[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 02:12.06 AM GMT ]
தனியார் தொலைக்காட்சி ஒன்று தம்மை விவாதம் ஒன்றுக்கு வருமாறு அழைத்த போது அதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.
எனினும் அவருக்கு பதிலாக இறுதி நேரத்தில் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டார். இந்த செய்தி தமக்கு தரப்படவில்லை.
இது தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனரிடம் கேட்ட போது நான் எல்லோரும் நண்பர்கள். பிரச்சினையின்றி செயற்படுவோம் என்று கூறப்பட்டது.
எனினும் தாம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது தமது கைடயக்க தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டன.
அத்துடன் 37வது மாடியில் நிகழ்ச்சி இடம்பெற்ற வேளையில் உலக வர்த்தக மையத்தின் மூன்றாம் மாடியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் குருநாகலில் ஆசிரியை ஒருவரை முழந்தாளிட செய்த மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஆகியோர் தாக்குதல் தயார் நிலையில் நின்றிருந்தனர்.
எனினும் தமது பாதுகாப்பு அலுவலர்கள் தம்மை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் என்று ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார்.
இந்தநிலையில் எதிர்காலத்தில் தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லும் போது ஜேம்ஸ் பொண்ட் பாணியிலேயே செல்லவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu5.html
கள்ளநோட்டுக் கும்பலின் தலைவன் கைது!- தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்பனை செய்தவர் கைது
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 02:17.39 AM GMT ]
அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நபர் கம்பியூட்டர் மூலமாக போலி நாணயத்தாள்களை அ்ச்சிட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் எட்டியாந்தோட்டை அருகில் உள்ள கிதுல்கல பிரதேசத்தில் கடந்த 13ந் திகதி இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது கள்ளக்காதலியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது அவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஐயாயிரம் ரூபா மற்றும் ஆயிரம் ரூபா நோட்டுகளை லட்சக்கணக்கில் அச்சடித்து இவர் புழக்கத்தில் விட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கள்ள நோட்டுக்களை அச்சடிப்பதற்காக இவர் பயன்படுத்திய உபகரணங்கள் நேற்று மாலை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மற்றும் அவர் பயன்படுத்திய உபகணரங்கள் இன்று குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்பனை செய்தவர் கைது
புகையிலை தூள் அடைக்கப்பட்ட 1050 டின்களை (1 கிலோ 500 கிராம்) அக்கரப்பத்தனை நகர கடை ஒன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயற்சித்த கடை உரிமையாளரை நேற்று அக்கரப்பத்தனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அப்பிரதேச வாசிகள் வழங்கிய தகவலின்படி விரைந்து சென்ற அக்கரப்பத்தனை பொலிசார் குறித்த சந்தேக நபரை விசாரணைக்கு உட்படுத்தியபோது புகையிலை தூள் அடைக்கப்பட்ட 1050 டின்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இது மாணவா்களுக்கு அதிகளவாக விற்பனை செய்யப்படுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இது தடை செய்யப்பட்ட போதைபொருள் என்பது குறிப்பிடதக்கது.
கைது செய்த நபரை பொலிசார் பிணையில் விடுவித்துள்ளதாகவும் அவருக்கு எதிராக வழக்கு தாககல் செய்துள்ளதாகவும் மீண்டும் இம்மாதம் 21ஆம் திகதி நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்த இருப்பதாகவும் அக்கரப்பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu6.html
நாட்டை பாதுகாக்க இன்னொரு ஆயுதப் போராட்டம் அவசியம்: அனுரகுமார
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 02:36.11 AM GMT ]
ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர்களை நினைவுகூரும் கார்த்திகை வீரர்கள் தினம் நேற்று கொழும்பு விகாரமகா தேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அனுரகுமார திசாநாயக்க,
ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம் நடத்திய காலங்களை விட நாடு இன்று பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு மொத்தமாக தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ராஜபக்ச குடும்பத்தினர் இன்னும் பல நூற்றாண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கச் செய்யும் வகையில் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது.
1980 காலப்பகுதியை விட மோசமான அழிவுப் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் இதனை மீட்டெடுக்க இன்னொரு போராட்டம் தேவை என்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய ஜனாதிபதி அதனை பகிரங்கமாக மீறிக் கொண்டிருக்கின்றார்.
எனினும் அதனை குறித்து எழுத ஊடகங்கள் அச்சப்படுகின்றன, நாட்டின் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அனைத்து வகையான வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன, நாடு சீரழிந்துவிட்டது.
இதனை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பொறுப்பு நமக்கு உள்ளது ,அதற்காக ஜனநாயக வழியில் போராட ஜே.வி.பி. தயாராக உள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ அமைதியாக அதிகாரத்தை கைவிடமாட்டார் – அனுரகுமார திஸாநாயக்க
மகிந்த ராஜபக்ஷ அதிகார மோகம் கொண்ட ஆட்சியாளர் என்பதால் அமைதியாக அதிகாரத்தை கைவிட்டுச் செல்ல மாட்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஜே.வி.பி கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ஷ இரண்டாம் தவணை பதவிக்கு வரும் போது மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கி முடித்து விட்டார்.
இப்படியான அதிகார மோகம் கொண்ட ஆட்சியாளர்கள் அமைதியான அதிகாரத்தை கைவிட்டு செல்லமாட்டார்கள்.
1989 ஆம் ஆண்டில் நாட்டின் வெளிநாட்டு கடன் தொகையானது 27 ஆயிரத்து 380 கோடி ரூபாவாக இருந்தது.
தற்போது நாட்டின் வெளிநாட்டு கடன் 9 லட்சத்து 12 ஆயிரத்து 130 கோடி ரூபா உள்ளது.நாடு கடன் என்ற பொறியில் சிக்கவைக்கப்பட்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு வெளிநாட்டு கடனுடன் ஒப்பிடும் போது அது 33 வீதமாக அதிகரித்துள்ளது.
89 ஆம் ஆண்டு தனி நபர் கடன் 15 ஆயிரத்து 277 ரூபா இருந்தது.
தற்போது அது 4 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu7.html
Geen opmerkingen:
Een reactie posten