zaterdag 20 december 2014

ராஜபக்ஷ யார்….?? பல்லாயிரம் மக்கள் மத்தியில் ஹரின்…

அந்தரத்தில் மகிந்த…! 42 அமைச்சர்கள் OUT……

அமைச்சர்களான மேர்வின் சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, டியூ. குணசேகர, சீ.பி. ரத்நாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பீலிக்ஸ் பெரேரா, பீ. தயாரத்ன, சுமேதா ஜி. ஜயசேன, திஸ்ஸ கரலியத்த, சாலிந்த திஸாநாயக்க அமைதியாக இருக்கும் அமைச்சர்களில் முன்னணியில் இருக்கும் அமைச்சர்களாவர்.
அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷவும் தினேஷ் குணவர்தனவும் இவர்களுடன் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர்.
இரண்டு திட்ட அமைச்சர்கள் மற்றும் 38 பிரதியமைச்சர்களில் 7 பேர் மாத்திரமே மகிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாக ஆதரவை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் பெருந் தெருக்கள் மற்றும் துறைமுக திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வெளிப்படையாக தெரியும் வகையில் மகிந்தவுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். மகிந்த அணியில் இருக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.
தமது தேர்தல் பிரசாரத்தில் அரசாங்கத்திற்கு வெளியிலும் அரசாங்கத்திற்குள்ளும் செயற்பாடுகள் இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
மகிந்த அணியில் இருக்கும் அமைச்சர்கள் தற்போது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன் அவை மகிந்த ராஜபக்ஷவுக்கு பாதகமானதாக இருப்பதை காணமுடிகிறது. ஏனையவர்கள் அமைதியாக இருப்பதால், மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/90918.html

ஹிருனிகா பதிலடி! வாய் மூடினாரா மகிந்த..??

முன்னதாக தன்னை, தனது தலைமுறையை கட்சியை விட்டு நீக்குவதை விட போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலை மற்றும் கொள்ளையுட்பட பாலியல் வல்லுறவுகள் புரியும் பாதகர்களை ஜனாதிபதி கட்சியை விட்டு நீக்கட்டும் இல்லாவிட்டால் இறுதியில் இவ்வாறான பாதகர்களே கட்சியில் எஞ்சியிருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர நீக்கப்பட்டுள்ளதாக அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், நான் ஏற்கனவே எதிரணியில் இணைந்து விட்டேன். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லையென தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி முதலில் கட்சியில் இருக்கும் கொலைகார பாதகர்கள், கொள்ளைக்காரர்கள், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், மற்றும் பாலியல் கொடுமைக்காரர்களை நீக்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.

தனது பாதுகாப்பு குறித்து எப்போதும் கவலையுடன் இருந்த நிலையிலேயே ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டதாகவும் உறுதியான தலைமைத்துவம் உருவாகியிருக்கும் நிலையில் எதிரணியில் இணைந்து கொண்டதாகவும் கட்சியை விட்டு விலகிய தருணத்தில் ஹிருனிகா தெரவித்திருந்தமையும் அவரது தந்தை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இன்னும் நீதி கிடைக்கவில்லையென்பதே அவரது நிலைப்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.HarunekaHaruneka-01Haruneka-02



 http://www.jvpnews.com/srilanka/90921.html

ராஜபக்ஷ யார்….?? பல்லாயிரம் மக்கள் மத்தியில் ஹரின்…

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார். ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் இதனை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ, அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தல் சட்டங்களை மீறி வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பிரசாரங்களுக்காக இந்தியாவில் இருந்து கலைஞர்கள் அழைத்து வரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.இலங்கை கலைஞர்கள் தற்போது இல்லை. அரசாங்கம் சல்மான்கானை இலங்கைக்கு அழைத்து வரவுள்ளது. சல்மான்கானை அழைத்து வந்து நாமல் பேபின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்த உள்ளனர்.

மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதை பேஸ்புக்கில் பார்த்தேன். தற்போது இலங்கை கலைஞர்களால் அரசாங்கத்திற்கு பயனில்லை. இதனால் இந்தியாவில் இருந்து கலைஞர்களை வரவழைக்க உள்ளனர் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.Harin Farnando-01Harin Farnando-02Harin Farnando-03Harin Farnando-04Harin Farnando-05Harin Farnando-06Harin Farnando-07Harin Farnando-08Harin Farnando-09Harin Farnando-10
http://www.jvpnews.com/srilanka/90926.html

Geen opmerkingen:

Een reactie posten