zondag 23 november 2014

புலிகளைக்காட்டி கிலிகளை ஏற்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளை எடுக்க அரசு முயற்சி!-அரியநேத்திரன் பா.உ!

48 மணித்தியாலத்தில் 350 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்- பொலிஸ் இடமாற்றம் தற்காலிமாக நிறுத்தம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 09:53.13 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புச் செய்வதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னரும் அறிவிப்புச் செய்து 24 மணித்தியாலத்துக்குள்ளும் 350 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் கண்காணிப்புக்கான பெப்ரல் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாகத் தகவல் பெற்றுத் தரும் விசேட பொலிஸ் செயலகத்தின் அதிகாரிகள் 350 பேரே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர்ந்த மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் நேற்று முன்தினமும் நேற்றும் மாற்றப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் இடமாற்றம் தற்காலிமாக நிறுத்தம்: பொலிஸ் தலைமையகம்
பொலிஸ் அதிகாரிகள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சுமார் 10 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவிருந்தது.
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், சார்ஜன்ட்டுகள், உதவி பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் இதில் அடங்குகின்றனர்.
இவர்களில் அதிகளவானவர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு காரணமாக தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த பணி இடமாற்றங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆமலுக்கு வரும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgxy.html
ஐ.தே.கட்சியின் சிலர் அரசில் இணைய உள்ளனர்: ரோஹன திஸாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 10:10.56 AM GMT ]
எவரும் அரசாங்கத்தில் இருந்த வெளியேற மாட்டார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் அரசாங்கத்தில் இணைய உள்ளதாகவும் பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சந்திரிக்காவின் சூழ்ச்சி காரணமாகவே மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் அரசாங்கத்தில் இருந்து விலகினர்.
மைத்திரிபால சிறிசேன அதில் சிக்கிக்கொண்டார்.
அடுத்த சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலர் அரசாங்கத்தில் இணைய உள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த எவரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற மாட்டார்கள்.
உள்ளூராட்சி சபைகளை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள உள்ளனர் எனவும் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகி  செல்பவர்கள் விலகி  செல்லட்டும் என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இருக்க முடியாதவர்கள் சென்றால்தான் எமக்கு பலம் கிடைக்கும்.
26 பேர் குறைந்து போனாலும் அரசாங்கத்திடம் பலர் உள்ளனர். போகிறேன் என்று கூறி போகிறவர்கள் இறுதியில் குளத்தில்தான் குதிக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx1.html
புலிகளைக்காட்டி கிலிகளை ஏற்படுத்தி சிங்கள மக்களின் வாக்குகளை எடுக்க அரசு முயற்சி!-அரியநேத்திரன் பா.உ
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 10:32.57 AM GMT ]
வரும் ஜனாதிபதி தேர்தலில் வழமை போன்று இனவாத கருத்தையும் புலிகளின் பெயரையும் பயன்படுத்தி சிங்கள மக்களை ஏமாற்றும் பிரசார கைங்கரியத்தை அரச அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர். இதில் தமிழ் மக்களாகிய நாம் அவதானமாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என பா.அரியநேத்திரன் எம்.பி. தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அரியநேத்திரன். பா.உறுப் பினரிடம் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லையாயினும் அது தொடர்பாக ஆழமாகமாக பரீசீலித்து வருவதாகவும் வடகிழக்கில் உள்ள மக்கள் கட்சி பிரமுகர்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தலைவர் சம்பந்தன் ஐயா கூறியுள்ளார்.
ஆனால் அமைச்சர்களான சுசில் பிரேமஐயந்த, டலஸ் அழகப்பெரும, நிமால் சிறிபால சில்வா, மற்றும் எஸ்.பி.திசாநாயக்க போன்றவர்கள் மேற்குலக சதி என்றும் புலம்பெயர் மக்களின் பின்னணி என்றும் புலிகளின் ஆலோசனை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு எனவும் சிங்கள மக்களிடையே பச்சைப் பொய்களையும் இனவாத கூச்சல்களையும் பரப்பி வருகின்றமையை இப்போது காணமுடிகிறது.
கடந்த ஐனாதிபதி தேர்தலின் போதுகூட சரத் பொன்சேகா தொடர்பில் இனவாதமும் புலிகளினது பெயரையுமே அரசு தேர்தலுக்கான மூலதனமாய் பயன்படுத்தி பாரிய துவேஷத்தை கட்டவிழ்த்து இனவெறித்தன்மையை வெளிப்படையாகவே காட்டி அந்த தேர்தலை வெற்றி கொண்டதை நாம் அறிவோம்.
தற்போதய இந்த ஜனாதிபதி தேர்தலிலும் அதே முறையை கையாள்வதற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் புலம்பெயர் உறவுகளையும் சிங்கள மக்கள் மத்தியில் பிளையான கருத்தை விதைத்து பொய்பிரசாரங்களை மேற்கொள்வதையும் தெளிவாக அறியமுடிகிறது.
சிறிலங்காவின் ஜனாதிபதியாக யார் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர்களுக்கு விமோர்சனம் கிடைக்கப் போவதில்லை. அதற்காக இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் கடைப்பிடிக்க வேண்டும் என நான் கூறவரவில்லை.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் உள்ளன, இதற்கிடையில் வேட்புமனுத் தாக்கல் செய்யும். தினம் நெருங்கினாலும் இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடும் வாய்ப்பு இல்லை.
முக்கியமான வேட்பாளர் இருவருமே ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதாவது சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான மகிந்த ராசபக்சவும், அதேகடசியின் பொதுச்செயலாளரான மைத்திரிபால சிறிசேனவும் தான் இவர்களில் ஒருவர் தான் 7வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாவார்.
இந்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவு எமது வடகிழக்கு மக்களின் ஒருமித்த முடிவாக அமையும். அந்த முடிவானது அவசரமாக இப்போதைக்கு கூறவேண்டும் என்று யாரும் எண்ணுவது பொருத்தப்பாடாக இருக்காது.
நிச்சயமாக தேர்தலுக்கு முன் உத்தியோகபூர்வமாக எமது தலைமைகளால் அந்த முடிவு வரும். அதுவரை நாம் அமைதி காப்பதே இப்போது நாம் செய்ய வேண்டிய காரியமாகும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx2.html

Geen opmerkingen:

Een reactie posten