woensdag 17 december 2014

முஸ்லிம்களை அம்பாறைக்கும், தமிழர்களை யாழுக்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்: மகிந்த


உதய கம்மன்பில கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்: நிசாந்த சிறி வர்னசிங்க
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 10:15.33 AM GMT ]
உதய கம்மன்பில கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல கட்சிக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கட்சியை இரண்டாக பிளவுபடுத்த உதய முயற்சி எடுத்து வருகின்றார்.
கட்சியின் உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் கம்மன்பில ஈடுபட்டுள்ளார். தொடர்ச்சியாக கட்சி உறுப்பினர்களை ஆளும் கட்சிக்கு தாவச் செய்வதில் கம்மன்பில ஆர்வம் காட்டி வருகின்றார்.
கட்சியின் உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்து கொள்ளும் நேரடி முகவராக உதய கம்மன்பிலவை அரசாங்கம் நியமித்துள்ளது. பதவி பணம் மற்றும் வரப்பிரசாதங்கள் போன்றவற்றிற்கு உதய கம்மன்பில விலை போய்விட்டதாக நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உதய கம்மன்பில எவ்வித கருத்துக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamw5.html


கட்டுநாயக்கா மூடினால் என்ன எமக்கு மத்தள விமானநிலையம் உள்ளது: நாமல் ராஜபக்ஸ
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 10:43.44 AM GMT ]
எதிர்வரும் 8ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப்போகின்றார்களாம். ஆனால் எமக்கு மத்தள விமான நிலையம் உள்ளது அதனூடாக யாரும் செல்ல முடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, தேர்தல் பிரச்சார கூட்டங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டார்.
கொலன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 8ஆம் திகதி மைத்திரியின் ஆட்சி, நல்லாட்சியை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். 8ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப்போகின்றார்களாம். ஒவ்வொரு வரையும் செல்வதற்கு இடமளிக்க மாட்டார்களாம்.
அவர்களுக்குத் தேவையான நபர்கள் மாத்திரமே செல்ல அனுமதிக்கப்படுமாம். எந்தவொரு நபரும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கூறுகின்றனர். அதுவா நல்லாட்சி? பரவாயில்லை.
எமது தந்தை மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தார். ஏனையோருக்கும் செல்ல முடியும். அதனை மறந்துள்ளனர். மத்தளவை மறந்து விட்டனர். எனினும், யார் செல்கின்றார்கள் என தெரியவில்லை. நாம் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானாலும், நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என தெரிவித்தார்.
கைதிகளை தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுத்துவது மனித உரிமை மீறல!– ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 10:21.46 AM GMT ]
சிறைச்சாலை திணைக்களத்தில் கீழ் இருக்கும் கைதிகளை அரசாங்கத்தின் அரசியல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தை மாத்திரமல்ல சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை இணக்கப்பாடுகளையும் மீறும் செயல் என ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், அரசாங்கத்தின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் இது குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அந்த அமைப்பு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் கோரியுள்ளது.
மேலும் அரசாங்கம் தனது தேர்தல் பிரசாரத்திற்காக கட்சியினரை ஏற்றிச் செல்ல இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தி வருவதுடன் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் பக்கச்சார்பான சுவரொட்களை ஒட்டி தேர்தல் சட்டத்தை மீறும் செயலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல், போக்குவரத்துச் சபை மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamw6.html


ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கூட்டங்கள் நடாத்துவதற்கு இடங்களை பெறுவதில் சிரமம்: மட்டு அமைப்பாளர் சசிதரன்
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 11:43.26 AM GMT ]
தமது கட்சி சார்பாக தேர்தல் பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு உரிய இடங்களைப் பெறுவதில் பலசிரமங்களை எதிர் கொள்வதாக ஐக்கிய தேசிக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் இன்று கூறினார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
எமது கூட்டத்திற்கு மட். இந்துக் கல்லூரி மைதானத்தினைக் கேட்டு உரிய பாடசாலை அதிபரிடம் கோரியிருந்தோம். ஆனால் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகம் அதற்குரிய அனுமதியினை மறுத்துள்ளது.
ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை ஒன்று நாளை மறுதினம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு மட். இந்துக் கல்லூரி நிர்வாகமும், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் அனுமதி வழங்கியுள்ளதாக அறிகின்றோம்.
இந்நிலையில் மட்.சிவானந்தா விளையாட்டு மைதானத்தினை அந்த பாடசாலை அதிபரிடம் கேட்டபோது குறித்த மைதானத்தில் அரசியல் கூட்டங்கள் நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மட். சிவானந்தா வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் பொதுவாக விளையாட்டு மைதானங்கள், பாடசாலை என்பன வலயக்கல்வி அலுவலகம் போன்ற நிர்வாகத்தின் கீழ் உள்ளதனால் எமது கட்சி சார்பாக தேர்தல் பொதுக் கூட்டங்கைள நடாத்துவதற்கு இடங்கள் பெறுவதில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் பாராபட்சம் காட்டி வருகின்றது.
இந்த விடையம் குறித்து இன்று  மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு நாம் கொண்டு வந்தோம். அரசாங்க அதிபர் இவ்விடையத்தினை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள விளையாட்டு மைதானங்களை தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களுக்கு வழங்குவதாக இருந்தால் ஆளும் கட்சிக்கு மாத்திரமின்றி எதிர் கட்சியினருக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய எமது தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு மட்டக்களப்பு நகரில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட விளையாட்டு மைதானங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என நம்பிக்கை வந்துள்ளது.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகாரியின் செயற்பாடானது மிகவும் கவலையளிக்கின்றது. ஒரு அரச அதிகாரி பக்கச் சார்பற்ற முறையில் நடந்து கொள்ளவேண்டும்.
இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இந்த விடையத்தில் பக்கச்சார்பு இல்லாமல் நடந்து கொள்கின்றார். தேர்தல் நடைபெற்று முடியும் வரை அரசாங்க அதிபர் இவ்வாறு பக்கச் சார்பு இல்லாமல் நடந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசிக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் மேலும் கூறினார்
http://www.tamilwin.com/show-RUmszCSbKamxz.html


முஸ்லிம்களை அம்பாறைக்கும், தமிழர்களை யாழுக்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்: மகிந்த
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 12:01.23 PM GMT ]
கொழும்பில் இருந்து வெளியேற்றி முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மயூரா பிளேஸில் நாம் மாடிக்குடியிருப்புகளை நிர்மாணித்தோம். அங்குள்ளவர்களை அங்கிருந்து தூர இடங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை.
ஏற்கனவே வசிக்கும் இடங்களிலேயெ அவர்களை அமர்த்தினோம் என்பதனை நான் தெளிவாக கூறுகிறேன். ஆனால் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றனர்.
கொழும்பில் இருந்து வெளியேற்றி அவிஸ்ஸாவளைக்கும் முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்.
சேரி வீடுகளை அகற்றும் எமது செயற்பாட்டினை நிறுத்த வேண்டாம். எனது காலப்பகுதியில் சேரி வீடுகளுக்கு பதிலாக மக்கள் சிறப்பான குடியிருப்புகளிலேயே வாழ வேண்டுமௌ
இங்கு காணப்படும் அழகான சூழல் புதிய கட்டடங்களின் நிர்மாணத்தின் மூலம் மேலும் மாற்றமடையலாம்.
நாடு முன்னேற்றமடையும் போதும், அபிவிருத்தி அடையும் போதும், சமூகம் முன்னேற்றமடையும் போதும் அதற்கு ஏற்றவாறு ஏனையவர்களும் தயாராக இருக்க வேண்டும்.
உங்களது பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் சுபீட்சமான எதிர்காலத்தையும் சிறந்த சூழலையும் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப எட்டாம் திகதி உங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதேவேளை, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிடவில்லை.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
அரசாங்கம் நீதித்துறையில் தலையிடுவதாக ஒருசிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
சட்டத்தை அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்தி சமாதானத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லெறிய வேண்டாம் – மகிந்த ராஜபக்ஷ
கண்ணாடி மாளிகைகளுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ தொகுதியில் கொட்டிகாவத்த சந்தியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயக உரிமைகள் இருக்கின்றன. எனினும் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு தள்ள வேண்டும் என்பதே சர்வதேசத்தின் தேவை.
நாட்டில் தற்போது சேறுபூசும் அரசியலே காணப்படுகிறது. அனைவரும் சேறுபூசுகின்றனர்.
நாங்கள் மேற்கொண்டு வரும் அபிவிருத்தியை விமர்சனம் செய்கின்றனர். மூன்றில் இரண்டு வீத செலவில் அதனை செய்திருக்கலாம் என்கின்றனர்.
ஆனால், இவ்வளவு காலமும் யாரும் அதனை செய்யவில்லை. நாட்டின் எதிர்காலத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக காட்டிக்கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamx0.html

Geen opmerkingen:

Een reactie posten