zaterdag 15 november 2014

இறந்து போன உடல்களால் ஜனநாயகத்தை ஏற்படுத்தமுடியாது!- நந்தன குணதிலக்க!

வெளிநாட்டு சேவைகளுக்கு செல்வோருக்கு கரேத்தே, ஜூடோ கலைகளும் அவசியம்- ஐ.தே.க
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:37.28 AM GMT ]
இலங்கையின் வெளியுறவு அமைச்சி;ன் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட பிரித்தானியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ், நியூயோர்க் பொலிஸில் முறைப்பாட்டை செய்திருக்கலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல இந்தக் கருத்தை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
தாம், தாக்கப்பட்டமை குறித்து அவர் இலங்கையின் அதிகாரிகளுக்கே முறையிட்டார்.
இதன் காரணமாக அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இதற்கு பதிலாக அவர் நியூயோர்க் பொலிஸில் முறையிட்டிருந்தால், அவர்கள் தாக்குதல் நடத்தியவரை கைதுசெய்திருப்பர் என்று கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
முன்னர் தாம், வெளியுறவு பிரதியமைச்சராக இருந்த போது வெளிநாட்டு சேவைக்காக ஆங்கிலம் மற்றும் பிரெஞ் மொழிகள் அவசியமாக கருதப்பட்டன.
எனினும் இன்று சுய பாதுகாப்பு பயிற்சிகளை கொண்ட எவரும் வெளிநாட்டு சேவையில் இணைய முடியும்.
இதன் அடிப்படையில் இன்று வெளியுறவு சேவையில் இணையும் எவரும் கராத்தே, ஜூடோ கலைகளை பயில வேண்டும் என்று கிரியெல்ல சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் லச்மன் கிரியெல்லயின் கருத்துக்களுக்கு தாம் பதிலளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்ட சஜின் வாஸ்ää தாம் அனைத்து விடயங்களையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதாக கூறினார்.
இராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டியுள்ளது – ஐ.தே.க
இராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு தொடர்பிலான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்ற போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இராஜதந்திர சேவை குறித்து திருப்தி அடைய முடியாது.
இராஜதந்திர சேவைக்கான வெற்றிடங்களை நிரப்பும் போது நாம் மொழியறிவு, ஏனைய தகுதிகள் பற்றியே கவனம் செலுத்தினோம்.
எனினும் தற்போது இராஜதந்திரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் தற்காப்பு பயிற்சிகளை கற்றுள்ளனரா என்பது பற்றி பார்க்க வேண்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கியுள்ளது. இதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYluz.html
திருப்தியற்ற நிலை குறித்து பேச வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்!- வெளியுறவு அமைச்சு
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:48.29 AM GMT ]
வெளிநாடுகளின் இராஜதந்திரிகள் எதிர்வரும் புதன்கிழமையன்று இலங்கை வெளியுறவு அமைச்சினால் கொழும்பில் உள்ள அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், திருப்தியற்ற முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வடக்கில் உள்ள ஒருவர், சாட்சியங்களை சேகரித்து ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கு அனுப்பியமை குறித்தும் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசாரணை தகவல் சேகரிப்புக்களுக்கான காலம் முடிவடைந்த நிலையில் அதற்கு பி;ன்னர் சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றமை குறித்து அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தமது அதிருப்தியை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu0.html
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: ஜாதிக ஹெல உறுமய
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 01:56.53 AM GMT ]
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரபல்யமான அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் கட்டமாக சந்திரிக்காவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் சந்திப்பு நடத்தப்படவில்லை.
சந்திரிக்காவுடன் மட்டுமன்றி நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம் என உதய கம்மன்பில சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்: ஜாதிக ஹெல உறுமய
இலங்கையின் நேரடியான மற்றும் செயற்பாட்டு ரீதியான அரசியல் கட்சி என்பதால் ஜாதிக ஹெல உறுமய தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட பேச்சுவார்த்தைகளை நடத்தும் என மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் ஜாதிக ஹெல உறுமயவிற்கு உள்ள புதிய கொடுக்கல் வாங்கல் என்ன என்று கொழும்பு ஊடகம் ஒன்று கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த புதிய கொடுக்கல் வாங்கல்களும் இல்லை. எமது கட்சி இலங்கையின் நேரடியான மற்றும் செயற்பாட்டு ரீதியான அரசியல் கட்சி.
இதனால், நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது போல் முக்கியமான அரசியல் பிரமுகர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்.
இதனடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் எந்த உடன்பாட்டுக்கோ, நிபந்தனைக்கோ வரவில்லை.
முன்னாள் ஜனாதிபதியுடன் மாத்திரமல்ல நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu3.html
இறந்து போன உடல்களால் ஜனநாயகத்தை ஏற்படுத்தமுடியாது!- நந்தன குணதிலக்க
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 02:01.00 AM GMT ]
இறந்துபோன உடல்களால் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என்று பாணந்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் இருந்து விலகி விட்டதாக கூறும் அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராக ஏற்கனவே தாம் பதவிவிலகல் முடிவை எடுத்திருக்க வேண்டு;ம் என்று குறிப்பிட்ட அவர், எனினும் ஊழல்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக கூறினார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக செயற்படப் போவதாகவும் நந்தன குணதிலக்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu4.html

Geen opmerkingen:

Een reactie posten