woensdag 12 november 2014

வடக்கில் அதி­காரப் பகிர்வு என்­பது செயற்­பாட்டு ரீதி­யா­ன­தாக அமைய வேண்டும்!- அமைச்சர் ராஜித


நந்தன குணதிலக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளார்?
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 12:45.04 AM GMT ]
பாணந்துறை நகர சபைத்தலைவரும் களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான நந்தன குணதிலக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்குமாறு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் அவரும் பங்கேற்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால செயற்பாட்டாளரான அவர், ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்டார்.
இதுதொடர்பில் அவரிடம் வினவிய போது, மாற்றம் ஒன்று ஏற்படும் என்றாலும் இன்று அல்லது நாளைக்கு மாற்றம் ஏற்படாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu3.html


ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் அரசாங்கம் கடன் வாங்கி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கிறது: ஐ.தே.க
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 01:54.06 AM GMT ]
ஊழல் மோசடிகளில் ஈடுபடும் நோக்கில் அரசாங்கம் கடன் வாங்கி அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சொற்பளவிலான சம்பள உயர்வு போதுமானதல்ல. அரச ஊழியர்களை ஏமாற்றாது, குறைந்தபட்சம் 10000 ரூபாவிலேனும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த போதிலும் உள்நாட்டில் மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதித்து, சாதாரண பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கக் கூடாது.
அரசாங்கம் முடிந்தளவு கடன் பெற்றுக்கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்கின்றது.
எந்தவிதமான பொருளாதார நோக்மும் இன்றி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியதல்ல.
1 வீதமானவர்கள் அதிகளவு பணத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். ஏனைய 99 வீதமானவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
பொருளாதார அபிவிருத்தி நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியாக இருக்க வேண்டும்.
வறுமை 6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அப்படி என்றால் ஏன் மூன்று வேளைகளும் உண்ண முடியாத வறிய மக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது?
பொய்யான புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக மக்களை அரசாங்கத்தினால் ஏமாற்றிவிட முடியாது என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnu6.html
பொது வேட்பாளருக்கு நிச்சயம் ஆதரவளிப்பதாக கூறவில்லை: சுரேஸ்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 04:56.12 AM GMT ]
பொது வேட்பாளருக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக தாம் கூறவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு சவால் விடுக்கக்கூடிய ஒர் பொது வேட்பாளரே தேவை எனக் குறிப்பிட்டேன்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய தைரியமான பொது வேட்பாளர்கள் எவரும் இருக்கின்றார்கள் என சவால் விடுத்திருந்தேன்.
திட்டவட்டமாக பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிப்பதாக நாம் கூறவில்லை.
எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள பொது வேட்பாளர்கள் முன்வந்தால் அது குறித்து கவனம் செலுத்தத் தயார் என குறிப்பிட்டேன் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய பொது வேட்பாளருக்கு ஆதரளிக்கத் தயார் என சுரேஸ் பிரேமசந்திரன் கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஊடகத்தில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று நிச்சயமாக ஆதரவளிப்பதாக தாம் கூறவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி  -   தமிழர் பிரச்சினையை தீர்க்கக்கூடிய பொதுவேட்பாளருக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு


