[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014, 11:34.09 PM GMT ]
இதுதொடர்பாக பாதிப்புக்குள்ளான பொலிசார் தம்மிடம் முறையிட்ட கருத்துக்களை முன்வைக்கையில்,
நாளை மட்டக்களப்பிற்குள் வருகை தரவுள்ள ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு 200 பொலிசார் மைதானத்தற்குள் கடமைகளை பொறுப்பேற்கின்றனர். இவர்களில் ஒரு தமிழ், முஸ்லிம் பொலிசார்கூட அனுமதிக்கப்டவில்லை. வெறுமனே சிங்கள பொலிசாரை மாத்திரம் உள்வாங்கி இருப்பது மிகவும் மனவேதனை தரும் விடயமாகும்.
ஒரே கொடி, ஒரே தேசம் என்று கூறுபவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்களேயானால் யார் யாரை நமபுவது என்று தெரியாமல் இருக்கின்றது. எங்களது கடமைகள் அனைத்தும் மைதானத்திற்கு வெளியிலேயே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குத் தேவை என வருபவர்கள் தமிழ், முஸ்லிம் பொலிசாரை புறக்கணிப்பதன் நோக்கம் என்ன என்று தெரியாத நிலையிலேயே இன்று நாங்கள் இருக்கின்றோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் கவலை தெரிவித்ததாகவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCScKalv4.html
தேர்தலில் அதிகளவில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது: பெபரல்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 02:24.22 AM GMT ]
தேர்தலில் அதிகளவில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களை விடவும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மிகக் கடுமையான அளவில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கலண்டருக்கு அமைய இலங்கையில் தேர்தல் நடத்தப்படுவதில்லை.
இலங்கையின் பொருளாதார சமூக சூழ்நிலைகள் தெரிந்த 35 அனுபவம் மிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எமது அழைப்பினை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாரியளவில் தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதுடன், அரச வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 73 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஐந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலைமைகளின் போது பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.
அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் மாத்தறை போன்ற பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத சுவரொட்டிகளும் கட்அவுட்களும் அகற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalw0.html
மக்கள் மனச்சாட்சிக்கு விரோதமின்றி வாக்களிக்க வேண்டும்: கர்தினால்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 02:52.21 AM GMT ]
சதந்திரமாக மக்கள் வாக்ககளிக்கக்கூடிய பின்னணியை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கான அரசாங்கமொன்றை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்கதொரு தேர்தலில், நாட்டின் அனைத்து பிரஜைகளும் சுயாதீனமான முறையில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
தேர்தல் வன்முறைகளினால் நாட்டில் பாரியளவில் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அடி பணியாது மனச்சாட்சிக்கு விரோதமின்றி மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இன்னும் சில நாட்களில் பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அவற்றை இன நல்லிணக்கத்துடன் மிகவும் சிறந்த முறையில் வரவேற்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சுயாதீன தேர்தல் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற சர்வமதத் தலைவர்கள் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த சந்தர்ப்பத்திலும் பாப்பரசரின் விஜயம் ரத்துச் செய்யப்படாது: கர்தினால்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாப்பரசரின் இலங்கை விஜயம் ரத்துச்செய்யப்படமாட்டாது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பாப்பரசரின் விஜயத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னா் வன்முறைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே பாப்பரசரின் விஜயம் ரத்துச்செய்யப்படலாம் என்று சில தரப்புக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. எனினும் அவ்வாறான சந்தேகங்களை கர்தினால் மறுத்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி 13 முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszCSdKalw1.html
Geen opmerkingen:
Een reactie posten