தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 november 2013

நெதர்லாந்தி​ல் ஒரு சாராரின் குடும்ப நிகழ்வாக இடம்பெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்!!


உண்மையில் மாவீரர் நமக்காக உயிரை பலியிட்டவர்கள் என்ற அக்கறையில் சென்ற பலர் படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை,காரணம் வினாவிய போது அப்படங்களை கொடுத்து அகதி அந்தஸ்து பெற முயல்கிறார்களாம் தமிழர்!நமக்காக நமது தமிழுக்காக ,தமிழ் ஈழத்துக்காக உயிரை தியாகித்தோர் பெயரில் தமிழருக்கு அகதித் தஞ்சம் கிடைப்பது குற்றமா?எதற்காக இப்படி கேவலப்படுத்துகிறார்கள்?தங்களுக்கு கிடைத்தது மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்ற கெட்ட எண்ணமா?
மே இலும் சில ஊடககாரர்கள் என்னை வெருட்டி கேள்விகளால் துளைத்தனர்!நாட்டுக்கு புதிதான அவர்கள் என்னை யார்,எங்கு இருக்கிறேன் என்று விசாரணை செய்ததுடன் நம்பாமல் உங்களாத்தான் இங்கு மக்கள் வருவதில்லை,நீங்கள் படமெடுப்பதால் பயப்பிடுகிறார்கள்,யார் அனுமதித்து படமெடுக்கிறீர்கள் என்று விரட்டினர்,ஊடகங்களுக்கே படமெடுக்க அனுமதியாம்,அவர்கள் நெதர்லாந்தில் அனுமதி பெற்ற ஊடகத்தினரா? பதிவுக்காக வந்த பாபு என்பவரால் இதற்கு விடை தர முடியுமா?உங்கள் அடக்கு முறை இனி எங்கும் செல்லாது இப்படியே சென்றால் விடுதலைக்கு உண்மையில் போராடியோர் சாபம் பணம் சம்பாதிக்கும்,நண்பர்களை செய்தியாக்கி உயர்த்தும் இவர்களை அழித்தே தீரும் என்பதுடன் மாவீரர் தினம் ஒரு கேலிக்கூத்தாவதை தவிர்க்க முடியாத நிலை உண்டாகி தடை செய்யப்படும் நிலை உருவாகும்,அதற்கு காரணம் இந்த பொய் ஊடகங்களே!!

நாங்களும் அப்படி பார்த்தால் ஊடகமே!

இப்படிக்கு 
சில்வண்டு!!

நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் நேற்று வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது.
தமிழீழ விடிவிற்காய் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மண்ணின் மைந்தர்களை நினைவு கூர இவ்வாண்டு வழமையை விட கூடுதலான மக்கள் கலந்து கொண்டார்கள்.
12.45இற்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி பொதுச்சுடரினை மாவீரர் குடும்பத்தினர் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து, தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின் எமது தேசியத்தலைவரின் உரைத்தொகுப்பு இடம்பெற்றது.
பின் மாவீரர்நாள் அறிக்கை வாசிக்கப்பட்டு 01.35 இற்கு மணியொலி எழுப்பப் பட்டு அடுத்து அகவணக்கமும் அதனைத்தொடர்ந்து, 01.37இற்கு எங்கள் காவிய நாயகர்களுக்கு மாவிரர் குடும்பத்தினர் ஈகைச்சுடரேற்ற தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் திரளாக வந்து அந்த சூரியப் புதல்வர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தின்ர்.
தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சி கானங்களும் அதனைத் தொடர்ந்து எழுச்சி நடனங்கள் எழுச்சிக் கவிதைகள் சிறப்புரை என்பனவும் அத்துடன் எம் தேசத்தின் புதல்வர்கள் மீது ஒரு இறுவட்டும் வெளியிடப்பட்டது.
அத்துடன் நெதர்லாந்து தமிழ் இளையோர்களால் காட்சியும் கருத்தும் என நெதர்லாந்து மொழியில் ஓர் நிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பிக்க மிகு உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டு இறுதியாக தமிழீழ தேசியக்கொடி கேயேற்றலைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி உணர்வுடன் பாடி சுமார் 19.00 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுற்றன.
மேலுள்ள படங்கள் இந்த ஊடகத்துக்கு வேண்டியோர் ,ஊடக தர்மம் எங்கே??
நமக்கு கிடைத்த மேலதிக படங்கள் கீழே!



Geen opmerkingen:

Een reactie posten