zaterdag 15 november 2014

மஹிந்த, மூன்றாம் தடவை போட்டிக்கான சட்டவிளக்கத்தில் நீதியரசர்களுக்குள் முரண்பாடு!- பலாத்கார கையொப்பம் பெறப்பட்டது!


இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாம் தவணைக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று இலங்கை உயர்நீதிமன்றம் வழங்கிய சட்டவிளக்கத்துக்கு பின்னால் பாரிய உள்ளக பிரச்சினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சட்டவிளக்கம், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் எழுதப்பட்டது.
இந்தநிலையில் குறித்த சட்டவிளக்கம் பொதுமக்களுக்கு தெரியவராது என்பதால், சுதந்திரமாக தமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு எழுதித்தருமாறு ஏனைய நீதியரசர்களை மொஹான் பீரிஸ் கோரியுள்ளார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்சவை புகழ்ந்து பேசும் வகையில் மொஹான் பீரிஸ், மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டு நாட்டில் நல்லெண்ணத்தையும் சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.
அத்துடன், இலங்கையில் உள்ள அரசியல் விமர்சகர்கள், தம்மை தாமே புத்திஜீவிகள் என்ற அழைத்துக் கொள்வோர் என்ற பலரை விளித்து அவர்களை விமர்சனம் செய்திருந்தார்.
இதன்போது நீதியரசர்கள் நான்கு பேர் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்தனர்.
அவர்கள், மொஹான் பீரிஸின் கருத்துடன் முரண்பட்டனர்.
எனினும் குறித்த நீதியரசர்கள் முன்வைத்த கருத்துக்களை எழுத்தில் பெற்றுக்கொள்வதற்கு மொஹான் பீரிஸ் இடமளிக்கவில்லை.
இறுதியில் கடந்த 10ம் திகதியன்று எழுத்து மூல கருத்துக்களை முன்வைக்க பீரிஸ் இடமளித்த போதும் சுமார் நிமிடங்களுக்குள் அவர்களின் வாய்ப்பை தாம் எடுத்துக்கொண்டு சட்டவிளக்கத்தை இறுதிப்படுத்தினார்.
அத்துடன் குறித்த நான்கு நீதியரசர்களிடம் இருந்தும் கையொப்பமும் பலாத்காரமாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYkp3.html

Geen opmerkingen:

Een reactie posten