woensdag 17 december 2014

விவாதத்திற்கு வருமாறு மகிந்தவுக்கு மைத்திரி சவால்!

அழைக்காத கூட்டத்திற்கு சென்ற ஐ.தே.கட்சியின் அமைப்பாளருக்கு கத்தி வெட்டு
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 01:12.56 PM GMT ]
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற விவசாய உத்தியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு அழைப்பின்றி சென்றதாக கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் எகலியகொட தொகுதியின் அமைப்பாளர் சிறிபால கிரியெல்ல என்பவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது புதல்வரான எகலியகொட பிரதேச சபையின் உறுப்பினர் ஹரிஸ் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான நடத்தப்பட்ட கூட்டத்திற்காக அரச அதிகாரிகளை அழைத்தீர்களா என அவர் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஒரு முறைப்பாட்டை கிரியெல்ல செய்துள்ளதுடன் மற்றைய முறைப்பாட்டை விவசாய உத்தியோகஸ்தர் ஒருவர் செய்துள்ளார்.
கிரியெல்ல குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக விவசாய உத்தியோகஸ்தரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தன்னை கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கிரியெல்ல செய்துள்ள முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamx6.html
மோசடி நடந்தது என்பதை உறுதிப்படுத்தினால் ஓய்வூதியம் பெறாது பதவியில் இருந்து விலகுவேன்: தேர்தல் ஆணையாளர்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 01:25.17 PM GMT ]
வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் போதோ, வாக்குகளை எண்ணும் போதோ தேர்தல் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வகையில் பாரிய மோசடிகள் ஏற்பட்டதாக எவராவது சாட்சியங்களுடன் உறுதிப்படுத்தினால், ஓய்வூதியம் பெறாமலேயே பதவியில் இருந்து விலக தயார் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மோசடிகள் ஏற்படாது என்பதற்கான வாக்குறுதியை வழங்குவதற்காகவே அவர் இதனை கூறியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை கூட்டும் போது தவறுகள் ஏற்படலாம். உதாரணமாக 841 வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச்சாவடியின் பொறுப்பாளர் அறிக்கை தரும் போது 891 பேர் வாக்களித்தனர் என கூறமுடியும்.
இது தவறு என்று உணரும் போது வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு உத்தரவிடப்படும்.
அதேவேளை பஸ்களில் வாக்கு பெட்டிகள் மாற்றப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள இலக்கம் மற்றும் சீல் முறைகளுக்கு அமைய அப்படியான முறைக்கேடுகளை செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியம் பக்கசார்பாக நடக்கும் என்ற நிலைப்பாடு காரணமாகவே சிலர் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் வருவதை எதிர்ப்பதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணையாளர் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை அங்கம் வகிப்பதால், அந்நாடுகளின் கண்காணிப்பாளர்களை அழைக்க எவரிடமும் கேட்கவேண்டிய அவசியமில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை அங்கம் வகிக்கவில்லை என்பதால், அங்கிருந்து கண்காணிப்பாளர்களை அழைக்கும் போது அது குறித்து போட்டியிடும் வேட்பாளர்களின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamx7.html
விவாதத்திற்கு வருமாறு மகிந்தவுக்கு மைத்திரி சவால்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 02:25.50 PM GMT ]
அரசாங்கத்தில் இருக்கும் நல்லாட்சி குறித்து ஜனவரி முதலாம் திகதி தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு காதிதம் கூட இல்லாமல் தன்னால் விவாதத்திற்கு வர முடியும் எனவும் மகிந்த ராஜபக்ஷ விவாதத்திற்கு வந்தால் தான் அவரை தோற்கடிப்பேன் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKaloz.html

Geen opmerkingen:

Een reactie posten