vrijdag 19 december 2014

தமிழ்ச்செல்வன் படுகொலை? விக்கிலீக்ஸ் அம்பலம்!

பிள்ளையானின் அட்டகாசம் செங்கலடியில் ஆரம்பம்!

தாக்குதலில் செல்லம் படமாளிகையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் படமாளிகையின் பணியாளர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கட்டளைகள் நாமலிடம் இருந்து வருவதாகவும் அவற்றையே இன்று பலர் நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களை அடக்கும் நோக்குடன் நாமல் இத் தாக்குதல் திட்டத்தை பிள்ளையானுக்கு வழகியதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன
http://www.jvpnews.com/srilanka/90751.html

தமிழ்ச்செல்வன் படுகொலை? விக்கிலீக்ஸ் அம்பலம்!

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, சக்திவாய்ந்த இலக்குகளை தகர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் ரகசிய அறிக் கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்ட 21 பக்கங்களைக் கொண் ட இந்த அறிக்கை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ யின், நாடுகடந்த விவகாரங்களுக்கான பிரிவினால் ‘கிளர்ச்சி முறியடிப்பில் மிகச்சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில்,(2001- ஜூன் 2009), அல்ஜீரியாவில் (1954-1962), கொலம்பியாவில் (2002-ஜூன் 2009), ஈராக்கில் (2004- ஜூன் 2009), இஸ்ரேலில் (1972 தொடக்கம்1990களின் நடுப்பகுதி, 1990களின் நடுப்பகுதி தொடக்கம், 2009 ஜூன் வரை), பெருவில் (1980-1999), வடஅயர்லாந்தில் (1969-1998) மற்றும் இலங்கையில் (1983 – மே 2009) கிளர்ச்சி முறியடிப்பில், சக்திவாய்ந்த இலக்குகள் குறிவைக்கப்பட்ட விதம் குறித்து இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும், செசனியா, லிபியா, தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்தும் சிஐஏயின் இந்த ரகசிய அறிக்கையில் உதாரணம் காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் கிளர்ச்சியை முறியடிக்க, இலங்கை அரசு, விடுதலைப்பு புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருக்கு நம்பிக்கையானவர்களைக் கொலை செய்வதற்கு 1983ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த ரகசிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை மோசமாகவும் அதேவேளையில், மிகவும் புத்திசாதுரியமான, இனத் தேசியவாத அமைப்பாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதற்கட்ட ரகசியத் தகவல்கள் கிடைத்ததையடுத்து, புலிகளின் தலைவர் பிரபாகரனையும், முக்கிய தலை வர்களையும் கொல்வதற்கு, இலங்கை அரசு தனது விமானப்படை மூலம், பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டு களைப் பயன்படுத்தி, 2007 நவம்பரிலும், 2008 ஜனவரியிலும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இதில் கூறப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2007 நவம்பர் 2ஆம் தேதி விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சா ளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏனைய தலைவர்களும் துல்லியமாக இலங் கை ராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, விடுதலைப் புலி களின் தலைவர் பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என்று ரகசிய அறிக்கை ஒன்று கூறுவதாகவும் சிஐஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தலைமை மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி, முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு, பிளவுகளை ஏற்படுத்துவ தன் மூலம், சக்திவாய்ந்த ராணுவ இலக்குகளை நெருங்கலாம் என்றும் சிஐஏயின் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
மேலும் கேணல் கருணாவுக்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு களைத் திறமையாகப் பயன்படுத்தி, இலங்கை அரசு அடைந்த பலன்களையும் சிஐஏயின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/90755.html


சு.ப தமிழ்ச் செல்வனின் சாவுக்கு புலிகளே காரணம்: மகிந்தர் அல்ல ! உண்மை என்ன ?


அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளை “விக்கி லீக்ஸ்” தற்போது வெளிப்படுத்தி வருவதாகவும் கூறி சில செய்திகள் வெளியாகிவருகிறது. புலிகளின்அரசியல் துறையின் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் சாவுக்கு புலிகளே காரணம் என்றும், தேசிய தலைவரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள நபர் ஒருவரே சு.ப. தமிழ்ச் செல்வன் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இச்செய்தி தொடர்பாக நாம் மிகுந்த அவதானமாக இருக்கவேண்டும்.
1) இப்போது ஏன் இந்தச் செய்தி வெளியாகவேண்டும் ?
2) இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது இன் நிலையிலா ?
3) மற்றும் தேசிய தலைவர் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர் காட்டிக்கொடுத்தாரா ?
மேலே உள்ள இந்த3 விடையங்களை நீங்கள் யோசித்தாலே பதில் தானக் கிடைத்துவிடும். அமெரிக்காவின் சி.ஐ.ஏ உலகிலேயே தலை சிறந்த புலனாய்வுப் பிரிவு தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களே விடுதலைப் புலிகள் மிகவும் மதிநுட்ப்பம் வாய்ந்த திறமைசாலிகள் என்று அந்த அறிக்கையில் பாராட்டி இருக்கிறார்கள். சு.ப தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்ட அன்று, இலங்கை அரசாங்கம் விடுத்த அறிக்கை என்ன ? நாம் புலிகளின் நிலை மீது பாரிய தாக்குதலை நடத்தி இருக்கிறோம். இரண்டு கிஃபீர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்டது என்று கூறினார். அதன் பின்னர் சுமார் 4 மணி நேரம் கழித்து விடுதலைப் புலிகள் தான், கொல்லப்பட்டது சு.ப தமிச் செல்வன் என்றுமுதலில் அறிவித்தார்கள். சி.ஐ.ஏ கூறுவதுபோல இலங்கை அரசுக்கு கிஃபீர் விமானங்கள் குண்டுபோடப்போகும் இடம், மற்றும் யாரைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகிறோம் என்று முன்னரே தெரிந்திருந்தால், தாக்குதல் வெற்றிகரமாக நடந்த பிற்பாடுஅவர்கள் நிச்சயம் தெரிவித்து இருப்பார்கள்.
குறைந்த பட்சம் புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றாவது கூறியிருப்பார்கள் அல்லவா ? ஆனால் அன்றைய தினம் இலங்கை அரசு விடுத்த அறிக்கையில், புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று தான் கூறியது. இதேவேளை புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மெய்பாதுகாப்பாளர் தான் இத்தகவலை சொன்னார் என்று சி.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளதின் அர்த்தம் என்ன ? புலிகள் தங்களுக்கு உள்ளேயே பெரும் முரண்பாட்டில் இருந்தார்கள் என்று காட்டிக்கொள்ளவும். புலிகளில் உள்ள ஒருவர் சொல்லியே இலங்கை தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்படி என்றால் புலிகளின் உள்ளவர்கள் காட்டிக்கொடுத்துள்ளார்கள், அதனால் தான் மகிந்தர் குண்டுபோட்டார் ! ஆக மொத்தத்தில் மகிந்தர் நல்லவர் ! புலிகள் உள்வீட்டு முரண்பாட்டில் அழிந்துபோனார்கள் என்ற தோற்றப்பட்டை வெளிக்கொண்டுவர சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவும் சிங்களத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள ஒரு சதியே. தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட சு.ப தமிழ்ச் செல்வனை வைத்து அரசியல் காய்களை நகர்த்தப் பார்கிறது கொழும்பு. இச்செய்தியானது காலத்திற்கு ஏற்ப, வெளியிடப்பட்டு ஒரு தோற்றப்பட்டை தமிழர்களுக்கு மத்தியில் ஏற்படுத்த மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.athirvu.com/newsdetail/1691.html

Geen opmerkingen:

Een reactie posten