vrijdag 19 december 2014

திருமலை கும்புறுபிட்டியில் ஏற்பட்ட பதட்டம்…!

பசிலும் எதிரணியிலா…??

நாமல் மற்றும் சமல் ராஜபக்ச ஆகிய இருவருமே முரண்டு பிடிப்பவர்கள் எனவும் பசில் ராஜபக்ச உட்பட ஏனைய அனைத்து சு.க உறுப்பினர்களும் எதிரணியில் இணைந்து கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழித்தல் உட்பட சில முக்கிய பிரச்சினைகளுக்கு கூட்டுத் தீர்வு எட்டப்பட்டதன் பின் பொதுத் தேர்தல் நடாத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெறும் முதல் இரண்டு கட்சிகளுக்கு முறையே பிரதமர் மற்றும் பிரதிப் பிரதமர் பதவிகள் வழங்கப்படும் என ஏற்கனவே பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 http://www.jvpnews.com/srilanka/90880.html

அனந்தி, சிவாஜிலிங்கம் மறுப்பு! பட்ஜெட் நிறைவேற்றம்

வடமாகாண சபை வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தாங்கள் நடுநிலை வகிப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19)இடம்பெற்றது.
வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் அலுவலகம், முதலமைச்சர், 4 அமைச்சுக்கள் மற்றும் பேரவை செயலகம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆளுநருக்கு தனிப்பட்ட ரீதியில் ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் ரூபாய் நிதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச சபைக்கு வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட நிதியும் நிறுத்தி வைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மிகுதி ஒதுக்கப்பட்ட நிதியை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
http://www.jvpnews.com/srilanka/90883.html

திருமலை கும்புறுபிட்டியில் ஏற்பட்ட பதட்டம்…


மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் ,, மக்களின் ஜீவனோபாயம் பாதிக்கப்படும் நிலையிலும் உருவாகும் இத்தனியார் உப்பளத்தினை நிரந்தரமாக நிறுத்துவதற்கு முயற்சிகள் செய்கிறோம். குறித்த நேரத்தில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் புஸ்பகாந்தன் ஆகியோர் அவ்விடத்தில் பிரசன்னமாயிருந்தனர்….பிரதேச மக்கள் இத்தனியார் உப்பளத்திற்கு கடும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றார்கள்.Ringo-JannaRingo-Janna-01Ringo-Janna-02Ringo-Janna-03Ringo-Janna-04Ringo-Janna-05Ringo-Janna-06Ringo-Janna-07Ringo-Janna-08Ringo-Janna-09Ringo-Janna-10Ringo-Janna-11Ringo-Janna-12Ringo-Janna-13Ringo-Janna-14Ringo-Janna-15
http://www.jvpnews.com/srilanka/90894.html

Geen opmerkingen:

Een reactie posten