zaterdag 20 december 2014

அவுஸ்திரேலிய படகு அகதிகளின் நிலைதான் என்ன?



மட்டக்களப்பில் மகிந்தவின் தேர்தல் பிரச்சாரம்! ஒலிபெருக்கிக் கம்பம் விழுந்ததில் 7 பேர் காயம்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 03:03.08 AM GMT ]
மட்டக்களப்பு – காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நிகழ்வில் ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்த கம்பம் சரிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் படுகாயமடைந்தவர்களில் சிறுவர் ஒருவர் காத்தான்குடி தாள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் எனைய 6 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று மாலை ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து இன்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதியினர் மீதே இவ்வாறு ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்த கம்பம் சரிந்து விழுந்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks2.html
அவுஸ்திரேலிய படகு அகதிகளின் நிலைதான் என்ன?
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 03:26.27 AM GMT ]
புகலிடக் கோரிக்கையாளரை அவுஸ்திரேலியா கையாளும் விதம் குறித்து பல்வேறு விமர்சனங்களும், வாதங்களும் இன்றும் தொடர்கின்றன. 2014ம் ஆண்டில் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறோம்.
படகுகளைத் திருப்பி அனுப்புவோம் என்ற அரசின் கொள்கையால் யாரும் வீணாக உயிரிழக்கவில்லை என்று அரசு சொல்கிறது. ஆனால் அது மீள் அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காலிக புகலிட வீசா பலத்த கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறது.
ஒருவருட பூர்த்தியான நிலையில் இந்த ஒரு வருடத்துக்குள் அரசாங்கம் செய்துள்ள நன்மைகள் என்ன தீமைகள் என்ன? அல்லது தொடர்ந்தும் இதுதான் நிலையாக இருக்குமா? குறிப்பாக இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கடைப்பிடிக்கும் கடும்போக்கு தன்மை பற்றி சற்று ஆழமாக பார்ப்போம்.
குடிவரவு அமைசர் மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கம் நடைமுறைப்படுத்திய புதிய கடல் பாதுகாப்பு அணுகுமுறை மூலம் கடத்தல்காரர்களின் குறிக்கோள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதகவும், நடுக்கடலில் உயிர் இழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த கடும்போக்கு கொள்கை நன்மையே தவிர எந்தவிதமான தீமையும் இல்லை என்று மொரிசன் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவுஸ்திரேலியா போன்ற பெரிய நாடுகள் புகலிடம் கோருபவர்களை கட்டாயம் வரவேற்கும் நாடு என்றும் எவர் வேண்டுமென்றாலும் அவுஸ்திரேலியாவில் குடியிருக்க முடியும் என்றும் பல் இனம் சார்ந்த இந்த நாடு குறிப்பாக அகதிகளுக்கு உகந்த நாடு என்று எதிர்க்கட்சி தனது விமர்சனத்தை வெளியிட்ட வண்ணமே இருந்தது.
இருந்த போதிலும் சில மதங்களுக்கு மூன் அவுஸ்திரேலியா அரசாங்கம் குறிப்பாக மொரிசன், இந்தியாவில் இருந்து வந்த இரு படகுகளை நடுக்கடலில் மறித்து வைத்து அவர்களை மாதக் கணக்காக எங்கு இருக்கின்றர்கள் என்பதை மறைத்து வந்தமை அவுஸ்திரேலியா நாட்டுக்கு சர்வதேச அளவில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்ததையும் எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் பாரிய மனித உரிமை மீறல் எனவும் கடல் கொள்ளைக்கு ஒப்பான செயற்பாடு என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி புகலிடம் கோரி வந்தவர்களுக்கு என்ன நடந்து என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை என்றும் இலங்கைக்கு போய் இலங்கை செய்திகள் மூலம் அவுஸ்திரேலியா மக்கள் தெரிந்து கொண்டமை அவுஸ்திரேலிய மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
இதன் ஒரு கட்டமாக மொரிசனின் அதிரடி நடவடிக்கையால் பலவந்தமாக நவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளுக்கு அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு பல ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் என தங்களது நடவடிக்கை ஆரம்பித்தார்கள்.
