dinsdag 11 november 2014

நானுஓயா டிப்பர் வாகனம் விபத்து - சாரதியும் நடத்துனரும் வைத்தியசாலை​யில்!

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் பொதுபலசேனா
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 09:08.46 AM GMT ]
ஆளுந்தரப்போ இல்லை எதிர்த்தரப்போ தமது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் பட்சத்தில் தமது அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் என பொதுபலசேனா அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவ்வமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இதனைக் தெரிவித்தார்.
இங்கே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்ப அரசியல் பற்றிப் பேசுபவர்கள், அர்ஜுன ரணதுங்கவின் குடும்ப அரசியல் பற்றியும் பேச வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnr1.html

நானுஓயா டிப்பர் வாகனம் விபத்து - சாரதியும் நடத்துனரும் வைத்தியசாலை​யில்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 09:19.06 AM GMT ]
நுவரெலியாவிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றும், தலவாக்கலையிலிருந்து நானுஓயா வரை நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேர்க்கு நேர் மோதியதில் சாரதியும் நடத்துனரும் காயமடைந்தனர்.
இரண்டு டிப்பர் ரக வாகனத்திலும் பயணித்த சாரதியும் நடத்துனரும் காயம்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை 12 மணியவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியாவிலிருந்து ஹற்றன் நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனத்தில் பிரேக் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten