச்சின் செயலாளர் டபிள்யூ பி கனேகல தெரிவித்துள்ளார்.
எனினும் ஊடக அமைப்புகள் இந்த செயலை கண்டித்துள்ளன.
இலங்கையின் சட்டப்படி, அரசியல்வாதிகளை விமர்சிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது. எனினும் ஊடகம் ஒன்றுக்கு எதிராக அபகீர்த்தி குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்று ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
லங்கா இ நியூஸ்.கொம், ஸ்ரீலங்காமிரர்.கொம், ஸ்ரீலங்கா காடியன்.கொம், பப்பராசிகொசிப்9.கொம்,லங்காவேநியுஸ்.கொம் ஆகிய ஐந்து இணையத்தளங்களுமே முடக்கப்பட்டுள்ளன.
குறித்த செய்தி இணையத்தளங்கள், குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் அமைச்சர்களை தனிப்பட்ட ரீதியில் விமர்ச்சித்து வந்தவை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Geen opmerkingen:

Een reactie posten