[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 01:45.31 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆளும் கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதை அடுத்தே இது குறித்து ஆராயப்படுவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் கட்சி பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சுகாதார அமைச்சுப்பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.
இந்தநிலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்ததும், 1988 ஆம் ஆண்டு ஆர்.பிரேமதாஸ நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதையும் கருத்திற்கொண்டே இந்த முடிவு பற்றி யோசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தரப்பு கூறியுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதியன்று நாடாளுமன்ற விசேட அமர்வை அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
அதற்கு சபாநாயகரும் அனுமதி வழங்கியுள்ளார். இந்தநிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமானால், ஜனாதிபதி தலைமையிலான காபந்து அமைச்சரவை அரசாங்கம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியில் இருந்து தப்பிக்க நாடாளுமன்றத்தை கலைக்க தயாராகும் அரசாங்கம்!
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள சவாலில் வெற்றி பெறும் தந்திரமாக நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள். பொது வேட்பாளராக போட்டியிட உள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுக்க உள்ளதாக பெயரை குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியிழப்பதால், தமது சிறப்புரிமைகளை பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க பயன்படுத்த முடியாது.
நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கை ஒன்று இதற்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஜே.ஆர். ஜயவர்தன நாடாளுமன்றத்தை கலைத்தார் எனவும் இதன் காரணமாக ஜே.ஆருக்கு இருந்த ஆறில் 5 பெரும்பான்மை பலம் புதிய ஜனாதிபதியாக தெரிவான ஆர்.பிரேமதாசவுக்கு இல்லாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் பதவிக்கு வந்து 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க போவதாக கூறியிருந்தார்.அவரது இந்த திட்டத்தை தவிடுபொடியாக்கும் நோக்கில் அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்தை எடுக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்புக்கு பின்னர் விசேட நாடாளுமன்ற கூட்டத் தொடரை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அவர் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் சில வேளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையுடன் கூடிய இடைக்கால அரசாங்கத்திடமே நாட்டின் ஆட்சி பொறுப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu3.html
மைத்திரிபால ஜனாதிபதியானதும் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 02:03.04 AM GMT ]
இதன்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்று மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியான பின்னர் 100 நாட்களுக்கு தேசிய அரசாங்கம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
இதில், அனைத்துக் கட்சிகளினதும் அங்கத்தவர்கள் பங்கேற்பர் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர் நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இதனைத் தெரிவித்தார்.
இந்த யோசனையை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.
இந்த தேசிய அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், சிறப்பு நிர்வாக முறைமை போன்றவற்றை ஸ்தாபிக்கவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu4.html
ஜனாதிபதி மஹிந்தவின் சலூன் கதவு பழுதடைந்துள்ளது: ஹரின் பெர்னாண்டோ
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 02:13.52 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வெற்றியீட்ட முடியாது. சனி மாற்றம் ஜனாதிபதிக்கு சரியில்லை.
அண்மையில் சுவரொட்டி ஒன்றில் ஜனாதிபதிக்கு எல்லைகள் கிடையாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
பார்க்கப் போனால் இந்த சுவரொட்டி உண்மையானதுதான். ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதில் ஜனாதிபதிக்கு எல்லைகள் கிடையாது. தரகுப் பணம் பெற்றுக் கொள்வதிலும் எல்லைகள் கிடையாது.
இந்த போட்டி வெற்றியீட்ட வேண்டிய போட்டியொன்று. நாம் எப்படியாவது வெற்றியீட்டுவோம்.
ஆளும் கட்சியின் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்கள் வெளியேறியுள்ளனர்.
சரத் பொன்சேகா, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உதவி செய்யும். ஹக்கீம் விரைவில் ஆளும் கட்சியை விட்டு வெளியேறுவார்.
பெருந்தோட்டப் பகுதிகளின் ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கலிகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் நேற்று அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu5.html
அரசியல் ரீதியாக எவரையும் பழிவாங்கப் போவதில்லை!: ஜனாதிபதி மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 02:39.29 AM GMT ]
தனிப்பட்ட ரீதியில் செய்தாலும் அவர்களை நாங்கள் ஓரம் கட்டி விடுவோம்.
அதிகாரத்தைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 ஆக காணப்பட்டது.
