zaterdag 20 december 2014

போர்க் குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை - மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2015ல் சிறப்பு செயற்திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 04:46.15 PM GMT ]
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறப்பு செயற்றிட்டம் 2015ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என வடமாகாண கிராமிய அபிருத்தியமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட விவாதத்தின் இறுதி நாளான இன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். 
இன்றைய அவையில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எமது மாகாணத்தில் விதவைகள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியவற்றின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையும் கடப்பாடும் எமக்குள்ளது.
இந்நிலையில் அதற்காக 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மேற்படி பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தரவுகளைப் பெற்று அதன் மூலம் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.
இதற்கான நிதியின் ஒரு பகுதியை முதலமைச்சர் வழங்கவுள்ளார்.  மேலதிக நிதியினை பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக நாங்கள் பெற்றிருக்கின்றோம்.
அதனை கொண்டு எத்தனை மில்லியன் பணம் செலவிட்டேனும் மேற்படி குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி அவர்களும் இந்தச் சமூகத்தில் எவரையும் சார்ந்திராதவர்களாக மாற்றுவோம் அது எமது கடமையும் காலத்தின் தேவையும் என அமைச்சர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakq3.html
சரத் பொன்சேகாவை காப்பாற்றவே ஆளும் கட்சியில் இணைந்து கொண்டேன்!- ஜயந்த கெட்டகொட
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 04:51.21 PM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை காப்பாற்றவே ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாக கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன்.
சரத் பொன்சேகாவிற்கு நிவாரணங்களை வழங்க இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.
சரத் பொன்சேகாவின் இராணுவ பதவிகளை வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளல் ஆகியன குறித்து பேசியுள்ளேன்.
சரத் பொன்சேகாவின் 70 மில்லியன் ரூபா வங்கிப் பணம் முடக்கப்பட்டுள்ளது அதனை விடுவிக்குமாறும் கோரியிருந்தேன்.
இதன் ஓர் கட்டமாகவே இன்று தானுன திலகரட்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக கருதுகின்றேன்.
அரசாங்கத்திடமிருந்து நான் எந்தவிதமான பண நலன்களையோ பதவிகளையோ எதிர்பார்க்கவில்லை.
சரத் பொன்சேகாவிற்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்ற ஒரே கோரிக்கை மட்டுமே ஜனாதிபதியிடம் நான் முவைத்திருந்தேன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டினால் நலன்களை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என ஜயந்த கெட்டகொட தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakq4.html

போர்க் குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை - மைத்திரிபால சிறிசேன
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 10:30.59 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிரணி தரப்பிலான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்றை நடத்த முடியாது என்றும், ..
ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், அதற்குப் பதிலாக உள்ளூரில் சுதந்திரமான நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்துவேன் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
அதேநேரத்தில் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்காகப் பங்களிப்பு செய்த எவரையும், சர்வதேச விசாரணையொன்றின் பாதிப்புக்கு உட்படாத வகையில் பாதுகாப்பேன் என்றும் கூறியிருக்கின்றார்.
திரணியினரின் சார்பில் பொது வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதும், 100 நாள் திட்டம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி பொறுப்பு கூறவல்ல நாடாளுமன்ற ஆட்சிமுறையை உருவாக்குவேன் என சூளுரைத்திருக்கின்றார்.
‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமையை எவ்வாறு இல்லாதொழிப்பது, ஜனாதிபதி ஆட்சியை எப்படி இல்லாமல் செய்வது, 100 நாள் திட்டத்தின் பின்னர், நாட்டின் ஆட்சி முறை என்ன, 100 நாட்களின் பின்னர், ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள என்னுடைய றிலைப்பாடு என்ன என்று மக்கள் மனங்களில் எழுந்துள்ள பலதரப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருக்கின்றது.
இந்த நாட்டில் பலமற்ற நாடாளுமன்றமே இருக்கின்றது. குடும்ப ஆட்சி நடைபெறுகின்றது. இதனால் இங்கு அரசியல் ஸ்திரமற்ற நிலைமை எற்பட்டிருக்கின்றது. இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்’ என்று பொது வேட்பாளர் தமது தேர்தல் விஞ்ஞபானம் குறித்து கருத்துரைத்த போது தெரிவித்திருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKakq5.html

Geen opmerkingen:

Een reactie posten