தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 maart 2021

நல்லூர் ஆலய வளாக சம்பவம் தொடர்பில் நிர்வாகம் விளக்கம்

 

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் கழிவு ஆயில் ஊற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

நல்லூர் ஆலய சூழலில் கலாசாரத்தை பேணும் வகையிலேயே கழிவு ஓயில் ஊற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது விசமிகள் செயல் என வெளியாகிய செய்தியை மறுக்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலய தரப்பு, இளையோர் இணை தேர் முட்டிப்பகுதியில் வந்து அமர்வதைத் தடுக்கும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்துள்ளது.

நல்லூர் ஆலய சுழலில் கலாசாரத்தை பேணும் வகையில் இளையோர் இணை அமர்வதைத் தடுக்க பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் தடுக்க முடியாத நிலையில் கழிவு ஒயில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று இந்த நாசகார செயலை அவர்கள் செய்துள்ளனர்.

அதன்படி நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு ஆயிலை விசமிகள் ஊற்றிவைத்துள்ளனர்.

இந்துக்கள் மிகவும் புனிதமாக போற்றும் நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் இந்த செயலுக்கு சமூகஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நல்லூர் ஆலயத்தின் புனித்தன்மையை கெடுப்பதற்காக இவ்வாறு கழிவு ஆயிலை ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten