தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 maart 2016

பிரான்ஸில் ஈழத்தமிழர் மீது தாக்குதல்!



பிரான்ஸில் வைத்து ஈழத்தமிழர் இருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தெரியவருவதாவது,
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்தன.
இந்நிலையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரின் வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று  அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரும், விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளை தடுக்கும் நோக்கில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவே தெரியவருகிறது.
அவர்  மீது குறித்த விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் தாக்குதல் தாரிகளை  பிரான்ஸ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களை மோசமாகத் தாக்கிய, இந்தக் கும்பலின் வன்முறையாளன் ஒருவர், சற்று முன்னதாகக் பிரான்ஸ் காவற்துறையினரால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை இது தொடபர்னா மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten