[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 10:57.50 AM GMT ]
இந்திய மீனவர்கள் 14 பேர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பகல் இவர்கள் கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயமே நெடுந்தீவு கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இதேவேளை ஏற்கனவே 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx3.html
அரசாங்கத்தில் பதவிகளுக்கான போட்டி உக்கிரம் - ஆளும் கட்சியில் இணையும் திஸ்ஸ அத்தநாயக்க? - தொழிலாளர் தேசிய முன்னணி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 11:28.43 AM GMT ]
அமைச்சர்கள் சிலர் விலகியதால் ஏற்பட்ட பதவி வெற்றிடங்கள் மற்றும் கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கான பதவிகளை பெறுவதில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல்களின் எதிரெலியாக ரூபாவாஹினி தொலைக்காட்சியில் இன்று காலை 7 மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்த ஆயுபோவன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இறுதி நேரத்தில் நிராகரித்துள்ளார்.
புதிய பதவிகளுக்கு அமைச்சர்கள் எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா, டி.எம். ஜயரத்ன, விமல் வீரவன்ஸ ஆகியோர் இடையில் பெரும் கருத்து மோதல்கள் உருவாகியுள்ளன.
இந்த நிலைமையில், அமைச்சர் விமல் வீரவன்ஸ, எஸ்.பி. திஸாநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா ஆகியோரை இலக்கு வைத்து சொல் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்து அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோர் அமைச்சரவையின் ஐக்கியத்தை பாதுகாக்க பெரும் சிரத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஐ.தே.கவின் முக்கிய உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவார்?
ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய முதன்மை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பெயரும் உலவுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பும் இதனை உறுதி செய்துள்ளதுடன் குறித்த உறுப்பினரை கட்சியின் கூட்டங்களில் இருந்து ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் வைத்து நாளை பல கட்சிமாறல் சம்பவங்கள் இடம்பெறலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர் தேசிய முன்னணி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தொழிலாளர் தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.
முன்னணியின் தலைவரான பிரதியமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் ஹட்டனில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து விலகி தொழிலாளர் தேசிய முன்னணியில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.
திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி எதிரணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது திகாம்பரதை ஜனாதிபதி பிரதியமைச்சராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx4.html
கருணா குழு மீதான வழக்கு! கொழும்பிற்கு ஒரு சட்டம்! வட கிழக்கிற்கு ஒரு சட்டமா? நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 12:08.20 PM GMT ]
என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தை முன்வைத்ததுடன்,
மேலும் தனது வாதத்தில் 2004ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி வெள்ளவத்தையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இலங்கை குடியரசின் யுத்த இராணுவத்துடன் சேர்ந்து கடமையாற்றிய
கருணா கூட்டத்தின் உறுப்பினர்கள் நான்கு பேரான தங்கராஜா தப்பரமூர்த்தி, நல்லையா குகராஜா, ராஜா ராசவேலி, செங்குராஜா ஆகிய நால்வரையும் வெடி வைத்துக் கொல்வதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான நியூட்டனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி,
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கி அக்குற்றங்களை புரிந்துள்ளதாக கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கொழும்பு மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5ம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதே தினமான ஜுலை மாதம் 5ம் திகதி கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக 2000ம்ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கபில அம்மான் சங்கீதன் மற்றும் மாதவ மாஸ்டரின் கீழ் ஆயுதப்பயிற்சி பெற்றதாக வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டன.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி கணேசரத்னம் சாந்ததேவன் பயங்கரவாதத் பொலிஸ் பிரிவுப் பொலிஸ் அத்தியட்சகர் ஒசான் ஹேவாவிதாரனவிற்கு வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டுமே ஒரே அரச சாட்சியாகக் கொண்டு சட்டமா அதிபரினால் கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றிலும் வவுனியா மேல் நீதிமன்றிலும் தாக்கல் செய்யப்பட்டன.
வவுனியா மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிரியினால் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்படவில்லையென குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நிராகரித்து 14-07-2014ம் திகதி நீதிபதி கட்டளை வழங்கியுள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டதையடுத்து, 14-08-2014ம் திகதி அரச சட்டத்தரணி கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கு வேறு சான்றுகளில்லையென நீதிமன்றிற்கு அறிவித்ததையடுத்து வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எதிரியை விடுதலை செய்துள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எதிரியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலமாக ஏற்றுக்கொள்ள முடியாதென நிராகரித்துள்ளார்.
எனவே வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மீண்டும் இந்த நீதிமன்றம் கேள்விக்குட்படுத்த முடியாதுதென தனது வாதத்தை முன்வைத்த போது,
சட்டமா அதிபர் சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி பிரியாணி அபேகுணவர்தன தனது வாதத்தில் வவுனியா மேல் நீதிமன்றின் கட்டளை சமமான அதிகாரத்தைக் கொண்ட இந்த நீதிமன்றத்தை கட்டுபடுத்தாதெனவும் எதிரியினால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மை விளம்பல் விசாரணையை ஆரம்பிக்கும்படியும் நீதிமன்றத்தை வேண்டிக்கொண்டார்.
இவ்வேளையில் அரச சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா மேலும் தனது வாதத்தில்,
ஒரு நீதிமன்றின் தீர்ப்பு சமமான அதிகாரம் கொண்ட மற்றைய நீதிமன்றை கட்டப்படுத்தாது என அரசசட்டத்தரணி முன்வைத்த சட்டவாதத்தை நான் மறுதலிக்கவில்லை.
ஆனால் இந்த வழக்கின் விடயப்பொருள் ஒன்றாகும். ஒரே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இரண்டு மேல் நீதிமன்றங்கள் விசாரணை செய்ய வேண்டும் என அரச சட்டத்தரணி நீதிமன்றத்தை கோருகின்றார் அவரது கோரிக்கை சட்ட ரீதியான கோரிக்கையல்ல.
சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல் கைதியின் ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சான்றாகக் கொண்டு அந்தக் கைதிக்கு எதிராக ஒன்றிற்கு மேற்பட்ட ஐந்திற்குற்பட்ட பல குற்றச்சாட்டுப் பத்திரங்கள் நாட்டின் பல மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குக்களும் உண்டு.
தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்களில் மேல் நீதிமன்றம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் விசாரணையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கைதி சுயவிருப்பத்தில் வழங்க வில்லையென நிராகரித்தால் மற்றைய வழக்குக்களை நடாத்த வேறு சான்றுகள் இல்லையெனில் வழமையாக மற்றைய வழக்குக்களை சட்டமா அதிபர் மீளப்பெறுவதே நடைமுறையாகும்.
இந்த வழக்கின் எதிரியாக பெயர்குறிப்பிடப்பட்டிருக்கும் கணேசரத்னம் சாந்ததேவனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுப் பத்திரங்களிலும் ; குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டுமே சட்டமா அதிபர் சான்றாக குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்றம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கைதி சுயவிருப்பத்தில் வழங்க வில்லையென கட்டளை வழங்கியுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற கட்டளையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இந்த நீதிமன்றத்திற்கும் அரச சட்டவாதிக்கும் கையளித்துள்ளேன். எனவே வழமைபோல இந்தக் வழக்கு சட்டமா அதிபரினால் மீளப்பெறப்பட வேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் 35 வருடங்களின் பின்னர் வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொழும்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சட்டமா அதிபர் இந்த நீதிமன்றத்தை கோருகின்றார்.
இந்த வழக்கில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டான கருணா கூட்டத்தின் உறுப்பினர்களான நான்கு பேரான தங்கராஜா தப்பரமூர்த்தி, நல்லையா குகராஜா, ராஜா ராசவேலி, செங்குராஜா ஆகிய நால்வரையும் வெடி வைத்துக் கொல்வதற்காக இந்த வழக்கின் எதிரி சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச் சாட்டுக் காரணமாக எதிரியை தொடர்ந்தும் தடுத்து வைத்து தண்டனை வழங்கும் நோக்கத்தில் வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மீண்டும் இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சட்டமா அதிபர் கோருகின்றாரா என்ற சந்தேகத்தை உருவாக்குகின்றது.
வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் வழங்கிய கட்டளைக்கு எதிராக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவை தாக்கல் செய்ய முடியும்.
ஆனால் ஒரே குற்றஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒரு வழக்கின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் நிராகரிக்கப்பட்ட பின்னர் அந்தக் கட்டளையை அரச சட்டத்தரணி இந்த நீதிமன்றில் மீளாய்வு செய்வது சட்டவிரோதமான செயலாகும்.
இச்செயல் கட்டளை வழங்கிய வவுனியா நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டுமென விண்ணப்பத்தை சட்டமா அதிபரின் பிரதிநிதியான அரச சட்டத்தரணி கோருவது வியப்பிற்குறியதென்பதுடன்,
சட்டமா அதிபரின் இந்தச் செயற்பாடு இலங்கையில் ஒரே ஒரு சட்டமா அதிபரே உள்ளாரா அல்லது வடக்கு பிரிக்கப்பட்டு தமிழீழத்திற்கு ஒரு சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுகின்றதென சிரேஸ்டசட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தை முன்வைத்தார்.
அரச சட்டதரணியினதும் எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி; தவராசாவினதும் வாதத்தை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில்,
குற்றச்சாட்டுப் பத்திரத்தை தாக்கல் செய்த சட்டமா அதிபர் குற்றச்சாட்டுப் பத்திரத்தை மீளப்பெறாவிடின் நீதிமன்றம் வழக்கை விசாரணை செய்து மட்டுமே தனது தீர்ப்பை வழங்க முடியுமென குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை மார்கழி மாதம் 3ம் திகதிக்கு திகதி குறிப்பிட்டு சாட்சிகளை அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx5.html
Geen opmerkingen:
Een reactie posten