vrijdag 19 december 2014

மகிந்தருக்கு பெண்களை பலிகொடுத்த ஹிஸ்புல்லா…

மைத்திரியுடன் நேரடி விவாதத்திற்கு மகிந்த மறுப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேரடி விவாதத்தில் பங்கேற்கமாட்டார் என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவை, ஜனநாயகம், நல்லாட்சி தொடர்பாக, எதிர்வரும் ஜனவரி 1ம் நாள் பகிரங்க நேரடி விவாதத்துக்கு வருமாறு, மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்திருந்தார்.
இதுகுறித்து லங்கா புவத்திடம் தகவல் வெளியிட்ட கெஹலிய ரம்புக்வெல, “இது உண்மையில் ஒரு நகைச்சுவை. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தரத்தில் மைத்திரிபால சிறிசேன இல்லை. எனவே, பகிரங்க விவாதத்தில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கமாட்டார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/90861.html

பேரியல் அஷ்ரப் மைத்திரிக்கு ஆதரவு?

தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்து பின்னர் 2010 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்டார். பின்னர் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். மூன்று வருடத்திற்கு அந்த பதவியிலிருந் விலகி தற்போது அவர் நாடு திரும்பியுள்ளார் இந்நிலையிலேயே அவர் மைத்திரிக்கு ஆ.தரவளிப்பதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/90864.html

செல்லா காசான முஸ்லிம் காங்கிரஸ்…

இதனையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறுவதற்காக அந்தக் கட்சியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த அரச தரப்பு விருப்பம் கொள்ளவில்லை என்றும் அவர்களாக இணைந்து கொள்ளும் பட்சத்தில் கூட அது தொடர்பில் வரவேற்கவோ அலட்டிக் கொள்ளவோ அரசுக்கு எந்த தேவையும் இல்லை என்ற நிலைமையும் தற்போது உருவாகியுள்ளது.
இதனை நன்கறிந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் சில் முக்கியஸ்தர்களும் அதிரடியாக ஓர் அறிவிப்பை விடுத்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு தாங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிய வருகிறது.
கட்சியின் ஆதரவாளர்களும் போராளிகளும் தாங்கள் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஏலவே தீர்மானித்துள்ள நிலையில் தாங்களும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்து அறிவிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாத நிலையில் தங்களது பதவிகள் சுகபோகங்களை மட்டுமே வீணாக இழக்க வேண்டி வரும் என்பதால் தங்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் இவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வரு் சாத்தியமே காணப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட கல்முனை கரையோர மாவட்டம் உட்படலான முக்கிய சில கோரிக்களை அரசாங்கம் பரிசீலனை செய்வதற்கு தயாராகவிருந்த நிலையில் அது அரசினால் கைவிடப்பட்டதற்கும் இதுவே காரணமாக கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்த்லில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் சரியான ஒரு முடிவினை ஆரம்பத்தில் எடுத்திருந்தால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது என்பதே உண்மை. கட்சிக்குள் இன்று எழுந்துள்ள இருதரப்பு முரண்பாடுகளே தேசிய அரசியலிலும் அரசாங்கத்திலும் அந்தக் கட்சியை ஒரு செல்லா காசான நிலைமைக்கு தள்ளியுள்ளது.SLMC
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
http://www.jvpnews.com/srilanka/90871.html

மகிந்தருக்கு பெண்களை பலிகொடுத்த ஹிஸ்புல்லா…

இன்றைய கூட்டத்திற்கு பல மில்லியனை மகிந்தட்ட வாங்கி மக்களை காத்தான் குடியில விற்ற அவலம் அல்லா பார்ப்பார் முதல் மறைந்த பெருந் தலைவர் காலத்தில் தலைமையின் முடிவு மக்கள் முடிவு ஆனால் இன்று அவகள் எதைச் சென்னாலும் எமக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்கனும் என்று பாருங்க அல்லா நல்லதைச் செய்வான் என எம்.எ.எம்.ஆதம்பாவா ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லா அரங்கை சுற்றி கட்டப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் தாங்கிய பாரிய கட்அவுட்டுகளில் ஒன்று சரிந்து விழுந்ததில் பெண்கள் அறுவர் காயமடைந்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் மீதே இந்த கட்அவுட் சரிந்து விழுந்துள்ளது. அங்கு வீசிய பலத்த காற்றும் அதனோடு பெய்த கடும் மழையை அடுத்தே பாரிய கட்அவுட் கழன்று விழுந்துள்ளது.
காயமடைந்த பெண்களை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நான்கு பேரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றபோதிலும் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டு அடுத்த கூட்டத்துக்காக சென்றுவிட்டனர்.Batti-mr-02Batti-mr-03Batti-mr-04Batti-mrBatti-mr-01Haispula
Haispula-01

Haispula-02
http://www.jvpnews.com/srilanka/90869.html

Geen opmerkingen:

Een reactie posten