[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 09:33.02 AM GMT ]
நாட்டு மக்கள் அன்றாடம் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி பணத்தில் ஆட்சியாளர் சுகபோக வாழ்க்கை வாழ்வது புதிய விடயம் இல்லை என்றாலும் அது தற்போது பல்லாயிரம் கோடி பண செலவு மற்றும் அவர்களின் வங்கி கணக்கை நிரப்பும் வரை வளர்ந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்த விடயம் சம்பந்தமாக விமர்சனங்களை முன்வைக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாதாரணமாக அதனை மறுத்து விடுகிறார்.
எதிர்க்கட்சிகள் இந்த விடயம் சம்பந்தமாக விமர்சனங்களை முன்வைக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாதாரணமாக அதனை மறுத்து விடுகிறார்.
அமைச்சர் பதவி அல்லது அரசியல் அல்லது இவற்றை விடுத்தல் வேறு வாழ்க்கை இல்லை என்று இருப்பவர்கள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் பிள்ளைகள் பற்றி மிக கௌவரமாக பேசுகின்றனர்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரின் மக்களின் பணத்தை விரயமாக்கும் விடயங்கள் பற்றிய அறியாத மக்களுக்காக அவற்றை தெரியப்படுத்தும் நோக்கில் சிங்கள இணையத்தளம் ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் அவரது பேஸ்புக் வலைத்தள கணக்கில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் ரோஹித்தவின் காதலியும் அவருடன் இருக்கின்றார்.
நாட்டின் இளவரசனுக்காக இங்கிலாந்து மகாராணியின் மாளிகையில் இருந்து பல கோடி ரூபா கொடுத்து குதிரை ஒன்று இறக்குமதி செய்யப்பட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaku1.html
மைத்திரியின் இன்றைய பிரசாரக் கூட்டங்களுக்கு இடையூறு!- கண்காணிப்பு அமைப்பு
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 09:49.47 AM GMT ]
தெல்தெனிய பகுதியில் இன்று காலை கூட்டம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களின் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaku2.html
பிள்ளையாரையும், ஐ.ம.சு.கூட்டமைப்பில் இணைத்துக்கொண்ட மகிந்த!- அரியம் எம்.பி.
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 09:58.58 AM GMT ]
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துக் கூறுகையில்
இந்த நாட்டிலே சமத்துவமான சூழ்நிலை இல்லை என்பதற்கும் தற்போது மதப்பிரச்சினையை மேலும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமும் கொண்டதன் ஒரு வெளிப்பாடே இந்த மிகவும் மோசமான செயற்பாடாகும்.
பிள்ளையார் உருவத்தினை இந்துக்கள் மிகவும் புனிதமாக நேசிக்கும் கடவுளாகும் அதனை உதாசீனம் செய்ததுடன் அதற்கு கீழ் வேட்பாளரது சின்னமான வெற்றிலைக்கு நேரே புள்ளடியும் இட்டு அவரது ஐ.ம.சு.கூட்டமைப்பு என கட்சியின் பெயரையும் குறித்து இருப்பதன் மூலம் இந்து கடவுளாகிய விநாயகரையும் அவரது கட்சியில் இணைத்துக் கொண்டிருப்பது மதங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.
பிள்ளையார் உருவத்தினை இந்துக்கள் மிகவும் புனிதமாக நேசிக்கும் கடவுளாகும் அதனை உதாசீனம் செய்ததுடன் அதற்கு கீழ் வேட்பாளரது சின்னமான வெற்றிலைக்கு நேரே புள்ளடியும் இட்டு அவரது ஐ.ம.சு.கூட்டமைப்பு என கட்சியின் பெயரையும் குறித்து இருப்பதன் மூலம் இந்து கடவுளாகிய விநாயகரையும் அவரது கட்சியில் இணைத்துக் கொண்டிருப்பது மதங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.