எனினும் தற்போது இந்த எண்ணிக்கை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 127 ஆக உயர்வடைந்துள்ளது.
நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் மொத்த எண்ணிக்கை 161 ஆக காணப்படுகின்றது. இதில் ஒரு சிலர் அண்மையில் சென்று விட்டனர்.
அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியினால் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றல் ஏற்பட்டமைக்கான காரணம், நாம் யாரையும் அவமரியாதை செய்யவில்லை.
நாம் எவரையும் பழிவாங்கவில்லை என்ற காரணத்தினால் இவ்வளவு பேர் இணைந்து கொண்டுள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாணம் தெதுருஓயாவில் நடைபெற்ற நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu6.html
மைத்திரிபாலவையும் சிறையில் அடைக்கக் கூடும்: சரத் பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 02:57.58 AM GMT ]
அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது.
மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மைத்திரிபாலவுடன் குரோத உணர்வுடன் செயற்படுகின்றனர்.எவ்வாறு மைத்திரிபாலவிற்கு எதிராக வழக்குத் தொடர்வது என யோசிக்கின்றார்கள்.
எவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பது என்பது பற்றி திட்டமிடுகின்றார்கள்.
சில வேளைகளில் நான் சிறையில் தூங்கிய அதே மேசையில் மைத்திரிபாலவும் தூங்க நேரிடலாம்.
எனவே இப்போதே உடற்பயிற்சி செய்து உடலை தெம்படையச் செய்து கொள்வது நல்லது.
ஆளும் கட்சியின் ஒரு தொகுதியினருக்கு இன்று புத்தி தெளிந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய எனது சாதாரண தர வகுப்புத் தோழர் ராஜித, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோருக்கு நன்றி பாராட்டுகின்றேன்.
எவ்வாறெனினும் எமது கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய வகையிலான மேடைகளில் ஏறப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் மைதானத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu7.html
ஐ.நா.சபை நோக்கி தமிழர் பிரச்சினை நகர்த்தப்படுகின்றதா?
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 03:02.24 AM GMT ]
இதுவரை ஜெனிவாவில் களமமைத்து தங்கியிருந்த அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தற்போது அமெரிக்கா நோக்கிச் சென்றுள்ளனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டனுக்கும் ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள நியூயோர்க்கிற்கும் அவர்கள் சென்று முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து வருகின்றனர்.
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. ஜெனிவா பணிமனையில் சர்வதேச விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் சாட்சியங்களை அக்குழுவிடம் முன்னிலைப்படுத்து்துவதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பல பாரிய வேலைத்திட்டங்களை செயற்படுத்தி இருந்தன.
எனவே அதன் அடுத்த கட்ட நகர்வாக ஐ.நா. சபையின் கவனத்திற்கு இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்குழு முடிவுகள் வெளிவந்து விடும்.
அதன் பின்பு இந்த முடிவை செயற்படுத்தும் பாரிய பொறுப்பு ஐ.நா.சபையிடமே ஒப்படைக்கப்படும். எனவே அதற்கான தயார்படுத்தலை அந்த அமைப்புகள் இப்போதே ஆரம்பித்து விட்டன.
அமெரிக்க வாழ் தமிழர்கள் ஏற்கனவே சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்தல், ஐ.நா. சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரிவின் அதிகாரிகளை சந்தித்தல் போன்ற ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூயோர்க் நகரில் பல தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி இது தொடர்பாக ஆராய்ந்துள்ளன. இம்மாநாடு தொடர்பான விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள போதிலும், ஐ.நா. சட்ட விதிகளுக்கமைய தமிழர் இனப்படுகொலை விடயத்தை எங்ஙனம் முன்வைப்பது என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தாயக நிலைமை குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. ஆனால் உலகத் தமிழர் பேரவைத் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் சில விபரங்களை தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியல் மாற்றங்களை கவனத்தில் கொள்ளாது தமிழர்கள் தமது ஜனநாயக போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
எனவே அடுத்து வரும் நாட்களில் தமிழர் போராட்டம் ஐ.நா. சபை நோக்கியே இடம்பெற போகின்றது. அதற்கான திட்டங்களே தற்போது வகுக்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgvy.html
Geen opmerkingen:
Een reactie posten