zaterdag 20 december 2014

நாமல் உப ஜனாதிபதி போல் செயற்படுகிறார் – ஹிருணிகா



மகிந்தவின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டும் பாதை அபிவிருத்தி சபை ஊழியர்கள்!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 04:01.51 AM GMT ]
அரசாங்க ஊழியர்களை ஜனாதிபதி தனது பிரச்சார சுவரெட்டிகள் ஒட்டும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை அரசு மறுத்திருந்த போதிலும், தற்பொழுது வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஜனாதிபதியின் பிரச்சார வேலைகளில் கடமை நேரத்தில் ஈடுபட்டிருப்பதை புகைப்பட ஆவணங்களுடன் ஆங்கில இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தேர்தல் ஆணையாளர் கூறப்போகும் காரணம் யாது?
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks4.html
வட பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு! அணைக்கட்டு உடையும் அபாயம் - மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 05:01.48 AM GMT ]
வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் ரயில் சாவஸ்திரிபுர வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு - கோட்டையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.
அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மழை நீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை அநுராதபுரம் குவிச்சன்குளத்தின் அணை உடைப்பெடுக்கும் அபாயம் தோன்றியுள்ளதால், குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நகர ஆணையாளர் சம்பத் ரோஹண தெரிவிக்கின்றார்.
நிலவுகின்ற அதிக மழையின் காரணமாக குளம் ஏற்கனவே வான் பாய்வதாக நகர ஆணையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து மக்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகர ஆணையாளர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks5.html
கடும் மழை காரணமாக இலங்கையின் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன!- வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது!
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 05:46.44 AM GMT ]
அதிக மழை காரணமாக இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள போக்குவரத்து பாதைகள் நீரில் மூழ்கியுள்ளது.
பொலனறுவை மட்டக்களப்பு, கல்லெல்ல மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களின் உள்ள பாதைகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பாதைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பதுளை மஹியங்கனை பாதையில் நேற்று இரவு 12 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் பாதையின் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வடக்கு ரயில் பாதையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது!
வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்வுத்தேகம இடைப்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுபாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளவிருந்த ரயில் சாவஸ்திரிபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு - கோட்டையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் மாஹவ வரை மட்டுமே சேவையை மேற்கொள்ளும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் குறிப்பிடப்பட்ட கால அட்டவணையின் படி ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் வௌ்ளநீர் வடிந்ததும் வடக்கு ரயில் பாதையின் ரயில் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பும் எனவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரை தனது பயணத்தை மேற்கொள்ளும். வௌ்ளநீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaks7.html
காலியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 05:47.10 AM GMT ]
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் காலி ஹிந்தோட்டை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பிற்பகல் காலி பிராந்திய விசேட நடவடிக்கை பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசமிருந்து போர 12 ரக துப்பாக்கி ஒன்றும் நான்கு ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கரந்தெனிய மற்றும் எத்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இன்று காலி நீதாவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakty.html

நாமல் உப ஜனாதிபதி போல் செயற்படுகிறார் – ஹிருணிகா
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 06:06.47 AM GMT ]
இளைஞர்கள், யுவதிகளுக்கு உண்மை என்ன என்பது புரியும் எனவும், அவர்கள் குரக்கன் சால்வை மாயையில் சிக்க மாட்டார்கள் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இளம் மக்கள் பிரதிநிதிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அரசாங்கத்தில் இருக்கும் எவரும் விரும்பவில்லை.
நாமல் ராஜபக்ச மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவாக நாட்டில் இருக்கும் ஒரே இளம் அரசியல்வாதி. நாமல் உப ஜனாதிபதியை போல் செயற்படுகிறார். அவரை ஐயா என்று அழைக்கும் நிலைமை அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல், கலை, விளையாட்டு என அனைத்தையும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் வெறும் பொம்மைகள் மாத்திரமே.
இந்த நிலைமை மாற்றியமைத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளருடன் இணையுமாறு நான் இளைஞர்கள், யுவதிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றேன் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
இளம் அரசியல்வாதிகளான முன்னாள் அமைச்சர் துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஊழல் நிறைந்த ஜனாதிபதியை விட்டே விலகியிருக்கிறேன்: ஹிருனிகா
சுதந்திர கட்சியிலிருந்து என்னை விலக்கி விட்டதாக கடிதம் அனுப்பியிருக்கும் மேதகு ஜனாதிபதி அவர்களே நான் கட்சியை விட்டு விலகவில்லை ஊழலும் முறைகேடுமான ஆட்சி புரியும் உங்களை விட்டும் உங்கள் பாவச் செயல்களை விட்டுமே விலகியிருக்கிறேன். என்பதை பகிரங்கமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர.
முன்னதாக தன்னை, தனது தலைமுறையை கட்சியை விட்டு நீக்குவதை விட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலை மற்றும் கொள்ளையுட்பட பாலியல் வல்லுறவுகள் புரியும் பாதகர்களை ஜனாதிபதி கட்சியை விட்டு நீக்கட்டும் இல்லாவிட்டால் இறுதியில் இவ்வாறான பாதகர்களே கட்சியில் எஞ்சியிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmszCRUKaktz.html

Geen opmerkingen:

Een reactie posten