[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:04.35 AM GMT ]
பாணந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவரது மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் அவர் வாதுவை பொலிசில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் பொலிசார் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர் இது குறித்து பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரிடம் முறையிட்டுள்ள நிலையில், தற்போது பொலிசார் தன்னைத் துன்புறுத்தத் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தில் தலையிட்டு தனது மனைவியைத் தேடித்தர ஆவன செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையில் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நபருடன் துணைக்கு அவரது சிறுவயதுக் குழந்தையொன்றும் நடைபாதையில் அமர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkq7.html
நீதிபதியின் மரணத்தில் சந்தேகம்! பூதவுடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய தடை!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:36.24 AM GMT ]
கடுவெல முன்னாள் மாஜிஸ்திரேட் நீதிபதி கதுருவான ஞானசிறியின் பூதவுடலுக்கு இறுதிச் சடங்குகளை நடத்த நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
நீதிபதி ஞானசிறியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தலங்கம பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, உடனடியாக கடுவெல நீதிமன்றத்துக்கு பொலிசார் அது குறித்து அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து கடுவெல மாஜிஸ்திரேட் நீதிபதி தம்மிக ஹேமபால சடலத்தைக் கைப்பற்றி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சட்ட மருத்துவரிடம் கையளிக்குமாறு கடுவெல பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
கடுவெல மயானத்தில் அவரது பூதவுடலுக்கு இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்படவிருந்த இறுதிக் கட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சடலம் கைப்பற்றப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr1.html
ஜனாதிபதி தேர்தலில் ஆதரளிப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு ஆறு நிபந்தனை
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:32.35 AM GMT ]
வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குதல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை மீள அளித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்தல், 13ம் திருத்தச் சட்டத்தை விரிவாக அமுல்படுத்தல் உள்ளிட்ட காரணிகள் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தமிழ்நாட்டில் வைத்து இந்த நிபந்தனைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நிபந்தனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார் என சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr4.html
Geen opmerkingen:
Een reactie posten