[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 08:16.03 AM GMT ]
கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பெண்களும், களியாட்ட விடுதி உரிமையாளர், முகாமையாளர் உள்ளிட்ட மேலும் இருவர் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறும் வகையில் களியாட்ட விடுதியொன்றை நடத்திச் சென்றமை, இரவு நேரத்தில் பெண்களை கடமையில் ஈடுபடுத்தியமை, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையிலான ஒலிபெருக்கி பாவனை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் குறித்த களியாட்ட விடுதியை சோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் அனுராதபுரம் இலங்கையின் புனித நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnq7.html
ஹுசைனின் இலங்கை தொடர்பான கருத்துக்கு பான் கீ மூன் ஆதரவு!
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 08:45.06 AM GMT ]
அதுமட்டுமல்லாது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்குத் தேவையான எல்லா ஒத்துழைப்பினையும் கண்டிப்பாக வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தினை பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையினைப் பற்றியும் ஆணையாளரைப் பற்றியும் தொடர்ந்து அவதூறாகவும் இழிவான வார்த்தைகளையும் உபயோகித்தும் விமர்சித்தும் வருகின்றமையைக் கண்டித்ததுள்ளதுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnry.html
நாடாளுமன்றில் ஆளும் கட்சி அமைச்சர்கள் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம்.
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 08:59.56 AM GMT ]
மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கும் சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவிற்கும் இடையில் இவ்வாறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டுக்கான வரவு செலுவுத் திட்ட 7ம் நாள் விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது.
மீன்பிடித்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்று விவாதிக்கப்பட்டது.
அண்மையில் மீன்பிடித்துறை அமைச்சிற்கு முன்னால் நடைபெற்ற போராட்டம் மீனவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விவாதத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரட்ன சிரேஸ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் போது இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் அமைச்சர் ராஜித அவையை விட்டு வெளியேறிச் சென்றதாக நாடாளமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnrz.html
Geen opmerkingen:
Een reactie posten