[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 04:28.59 AM GMT ]
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியாளராக இருந்தவர் களுத்துறை எம்.எம். அம்ஜத்.இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர்.
இலங்கையின் வரலாற்றுச்சாதனையாக குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பாலம் உள்ளிட்ட கீர்த்திமிகு நிர்மாணங்களின் மூளையாகச் செயற்பட்டவர் இவர்தான்.
இந்நிலையில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு நாடு முழுவதும் கீர்த்தியை ஏற்படுத்திக் கொடுத்த மகநெகும திட்டத்தை வடிவமைத்து, அதற்குப் பெயர் சூட்டிக்கொடுத்ததும் இவர்தான்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் வெற்றிக்கு மகநெகும திட்டத்தின் மகத்தான வெற்றியும் ஒரு காரணியாக அமைந்திருந்தது.
அதுமாத்திரமன்றி 2005ம் ஆண்டளவில் முஸ்லிம்களால் கண்டுகொள்ளப்படாத மஹிந்தவுக்கு ஆதரவாக முஸ்லிம்களை ஒன்றுதிரட்டி ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற அந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டிலும் ஆளுனர் அலவி மௌலானா, ஆர்.எப். அஷ்ரப் அலீ, அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, அனுரகுமார திசாநாயக ஆகியோருடன் அம்ஜத்தும் முன்னின்று செயற்பட்டிருந்தார்.
இதன் காரணமாக பின்வந்த காலங்களில் மஹிந்தவின் வலது கரமாகவும் இவர் அறியப்பட்டிருந்தார்.
அமைச்சர்களை விட இவருக்கு மஹிந்தவிடம் செல்வாக்கு அதிகமாக இருந்தது.
தெற்கு அதிவேகப் பாதை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான அதிவேகப் பாதை, களனி கங்கை வழியாக கொழும்புக்குள் அமைக்கப்படும் பறக்கும் பாதை, யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதை என்பவற்றின் திட்டங்கள் , மூலோபாயங்கள் அனைத்திலும் அம்ஜத் பிரதானமாக செயற்பட்டுள்ளார்.
இவை அனைத்தும் நிகழ்காலத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு கீர்த்தியை பெற்றுத்தந்துள்ள திட்டங்களாகும்.
எனினும் தற்போதைய நிலையில் மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சி மீது வெறுப்பு கொண்டுள்ள அம்ஜத், பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்தின ஏற்பாட்டில் மைத்திரிபால சிரிசேனவை சந்தித்து தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இது ராஜபக்ஷ தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv0.html
திஸ்ஸ அத்தநாயக்க திடீர் சுகவீனம்! மருத்துவமனையில் அனுமதி
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:04.11 AM GMT ]
திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஆசிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக கட்சி மற்றும் அரசியல் செயற்பாடுகளில் கடுமையாக ஓடியாடி உழைத்த நிலையில் திஸ்ஸவின் திடீர் சுகவீனம் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சாதாரண சுகவீனமே ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டொரு பரிசோதனைகளின் பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப முடியும் என்றும் ஆசிரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv1.html
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தொடர்ந்தும் ஆதரவு! விதுர விக்ரமநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:14.57 AM GMT ]
தான் மற்றும் தனது தந்தையான ரத்னசிறி விக்ரமநாயக்கவும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கே ஆதரவு வழங்கவுள்ளோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுக்கள் என்பதைவிட அதிலேயே இருக்குமாறு மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளே அதிகம் என, அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல மாற்றங்களை செய்ய வேண்டும் எனவும் விதுர விக்ரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட போதே விதுர விக்ரமநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ளவர்களின் பட்டியலில் ரட்ணசிறி விக்ரமநாயக்க மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv2.html
புதுடில்லி இந்து மாநாட்டை ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:15.33 AM GMT ]
உலக இந்து காங்கிரஸின், மூன்று நாள் அனைத்துலக இந்து மாநாடு நேற்று முன்தினம் புதுடில்லியில் ஆரம்பமானது.
இந்த மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்திய ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்தும், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.
நேற்று முன்தினம் நடந்த அரசியல் அமர்வு ஒன்றுக்குத் தலைமையேற்று உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, அங்குள்ள இந்துக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv3.html
Geen opmerkingen:
Een reactie posten