woensdag 17 december 2014

பொதுபல சேனாவின் ஆதரவை எதிர்பார்க்கும் கம்மன்பில


அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு பேர் மைத்திரி பக்கம் தாவினர்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 12:15.42 PM GMT ]
வலப்பனை பிரதேச சபையின் தலைவர் ஜகத் குமார சமரசேன, பிரதேச சபை உறுப்பினர் ஜயந்த குலரத்ன, ஹிக்கடுவ பிரதேச சபை உறுப்பினர் ஞானதாச சில்வா, தேசிய சுதந்திர முன்னணியின் ரத்கம தொகுதி அமைப்பாளர் அசேல கோசல ரங்கநாத் ஆகியோர் இன்று பொது எதிர்க்கட்சியில் இணைந்தனர்.
கொஸ்கொடவில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டத்தில் அவர்கள் இவ்வாறு எதிரணியில் இணைந்தனர்.
பணத்திற்காகவே சிலர் அரசாங்கத்தில் இணைந்து வருவதாகவும் அதனை தவிர அவர்களுக்கு வேறு காரணங்கள் இல்லை எனவும் வலப்பனை பிரதேச சபை தலைவர் ஜகத் குமார தெரிவித்தார்.
ஊழல், மோசடிகள் மற்றும் நாட்டில் நடக்கும் சுயநலமான ஆட்சி காரணமாவே தாம் எதிரணியில் இணைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamx1.html


பொது வேட்பாளரின் கூட்டத்தை குழப்பும் திட்டம் அமுலில்: ராஜித சேனாரத்ன
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 12:18.52 PM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரங்களை குழப்பும் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் செயற்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வந்துரம்ப பிரதேசத்தில் இன்று நடைபெறவிருந்த மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம, வேறு சில இளைஞர்களுடன் சென்று நேற்று மாலை தீ வைத்தமை சம்பந்தமான காணொளி இருக்கின்றது.
ஜனாதிபதி அனுமதிக்காத விடயங்களை அவர்களின் ஆதரவாளர்கள் மேற்கொள்வது நாட்டில் நல்லாட்சி வீழ்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது.
இது தொடர்பான சட்டம் நியாயமான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
அதேவேளை ஹபராதுவ தொகுதி அமைப்பாளருடன் மோதல் ஒன்றை ஏற்படுத்தி, பொலிஸார் அவரை கைது செய்ய தேடியதுடன் அங்கு நடைபெற்ற கூட்டத்தை குழப்ப முயற்சிக்கப்பட்டது.
பலப்பிட்டிய கூட்டத்தின் ஏற்பட்டாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு பிரச்சினைகளை கொடுத்த பொலிஸார் அங்கு நடைபெறவிருக்கும் கூட்டத்தை குழுப்புவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
இப்படியான நடவடிக்கைகளை தான் அனுமதிப்பதில்லை என மகிந்த ராஜபக்ஷ அண்மையில் கூறியதுடன் அவரது ஆதரவாளர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது எந்த எதிர்ப்பையும் வெளியிடாதது நகைப்புக்குரியது.
நிறைவேற்று அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்துவதே இவற்றுக்கொல்லாம் காரணம். கூடிய விரைவில் அதனை ஒழித்து நாட்டுக்கு நல்லாட்சியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamx2.html


கொடூர ஆட்சியாளர்களால் எமனும் பதவியிழப்பார்: சரத் பொன்சேகா
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 12:41.57 PM GMT ]
கொடூரமான ஆட்சியாளர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய கொஸ்கொட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொடூர ஆட்சியாளர்களால், நரகத்தின் ஆட்சியாளரான எமனும் தனது பதவியை இழக்க நேரிடும்.
இந்த ஆட்சியாளர்கள் நரகத்திற்கு சென்று குருதியை அருந்துவது மாத்திரமல்ல, நரகத்தின் நிரந்தர ராஜாவாக மாறுவார்கள் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamx3.html


பொதுபல சேனாவின் ஆதரவை எதிர்பார்க்கும் கம்மன்பில
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 12:43.43 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகிய மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில புதிய கட்சியை ஒன்றை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார்.
தனது புதிய அரசியல் கட்சிக்கு பொதுபல சேனா, சிஹல ராவய போன்ற பௌத்த அமைப்புகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களில் 17 பேர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று உதய கம்மன்பிலவுடன் இணைந்து கொண்டனர்.
இவர்களுடன் இணைந்தே தாம் புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamx4.html

Geen opmerkingen:

Een reactie posten