சிறிலங்காவின் படையினரால் கைதுசெய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டு, அல்லது அவர்களது உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா கடற்படையின் தளங்களில் இரகசியமாக பல தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதான விடயம் ஆதாரங்களுடன் வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
International Truthand Justice Projrct (ITJP) என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில்இ சிறிலங்கா கடற்படை முகாம்களில் பல இரகசிய நிலக்கீழ் சித்திரவதை முகாம்கள் இருந்து வந்த விடயத்தை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தது.
திருகோணமலையில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் பல இளைஞர்கள தடுத்துவைக்கப்பட்டிருந்த இரகசிய சித்திரவதை முகாம்களுக்கு கோத்தபாய ராஜபக்ச பல தடவைகள் நேரடியாக விஜயம்செய்திருந்ததையும் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது ITJPஅமைப்பு.
இந்த விடயங்கள் பற்றி பார்வையைச் செலுத்துகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
Geen opmerkingen:
Een reactie posten