zondag 16 november 2014

ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருடன் சமாதானப் பேச்சுவார்த்தை?

தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும்!- விக்கிரமபாகு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:51.35 AM GMT ]
தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு கருணாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி தவிர்க்க முடியாதது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி யினர் கூட்டிணைந்து ஒரு வேட்பாளரை தேர்தலில் களமிறக்குவார்கள்.
அதன் மூலம் அரசாங்கத்திற்கு சார்பாகவுள்ள இனவாத அடிப்படையிலான வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்புக் காணப்படுவதால், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
இந்நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும். அவரையே பொது வேட்பாளராக முன்னிறுத்தி, வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்நாட்டில் அதிகாரப் பரவலாக்கலுக்கான வழி பிறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr3.html
ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருடன் சமாதானப் பேச்சுவார்த்தை?
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:36.49 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னுடன் அரசாங்கம் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளது.
இந்தப் பிரதிநிதிகள் குழுவிற்கு பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தவும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் சயிட் அல் ஹுசெய்னிற்கு விளக்கம் அளிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் பற்றிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkr5.html

Geen opmerkingen:

Een reactie posten