தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 februari 2012

இலங்கை இராணுவத்தின் களவுகள்: நேரடியாக அம்பலம் !


இலங்கை இராணுவத்தினர் புலிகளை யுத்தரீதியாக வெற்றிகொண்ட பின்னர், வன்னி பெருநிலப்பரப்பில் மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளில் பெரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டனர் எனப் பல செய்திகள் வெளிவந்தது யாவரும் அறிந்ததே. பல்லாயிரக்கணக்கான மோட்டார் சயிக்கிள்கள், வாகனங்கள் மற்றும் டிரக்டர்கள் என்பனவற்றை மக்கள் அந்தந்த இடங்களில் விட்டுச் சென்றுவிட்டர். பின்னர் அவர்களில் பலர் கொல்லப்பட்டும், மீதமுள்ள மக்கள் அனைவரும் தடுப்பு முகாம்களுக்கும் சென்றுவிட்டனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இராணுவத்தினர் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி வாய்ந்த பொருட்கள் இவர்களால் சூறையாடப்பட்டது.

இருப்பினும் அதற்கான சாட்சியங்கள் போதிய அளவு இருக்கவில்லை. ஆனால் இங்கே நீங்கள் புகைப்படத்தைப் பாருங்கள். இலங்கை இராணுவம் சிலாவத்துறையை கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமான மீன் பிடிப் படகுகளை ஏற்றிச் செல்கின்றனர். இதற்காக டிரக்டர்களைக் கொண்டுவந்து அதில் இப் படகுகளை ஏற்றி தென்னிலங்கைக்குக் கொண்டு செல்லும் வழியில் தற்செயலாக இப் புகைப்படம் எடுக்கப்பட்டது. யாராவது இதுதொடர்பாகக் கேட்டால் உரியவர்களிடம் கொண்டுபோய் கொடுக்கவே இதனைக் கொண்டுசெல்கிறோம் என்று இராணுவம் சொல்லியிருக்கும். இதற்கு மேல் மக்களால் என்ன பேசமுடியும் ?


Geen opmerkingen:

Een reactie posten