[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 12:31.34 AM GMT ]
சுனாமி தாக்கம் ஏற்பட்டு 10 வருடங்களாகிய பின்னர் இந்த நிலை தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை மீள்குடியேற்றுவற்கு அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அம்பாந்தோட்டையிலும், கிழக்கிலும் இன்னும் சில மக்கள் மீள்குடியேற்றப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakxy.html
நிதியமைச்சின் செயலாளர் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார்!- ரவி கருணாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 12:24.39 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி உதவி தலைவர் ரவி கருணாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ரூபவாஹினியின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவுடன் இரண்டு மணித்தியால தொலைக்காட்சி நேர்முக நிகழ்ச்சியில் பங்கேற்றமை தொடர்பிலேயே ஜெயசுந்தரவின் மீது ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்தநிகழ்ச்சியின் போது ஹட்சன் சமரசிங்க, மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சி தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரை தொடர்பு கொண்ட போதும் அவர் பதில் வழங்கவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakw7.html
பொதுவேட்பாளரின் 2015ம் ஆண்டின் 100 நாள் டயறி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 12:00.21 AM GMT ]
ஜனவரி 10 - புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
ஜனவரி 11 - ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு அனைத்து நாடாளுமன்ற கட்சிகளும் உள்ளடங்கிய 25க்கு கூடாத அமைச்சரவை ஒன்று அமைக்கப்படும்.
ஜனவரி 12 - தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அனைத்துக் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் இணைத்து தேசிய ஆலோசனை சபை அமைக்கப்படும்.
ஜனவரி 19 - நாடாளுமன்றம் கூட்டப்படும்.
ஜனவரி 20 - அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கும் வகையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் வகையில் நிலையியல் கட்டளை சட்டம் திருத்தப்படும்.
ஜனவரி 21 - நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் நடவடிக்கைகள்.18வது திருத்தச் சட்டத்தை ரத்துச்செய்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்,
ஜனவரி 25 - சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஜனவரி 28 - நடைமுறையில் உள்ள விருப்புத் தெரிவு வாக்களிப்பு துறை ரத்துச் செய்யப்படுவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
ஜனவரி 29 - பொதுமக்களுக்கான நிவாரணம் மற்றும் வாழ்க்கை செலவை குறைத்தல் தொடர்பி;ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஜனவரி 30 - சம்பள அதிகரிப்பு, நேரடி மறைமுக வரிகள் நீக்கப்படும்.
பெப்ரவரி 2 - பொதுமக்களின் பிரதிநிதிகளுக்கு ஒழுக்கக்கோவை அறிமுகப்படுத்தப்படும்.
பெப்ரவரி 4 - நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் இறைமையை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படும்.
பெப்ரவரி 5 - நடைமுறையில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பெப்ரவரி 6 - தேசிய ஒளடத கொள்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
பெப்ரவரி 18 - சுயாதீனக் குழுக்கள் நிறுவப்படும்.
பெப்ரவரி 19 - தேசிய கணக்காய்வு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு 3 வாரங்களில் அது நிறைவேற்றப்படும்.
பெப்ரவரி 20 - தகவல்களை தெரிந்து கொள்ளும் சடடமூலம் அறிமுகப்படுத்தப்படும்.
மார்ச் 2 - புதிய தேர்தல் சட்டங்கள் தயாரிக்கப்படும். அது அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.
மார்ச் 17 - தேர்தல் முறைகளில் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
மார்ச் 18 - தேசிய ஒளடத கொள்கை நிறைவேற்றப்படும்.
மார்ச் 19 - தேசிய கணக்காய்வு கொள்கை நிறைவேற்றப்படும்.
மார்ச் 20 - தகவல்களை தெரிந்து கொள்ளும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
மார்ச் 23 - நியமனங்களுக்கான அரசியல் சபை அமைக்கப்பட்டு சுயாதீனக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்படும்.
ஏப்ரல் 20 - நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்காக நாடாளுமன்ற முறை நிறுவப்படும்.
ஏப்ரல் 23 - நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதனையடுத்து காபந்து அரசாங்கத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படும்.
இதன்படி அதிக ஆசனங்களை பெற்ற கட்சியின் சார்பில் பிரதமர் நியமிக்கப்படுவார்.
அதற்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகளை பெற்றவர் பிரதி பிரதமராக நியமிக்கப்படுவார்.
இந்த பதவிகளின் கீழ் தேசிய அரசாங்கம் ஒன்று 2 வருடங்களுக்கு நிறுவப்படும்.
இதன் கீழ் தேசிய கொள்கைகள் மற்றும் சவால்கள் வெற்றி கொள்ளப்பட்டு அரசியல் கலாசாரம் நிறுவப்படும்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKakw5.html
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகியோர் அக்கட்சிக்கு எதிராக வழக்கு
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 11:30.38 PM GMT ]
கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களின் உறுப்புரிமை நீக்கப்படும் என்று கட்சியின் நடைமுறை செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த வழக்கு தாக்கல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்றோர் சட்ட ஆலோசனை குழு ஒன்றை அமைத்துள்ளனர்.
இதில், மைத்திரிபால சிறிசேன, வசந்த சேனாநாயக்க, எம்.கே.டி.எஸ் குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க, ஹிருணிகா பிரேமசந்திர உட்பட்டோர் அடங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakw4.html
குறைந்த வருமானம் கொண்ட மக்கள்,மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு படையினரால் பயமுறுத்தல்! - மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு போக்குவரத்து சபையில் பலாத்காரம்
[ சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014, 11:22.01 PM GMT ]
ஆங்கில இணையத்தளம் ஒன்றில் இந்த குற்றச்சாட்டு விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மக்களிடம் செல்லும் படையினர் மஹிந்த ராஜபக்சவை தவிர்ந்த ஏனையோருக்கு வாக்களிப்பவர்கள் தொடர்பில் கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்று அச்சுறுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களை பயமுறுத்தும் படையினர் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்காது போனால் சொந்த குடியிருப்புக்களில் இருந்து அகற்றப்படுவார்கள் என்று எச்சரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த எச்சரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமக்கு வாக்களிக்காதவர்கள், வேறு இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தாம் தந்தையிடம் கூறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
மஹிந்தவுக்கு வாக்களிக்குமாறு போக்குவரத்து சபையில் பலாத்காரம்
இலங்கை போக்குவரத்து சபையினர், தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குகளை மஹிந்த ராஜபக்சவுக்கு அளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே வி பி தொழிற்சங்கம் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்தின் இலங்கை போக்குவரத்து தலைமையே இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக ஜே வி பி குறிப்பிட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பணியாளர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போக்குவரத்து சபை தொழிற்சங்க தலைவர் நிமால் அபேசிறியின் ஊடாகவே சமர்ப்பிக்க முடியும் என்றும் கோரப்பட்டதாக ஜே வி பி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் தாம் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று ஜே வி பி தொழிற்சங்க தலைவர் லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் போக்குவரத்து சபையின் பணியாளர்கள் மஹிந்தவை வெற்றிபெறச் செய்வோம் என்று எழுதப்பட்ட டீ சேர்ட்டை அணிந்து வருமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRUKakw3.html
Geen opmerkingen:
Een reactie posten