தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 december 2014

டக்ளசின் ஆத்திரம், சிறிதரன் கொடும்பாவி எரித்தார்….

மைத்திரி சொன்னது! மஹிந்த மகனின் புதிய அசிங்கம் அம்பலம்…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவது குறித்து தற்போது அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அன்றாடம் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி பணத்தில் ஆட்சியாளர் சுகபோக வாழ்க்கை வாழ்வது புதிய விடயம் இல்லை என்றாலும் அது தற்போது பல்லாயிரம் கோடி பண செலவு மற்றும் அவர்களின் வங்கி கணக்கை நிரப்பும் வரை வளர்ந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த விடயம் சம்பந்தமாக விமர்சனங்களை முன்வைக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாதாரணமாக அதனை மறுத்து விடுகிறார்.
அமைச்சர் பதவி அல்லது அரசியல் அல்லது இவற்றை விடுத்தல் வேறு வாழ்க்கை இல்லை என்று இருப்பவர்கள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் பிள்ளைகள் பற்றி மிக கௌவரமாக பேசுகின்றனர்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் மக்களின் பணத்தை விரயமாக்கும் விடயங்கள் பற்றிய அறியாத மக்களுக்காக அவற்றை தெரியப்படுத்தும் நோக்கில் சிங்கள இணையத்தளம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் அவரது பேஸ்புக் வலைத்தள கணக்கில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் ரோஹித்தவின் காதலியும் அவருடன் இருக்கின்றார்.
நாட்டின் இளவரசனுக்காக இங்கிலாந்து மகாராணியின் மாளிகையில் இருந்து பல கோடி ரூபா கொடுத்து குதிரை ஒன்று இறக்குமதி செய்யப்பட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.RohithaRohitha-01Rohitha-02Rohitha-03Rohitha-04

http://www.jvpnews.com/srilanka/91051.html

மைத்திரியிடம் செல்லத் தயார் நிலையில் SLMC…

நேற்று மாலை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்ததை தலைவர் ஹக்கீம் பாராட்டியதுடன் இந்தத் தீர்மானத்தை உயர்பீடத்தைக்கூட்டி அறிவிக்கவுள்ளார்.
கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு கட்சித் தலைவருக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்து வந்தபோதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அசையாத நிலைப்பாட்டின் மூலம் அந்த சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.jvpnews.com/srilanka/91048.html

மகிந்தவா..?? மைத்திரியா..?? ஜனவரி 5ம் திகதி அறிவிப்பாம்…

ஜனாதிபதி தேர்தல் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தேர்தல் நடப்பதற்கு, 48 மணித்தியாலங்கள் முன்னதாகவே அறிவிக்கப்படும் என்று சிங்கள ஊடகம் ஒன்று ஊகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிறைவடையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்கூட்டியே அறிவித்தால் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட பிரச்சாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற காரணத்தினால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அண்மிக்கும் காலத்தில் அவர் நாடு திரும்ப உள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி விரைவில் கட்சி தீர்மானம் எடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சிங்கள ஊடகத்திற்கு அறிவித்துள்ளார். 2013ம் ஆண்டு நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் 353,595 வாக்குகளையும், 2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் 200,044 வாக்குகளையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/91035.html

டக்ளசின் ஆத்திரம், சிறிதரன் கொடும்பாவி எரித்தார்….

அதன் தாக்கமே இன்று யாழில் சிறிதரனின் கொடும்பாவி எரிப்பு என கூறும் மக்கள் தாம் சந்தை மற்றும் வேறு விடயங்களுக்கு வந்ததாகவும் எம்மை கட்டாயத்தில் இவ் ஆர்பாட்டத்தில் ஈடுபட வைத்ததாகவும் மேலும் மக்கள் குறிப்பிட்டனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈபிடிபியினர் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டமைப்பினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு யாழ் பேரூந்து நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கொடும்பாவியையும் எரித்துள்ளனர். மேலும், பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு ஒன்றினையும் சமர்ப்பித்துள்ளனர்.EpdpEpdp-01
http://www.jvpnews.com/srilanka/91041.html

Geen opmerkingen:

Een reactie posten