http://www.tamilwin.com/show-RUmszBSWKYnvz.html


வடக்கில் அதி­காரப் பகிர்வு என்­பது செயற்­பாட்டு ரீதி­யா­ன­தாக அமைய வேண்டும்!- அமைச்சர் ராஜித
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 05:17.43 AM GMT ]
வடக்­கிற்­கான விஜ­யத்தின் போது ஏனை­யோ­ருக்கு இருக்­கின்ற பிரச்­சி­னைகள் எனக்கு கிடை­யாது. வடக்கின் முத­ல­மைச்சர் முதல் அனைத்து அமைச்­சர்­களும் என்­னுடன் இணைந்தே
செயற்­ப­டு­கின்­றனர் என்று கடற்­றொழில் அபி­வி­ருத்தி அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
அதி­காரப் பகிர்வு என்­பது வாய் வார்த்­தை­க­ளாக இருப்­பதை விட அது செயற்­பா­டு­க­ளா­கவே அமைய வேண்டும் என்றும் கூறினார்.
வடக்கில் என்­னதான் பிரச்­சினை இருந்­தாலும் நாம் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கிறோம். அதேபோல் அவர்­களும் எம்­முடன் மிகவும் நல்ல முறையில் செயற்­பட்டு வரு­கின்­றனர் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செலவுத் திட்­டத்தின் கடற்­றொழில் அபி­வி­ருத்தி அமைச்சு மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் ராஜித மேலும் கூறு­கையில்,
வடக்கின் மீனவர் தொழிற்­று­றையின் அபி­வி­ருத்­திக்­கென 1800 மில்­லியன் ரூபா­வினை ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கின்றோம். தேசிய ரீதி­யி­லான வடக்கின் மீன் உற்­பத்­தியை ?????? வீத­மாக உயர்த்­து­வதே எனது எதிர்­பார்ப்­பாகும்.
அதே­போன்று யுத்தம் கார­ண­மாக கிழ்க்கின் மீன் உற்­பத்­தி­யா­னது 3 வீத­மாக வீழ்ச்சி கண்­டி­ருந்த போதும் அது தற்­போது 23 வீத­மாக உயர்­வ­டைந்­தி­ருக்­கின்­றது. இது குறித்து மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும்.
மேலும் இர­ணை­மடு குளத்­திட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கென 400 மில்­லியன் ரூபாவை செல­வீடு செய்­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதன் மூலம் முழு வடக்­கிற்கும் நீர்ப்­பா­ச­னத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.
வட மாகாண சபையின் கடற்­தொ­ழிற்­துறை அமைச்சர் என்­னுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கிறார். நான் வடக்­கிற்கு விஜயம் மேற்­கொள்ளும் போது அவர் என்­னு­ட­னேயே இருப்பார். வடக்­கிற்­கான விஜ­யங்­களின் போது ஏனை­யோ­ருக்கு ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னைகள் எனக்குக் கிடை­யாது.
அண்­மையில் நான் வடக்­கிற்கு சென்­றி­ருந்தேன். அப்­போது வட­மா­காண முத­ல­மைச்சர் தனது அமைச்­சர்­க­ளுடன் வருகை தந்து வெற்­றிலை வழங்கி மலர்­மாலை அணி­வித்து வர­வேற்றார்.
அது மாத்­தி­ர­மின்றி பிர­தான ஆச­னத்தில் என்னை அமரச் செய்து வடக்கு கிழக்கு பிரச்­சி­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர். வடக்கில் கடற்­றொழில் துறை அமைச்சர் தனது செயற்­பா­டு­களை அவ­ரா­கவே முன்­னெ­டுக்­கு­மாறு பணித்­தி­ருக்­கிறேன்.
அது மாத்­தி­ர­மின்றி வட­மா­காணம் உட்­பட ஏனைய மாகாண கடற்­றொழில் அமைச்­சுக்கும் தேவை­யான நிதி­யினை வழங்­கி­யி­ருக்­கின்றோம். நான் வடக்­கிற்கு சென்ற போது குழுக்­களின் பிரதி தலைவர் முரு­கேசு சந்­தி­ர­கு­மாரும் என்­னுடன் வருகை தந்­தி­ருந்தார்.
அதே­போன்று வட­மா­காண கடற்­றொழில் அமைச்­சரும் என்­னு­ட­னேயே இருந்தார். நாம் எல்­லோரும் அங்கு ஒன்­றி­ணைந்தே செயற்­ப­டு­கிறோம்.
இத்­த­கைய செயற்­பா­டு­களை அதி­காரப் பகிர்வு என்று கூற முடியும். அதி­காரப் பகிர்வு என்­பது வாய் வார்த்­தை­க­ளாக மட்டும் இருந்து விடு­வதில் எந்த பயனும் கிடை­யாது. மாறாக அது செயற்­பாட்டு ரீதி­யா­ன­தாக அமைய வேண்டும். அதனை செயற்படுத்தவும் வேண்டும்.
மேலும் என்னதான் பிரச்சினை இருப்பினும் வடக்கில் நாம் அந்த மக்களுடன் இணைந்தே செயற்படுகிறோம். அவர்களும் எம்முடன் மிகவும் நல்ல முறையிலேயே இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இதில் எம்மிடத்தில் எந்தப் பிரச்சினையும் கிடையாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnv0.html

Geen opmerkingen:

Een reactie posten