[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:15.23 AM GMT ]
யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதையின் கண்டி வரையான கிளைப் பாதைக்கு அடிக்கல் நடும் வைபவத்துக்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி, தனது பயணத்தின் இடையில் மகாநாயக்கர்களைச் சந்திப்பதற்கு சென்றிருந்தார்.
இரண்டு மகாநாயக்கர்களுடனும் சிறிது நேரம் அளவளாவிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சிரேஷ்ட பிரஜைகளுக்கான மொபிடெல்லின் இலவச சிம் கார்ட் அடங்கிய மொபைல் போன்கள் அடங்கிய பொதியொன்றையும் மகாநாயக்கர்களிடம் கையளித்தார்.
அறுபது வயதைக் கடந்த பிக்குமாருக்கு குறித்த தொலைபேசிகள் வழங்கப்படுவதற்காகவே அவை மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் தலதா மாளிகைக்கும் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அங்கு விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkry.html
ஊழல் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க நாங்கள் முன்னிற்போம்!- பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:24.43 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, நேற்று தனது கட்சி முக்கியஸ்தர்களுடன் கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டபின் அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
அப்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா,
கடந்த முறை போன்று இம்முறையும் பொது அபேட்சகர் ஒருவரை முன்னிறுத்தினால் மட்டுமே இந்த ஊழல் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க முடியும். அதற்கான முயற்சியில் எனது கட்சி முன்னிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவுடன் அவரது மனைவி அனோமா, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மாகாண சபை உறுப்பினர் சுசில் கிந்தெல்பிடிய ஆகியோரும் குறித்த விஜயத்தின் போது உடனிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkrz.html
எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் பிற்போடப்படும்?
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:31.13 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் கூட்டணியொன்றை உருவாக்கி, பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதில் முன்னின்று செயற்பட்ட மாதுளுவாவே சோபித தேரர் சுகவீனமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை (17) குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை 19ம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனது சுகவீனம் காரணமாக குறித்த ஒப்பந்தத்தை பிற்போட வேண்டாம் என்று மாதுளுவாவே சோபித தேரர், தனக்கு நெருக்கமான தேரர் ஒருவர் மூலமாக எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நல்ல காரியங்கள் பிற்போடப்படக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அவர், ஆம்புலன்சில் வந்தாவது தான் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr0.html
ஜனாதிபதிக்கு கிடைக்கும் முன்னர் சட்டவிளக்கம் எவ்வாறு அரச ஊடகத்துக்கு சென்றது? - சட்டத்தரணிகள் கேள்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:44.09 AM GMT ]
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜனாதிபதிக்கு இந்த சட்டவிளக்கம் நவம்பர் 10ம் திகதியன்று கிடைத்தது. எனினும் அதற்கு முன்னர் நவம்பர் 9ம் திகதியன்று அரச ஊடகம் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தகவல்களை வெளியிட்டது.
எனவே இந்த விடயத்தை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உயர்நீதிமன்றத்தில் எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, எத்தனை எதிராக தாக்கல் செய்யப்பட்டன போன்ற விபரங்கள் 9ம் திகதியன்றே விளக்கமாக கூறப்பட்டன.
உயர்நீதிமன்றத்தில் சட்டவிளக்கம் பதிவாளருக்கு செல்லும் முன்னரே ஊடகத்துக்கு சென்றது நிச்சயமாக உள்ளிருந்து கசிந்த விடயமாகவே கருதமுடியும்.
எனவே இந்த வரலாற்று தவறு தொடர்பில் உயர்நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு விசாரணைக்கு உத்தரவிட்டவேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr2.html
Geen opmerkingen:
Een reactie posten