இவ்வாறு செயற்படும் இவர் இந்த நாட்டிலே இந்துக்களில் இருந்து எவரொருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியுமா என்பதனை இவரால் கூறமுடியுமா? புனிதத்தன்மை பொருந்திய பிள்ளையார் உருவத்தினை தனது சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இனிமேலாவது இந்த கீழ்த்தரமான செயற்பாட்டினை எவரும் மேற்கொள்ளக்கூடாது என்பதனை அனைவரும் புரிந்து செயற்படவேண்டும்.
எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி இந்துக் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்வதும் மதத்தினை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்துவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
இவ்வாறான பொறுத்தப்பாடற்ற செயற்பாடுகளை கடும்போக்குவாதிகள் மேற்கொள்கின்ற போது இந்த மாவட்டத்தில் இருக்கும் பிரதி அமைச்சர்கள், அமைப்பாளர்கள், ஆலோசகர்கள் இதனை கருத்தில் எடுக்காதது அவர்களும் வேற்று மதத்தினை சேர்ந்தவர்கள் தான் என்ற கேள்வியினையும் கேட்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.
எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி இந்துக் கடவுளை அரசியலுக்காக பயன்படுத்துவதனை தவிர்த்துக் கொள்வதும் மதத்தினை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்துவதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
இவ்வாறான பொறுத்தப்பாடற்ற செயற்பாடுகளை கடும்போக்குவாதிகள் மேற்கொள்கின்ற போது இந்த மாவட்டத்தில் இருக்கும் பிரதி அமைச்சர்கள், அமைப்பாளர்கள், ஆலோசகர்கள் இதனை கருத்தில் எடுக்காதது அவர்களும் வேற்று மதத்தினை சேர்ந்தவர்கள் தான் என்ற கேள்வியினையும் கேட்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaku3.html
இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் கோத்தபாய! முகத்துவாரம் முகாமில் குவியும் இராணுவத்தினர்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 10:46.28 AM GMT ]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தலைமையில் மற்றுமொரு இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவரது புலனாய்வு ஆலோசகர் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண, இராணுவத் தளபதி லெப்பிடினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இணைந்து இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு கட்டமாக கொழும்பு முகத்துவாரம் ரொக் ஹவுஸ் இராணுவ முகாமுக்கு பெருமளவில் மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ம் திகதி இரவில் இருந்து இவ்வாறு படையினர் குறித்த முகாமுக்கு வந்த வண்ண உள்ளனர். இராணுவத்தினரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
முகத்துவாரம் முகாம் ஆர்மட் கோ படைப்பிரிவுக்கு சொந்தமான முகாமாகும். இது இராணுவ தாங்கிகள் அடங்கிய படைப்பிரிவாகும்.
முகத்துவாரம் இராணுவ முகாமுக்கு மேலதிகமான இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு வரும் நிலையில், வெளிப்பிரதேசங்களில் உள்ள முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் எந்தக் காரணம் கொண்டும் தமது பிரதேசங்களில் இருந்து வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை அதிகாலையில் படையினர் பயிற்சி பெறும் போது வீதிகளில் செல்லும் மக்களுக்கு தெரியும் வகையில் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் இராணுவ மனநிலைமையை ஏற்படுத்த முடியும் என ஹெந்தாவிதாரண ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினம் இரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட எதிரணி தலைவர்கள் இருந்த ஹொட்டலை சுற்றிவளைத்து இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கோத்தபாய இதுபோன்று கொழும்பு மேலதிக இராணுவத்தினரை வரவழைத்திருந்தார்.
இது குறித்து இணைய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்போது அதனை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதனை தடுக்க இராணுவத்தின் மூலம் அடக்குமுறையாக நிலைமை உருவாக்க கோத்தபாய தயாராகி வருகிறார். எனினும் இராணுவத்தில் இருக்கும் பெரும்பாலான கட்டளை அதிகாரிகள் இதனை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் கூட்டத்தில் குண்டு ஒன்றை வெடிக்க செய்து விடுதலைப் புலிகளே அதனை செய்தனர் எனக் கூறி, எதிர்க்கட்சியினரை கைது செய்யும் சதித்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCRUKaku4.html
Geen opmerkingen:
Een reactie posten