தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 december 2014

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சொந்த விருப்புக்கு இடம் தரப்படவேண்டும்: ஆனந்தசங்கரி

ஆளும் கட்சியில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முரண்பட்ட கருத்துக்கள்!- அமைச்சர் டளஸ்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 02:53.10 AM GMT ]
நுவரெலியா மாவட்டத்தில் தெரிவான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் அரசாங்கத்தில் இருந்து விலகியமைக்கு முரண்படான காரணங்களை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, தமிழ் பெருந்தோட்ட புறங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும் சிங்கள கிராமங்களுக்கு அந்த ஒதுக்கீடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரமும், ராதாகிருஸ்ணனும் பெருந்தோட்டப் புறங்களுக்கு உரிய நிதியொதுக்கீடுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனவே ஆளும் கட்சியில் இணைந்திருந்து விலகி எதிரணியில் சேர்ந்த  இவர்கள் மூவரின் கருத்துக்களிலும் முரண்பாடுகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalw2.html
மைத்திரியின் மேடை மீத தாக்குதல்! முத்துஹெட்டிகம மீது குற்றச்சாட்டு: அவர் மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 03:00.12 AM GMT ]
கடந்த புதன்கிழமையன்று காலியில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் பிரசார மேடை மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு காலி மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பின் நிசாந்த முத்துஹெட்டிகமவே பொறுப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதில் முத்துஹெட்டிகம சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தம்மிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் ராஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்னவிடம் வீடியோ ஆதாரம் இருக்குமானால் அதனை காண்பிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
அரசாங்கத்தை விட்டு விலகி நியாயம் கிடைக்கும் இடத்திற்குச் செல்லத் தயார்- நிசாந்த முத்துஹெட்டிகம
அரசாங்கத்தை விட்டு விலகி நியாயம் கிடைக்கும் இடத்திற்குச் செல்லத் தயார் என பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்திற்காகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காகவும் பல்வேறு துயரங்களைத் தாங்கிக்கொண்டு கட்சிக்காக பாடுபட்டேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக என்னைப் போன்று இந்த காலியில் வேறு எவரும் கஸ்டப்படவில்லை.
இவ்வாறு சிரமப்பட்ட எனக்கு மிளகு பிரதி அமைச்சர் பதவியே வழங்கப்பட்டது. நினைத்தால் இந்த எல்லாவற்றையும் விட்டு வீசி விட்டு சென்றுவிடுவேன்.
எனக்கு நியாயம் கிடைக்கும் ஒர் இடத்திற்குச் செல்லத்தயார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன மிகவும் சிரமப்பட்டே சுகாதார அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டார்.
எனினும்,  29 ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியில் தோல்விகளைத் தழுவி  உதாசீனப்பட்டு வந்த திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதற்காக நான் கோபப்பட போவதில்லை எனினும் சிறிய மன வேதனை இருக்கத்தான் செய்கின்றது.
மைத்திரிபால சிறிசேன உரையாற்றவிருந்த வந்துராம்ப மேடையை எரித்தததாக நிரூபித்தால் பிரதி அமைச்சர் பதவியை துறக்கத் தயார்.
எதிர்க்கட்சிக்குள் நிலவும் முரண்பாடே இந்த பிரச்சினைக்கான காரணமாகும். எனினும் அரசியல் லாபம் திரட்ட என்மீது சேறு பூசப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியை வெற்றி பெறச் செய்ய கம்பியூட்டர் ஜில்மாட் போட எமக்கு சக்தியுண்டு.
இந்த தேர்தல் ஆணையாளர் கம்பியூட்டர் ஜில்மாட் போடுவதில் சிறந்தவர்.
எனக்கும் அவர் இவ்வாறு ஜில்மாட் போட்டார், அவருக்கு எதிராக வழக்குத் தொடரவும் நான் ஆயத்தமாகியிருந்தேன்.
பின்னர் அதனை கைவிட வேண்டியேற்பட்டது என முத்துஹெட்டிகம நேற்று காலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கூறியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalw3.html
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் சொந்த விருப்புக்கு இடம் தரப்படவேண்டும்: ஆனந்தசங்கரி
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 03:57.08 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்குகிழக்கின் தமிழ் மக்கள் தமது சொந்த விருப்பத்தில் வாக்களிக்க இடம் தரப்படவேண்டும் என்று தமிழர் விடுதலைக்கூட்டணி கோரியுள்ளது.
இந்த கோரிக்கையை தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் விடுத்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள் எதிர்கால ஜனாதிபதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிக்கும்.
எனவே சிலர் கூறுவதை போன்று வாக்களிப்பை புறக்கணிக்கக்கூடாது என்றும் ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நாட்டை பொறுத்தவரை மிகவும் முக்கியமானதொன்றாகும் என்றும் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKalw6.html

Geen opmerkingen:

Een reactie posten