சிறு குழந்தைகள் முதல் வயது வந்தவர்கள் வரைக்கும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க அதற்கும் ஒரு பொய்யான காரணத்தை காட்டி தடுப்பு காவல் காலத்தை மொரிசன் காலவரையற்ற தடுப்பு காவலாக்கியதன் பிரகாரம் முதலாவது ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர் தனது உயிரை மொரிசனுக்கு பரிசாக கொடுத்தார்.
ஆனாலும் இந்த கடும்போக்கு கொள்கையை அறிமுகப்படுத்தியது முன்னாள் அரசு என்ற குற்றச்சாட்டுகளும் இங்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. எது எவ்வாறாக இருந்தாலும் இரண்டு அரசுமே புகலிடம் கோருபவர்களை வைத்து அரசியல் லாபம் தேடும் அரசாகவே திகழ்கின்றது.
இவற்றுக்கு அப்பால் தற்போது தற்காலிக பாதுகாப்பு வீசாவினை மீண்டும் அறிமுகம் செய்துள்ள அபொட் அரசாங்கம் மேலும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சுமையை அதிகரித்துள்ளதே தவிர எந்தவிதமான நன்மைகளும் இல்லை. இந்த வீசா நடைமுறை மென்மேலும் ஆபத்து மிக்கதாகவே அகதி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதில் உள்ள பிரச்சினைகளை பார்த்தோமானால் ஒரு மனிதனுக்கு தற்காலிக பாதுகாப்பு வீசா வழங்குவதானால் அது எந்தவிதமான முறையில் வழங்கப்படும் என்ற ஒரு பாரிய கேள்வி உருவாகியுள்ளது.
பல தரப்பட்ட கோணங்களில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. புகலிடம் வழங்குவதற்கு உகந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு தற்போது தற்காலிக பாதுகாப்பு வீசா வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அது போன்று வழக்குகள் எதுவும் இன்றி இருப்பவர்களுக்கும் அதே வீசாவினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது இந்த வீசா நடைமுறையானது பாரிய சவாலாகவே உள்ளது.
மறுபுறம் பார்த்தோமானால் இந்த 3 ஆண்டு வீசாவினை வழங்குவதாக கூறும் அரசு ஒரு வருடத்துக்கு வீசாவினை வழங்கிவிட்டு ஒரு வருடத்தில் வழக்குகளை நடத்தி வழக்கில் தோல்வி அடைந்தால் அவர்களின் நிலை என்ன?
குடும்பத்துடன் வந்தவர்கள் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் நிலை, குடும்பத்துக்கு வழக்கு தோல்வி அடைந்தால் குழந்தை என்ன செய்வது, யாரிடம் பதில் கேட்பது? அல்லது இதற்கு பதில் உள்ளதா? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.
வழக்குகள் தோல்வி அடைந்தவர்களுக்கு என்ன விதமான நிலைப்பாடு என்பது எல்லாம் இன்று பாரிய கோணத்தில் கேள்விகளாக உருமாறியுள்ளது.
தமிழர்கள் தலைமையில் கூட்டம் ஏற்ப்பாடு செய்தார்கள், அங்கு போய் பார்த்தாலும் எந்தவிதமான நன்மையையும் இருப்பதாக தெரியவில்லை. அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை. மொரிசனின் சட்டம் ஒரு முடிவற்ற சட்டமாக உள்ளது.
அதற்கு மேல் பணத்துக்காக தொழில் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களின் சில தவறுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை என்ன? என பல கோணங்களில் பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடமும் சரியான பதில் இல்லை. அவர்களால் சொல்லப்படுவதும் இந்த வீசா புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உகந்தது அல்ல என்பதே.
ஒட்டு மொத்தத்தில் வருகின்ற ஆண்டும் இது போன்று காலத்தை கடத்தும் அளவுக்கு இந்த வீசா பிரச்சினை இருக்குமே தவிர, எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணமுடியாது என்பதே இன்றைய நிலையாக உள்ளது.
இவற்றுக்கு அப்பால் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் அவுஸ்திரேலியா மக்கள் மத்தியிலும், புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியிலும் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதை காரணம் காட்டி இன்னு சில காலங்கள் இழுத்தடிக்கும் நிலை உருவாக்கலாம் என்ற ஒரு ஐயமும் தற்போது சற்று உருவாகியுள்ளது.
இன்றைய இந்த நிலைமைகள் அறிந்தும் மென்மேலும் படகுகள் வருமேயானால் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிகவும் பாரிய கடும்போக்கு நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை நிலையாக உள்ளது.
எஸ் கே
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks3.html

Geen opmerkingen:

Een reactie posten