தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 december 2011

ஒளிப்படங்கள், காணொலிகள் சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தத்திற்கு வழிவகுக்கும்

[ திங்கட்கிழமை, 12 டிசெம்பர் 2011, 12:48.18 PM GMT ] [ புதினப்பலகை ]
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது அரசாங்கப் படைகளால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், அங்கு இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு மேலும் சாட்சியம் வழங்குவதாக அமைந்துள்ளன.
இவ்வாறு The Independent [Friday, 9 December 2011] என்னும் பிரித்தானிய நாளேட்டில் Rachael Cloughton எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒளிப்படமானது மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறியுள்ளது. அதேவேளையில், முன்னர் யுத்த ஆவணத்திலிருந்து ஒளிப்படமானது கிட்டத்தட்ட நீக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒளிப்படக் கருவிகளின் பாவனை தற்போது அதிகரித்துக் காணப்படுவதால் ஒளிப்படத்தை காட்சிப் பதிவாக்கும் ஒளிப்படப் பதிவாளருக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலான இடைவெளி மிகக் குறைவாகவே இருந்து வருகின்றது.

ஒளிப்படக் கருவியைப் பயன்படுத்துவது பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளது. அதாவது சிறைச்சாலையில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் அங்கு எவ்வாறான பயங்கரச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை உலகிற்குச் சித்தரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை ஒளிப்படமாக எடுத்து அவற்றை இஸ்ரேலிய சிறைக்கூடங்களில் வாழும் கைதிகளுக்கு காண்பிக்கப்படுகின்றது. இவ்வாறு காண்பிக்கப்படுவதானது அச்சிறைக் கைதிகளை சித்திரவதைப்படுத்தும் ஒரு முறைமையாகக் காணப்படுகின்றது.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் போது அரசாங்கப் படைகளால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள், அங்கு இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு மேலும் சாட்சியம் வழங்குவதாக அமைந்துள்ளன.

25 ஆண்டு காலமாக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிப் பகுதியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் கானொலிகள் என்பன சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எதிரியின் நடவடிக்கை மற்றும் வாழ்க்கை தொடர்பாக ஒட்டுமொத்தமாக தெளிவுபடுத்துகின்ற விதமாகவே இவ் ஒளிப்படக் காட்சிகள் அமைந்துள்ளன.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தின் போது இவ்வாறான இழிந்த செயல்களைப் புரிந்த சிறிலங்காப் படையினரின் கைகளில் சிக்குண்டு கிடக்கும் தமிழ் மக்களின் வாழ்வு புறக்கணிக்கப்பட்டும், அலட்சியப்படுத்தப்பட்டும் உள்ளது தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவப் படைகளால் பாலியல் ரீதியாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் ஒளிப்படங்களும் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பெண்களின் உடலங்களை வாகனம் ஒன்றிற்குள் தூக்கி வீசுதல், அவர்களின் உடலங்களை சித்திரவதைப்படுத்துதல், அவற்றைக் குவியலாகப் போடுதல் போன்ற காட்சிகளை சிறிலங்கா இராணுவ வீரர்கள் கையடக்கத் தொலைபேசி ஒன்றில் பதிவாக்கிய காட்சிகளும் அவ் ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளன.

கொல்லப்பட்டபின் உடலங்களை அவமரியாதை செய்யும் போது எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது 'விருது பெற்ற ஆவணக் காட்சிகளில்' பயன்படுத்தப்பட்டதன் மூலம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளால் கொடூரமாக சித்திரவதைப்படுத்தப்படும் காட்சிகளைப் பதிவாக்கியமையானது அதிகார சக்தியின் பிறிதொரு குறியீட்டுச் செயற்பாடாக உள்ளது.

எவ்வாறிருப்பினும், எல்லா ஆயுதங்களைப் போலவே இக்காட்சிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் இவை மிகக் கவனமாகப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியவையாகும். ஒளிப்படத்தின் உறுதித்தன்மையற்ற பண்பு காரணமாக இதன் ஏகபோக உரிமையைப் பேணிக்கொள்ள முடியாது.

தற்போதைய வலையமைப்புக் காலத்தில், ஒளிப்படம் ஒன்றின் பிரதியைப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒளிப்படப் பதிவாளர் சொந்த நோக்கங்கருதி ஒளிப்படங்களை எடுத்திருக்க முடியும்.

ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் வெளியில் கசிந்த போது அவற்றை சனல் 04 தொலைக்காட்சி சேவையினர் சேகரித்துக் கொண்டனர். முன்னர் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை வடிவங்கள் தற்போது அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதாகவும், அநீதி இழைத்தவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கின்ற சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களிற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற அழுத்தம் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது.

தமிழ்ப் புலிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்களிற்கு எந்தவொரு இழப்புக்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் இக்கூற்றுத் தொடர்பாக ஓகஸ்ட்டில் மீளவும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆனால் இது 'மிகச் சிறிய தொகையே' எனவும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின் போது பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் குறைந்த எண்ணிக்கையான பொதுமக்களே கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. ஆனால் இவ்வாறான ஒளிப்படக் காட்சிகள் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரமாக உள்ளபோது சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான அறிவிப்பானது சாத்தியப்பாடற்ற ஒன்றாக உள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் ஆவணக் காட்சிகளை இதுவரையில் பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படமானது பிரித்தானியாவில் ஒரு மில்லியனிற்கு மேற்பட்ட மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதுடன், 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இவ் ஆவணப்படம் பார்வையிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, இந்தியா, டென்மார்க், நோர்வே, பெல்ஜியம் போன்ற நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளிலும் இவ் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக, இக்காட்சிகளை இணையத்திலும் பார்வையிட முடியும்.

இன்னும் பல யுத்தக் காட்சிகள் கடந்த கோடைகாலத்திலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை எல்லாவற்றையும் ஒன்றிணைத்து சனல் 04 தொலைக்காட்சி சேவையானது 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத யுத்தக் குற்றங்கள்' என்ற பிறிதொரு ஆவணப்படத்தைத் தயாரித்து வருவதுடன், அடுத்த ஆண்டில் இது திரையிடப்படும் எனவும் அறியப்படுகின்றது.

இப்புதிய ஆவணப்படக் காட்சிகளும் பொருத்தமான அரசியல் நடவடிக்கையை எடுப்பதற்கும், முழுமையான விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கும் தூண்டுதல் அளிப்பதற்கான சந்தர்ப்பத்தை சனல் 04 தொலைக்காட்சி சேவையினர் வழங்கவுள்ளனர்.

இவ்வாறான விவாதத்திற்குரிய யுத்தக் குற்றங்களிற்கான பிரதான நேரடிச் சாட்சியமாக இப் போர்க் காட்சி அமைந்திருக்கும். மிகத் துரிதமாக மீள மேற்கொள்ளப்பட வேண்டிய சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய உள்ளக விசாரணையை மேற்கொள்ளும் 'கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை' விட இராணுவக் குற்றங்களை மேற்கொள்ளும் ஆவணமாக இது மட்டுமே அமைந்திருக்க முடியும்.
நித்தியபாரதி.

Geen opmerkingen:

Een reactie posten