தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 november 2014

பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம்!– அனுர பிரியதர்ஷன யாப்பா!

ஹிருணிக்கா அமைச்சராகின்றார்!: நன்றிக்கடன் தீர்க்கின்றாரா நாமல்?
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:30.55 AM GMT ]
மேல்மாகாண சபையின் காலியாகவுள்ள அமைச்சர் பதவிக்கு ஹிருணிக்கா பிரேமசந்திர நியமிக்கப்படவுள்ளதாக அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ஷ இதற்கான அழுத்தங்களை கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வாலிப வயதில் நாமல் ராஜபக்ஷ காலடி எடுத்து வைத்த காலத்தில் அவரின் முதலாவது பெண்தோழியாக இருந்தவர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர.
எனினும் மஹிந்த ஜனாதிபதியானவுடன் தங்கள் அந்தஸ்திற்கு அவர் பொருந்தி வர மாட்டார் என்று ஷிரந்தி ராஜபக்ஷ ஹிருணிக்காவை விரட்டியடித்துவிட்டார்.
தனது தந்தை பாரத லக்ஷ்மணின் மறைவின் பின்னர் அரசியலுக்குள் குதித்த ஹிருணிக்கா, மாகாண சபை தேர்தலில் பெரும் எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அதன் பின் வந்த காலத்தில் அவருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஹரீன் பெர்னாண்டோவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உருவாகியிருந்தது.
எனினும் அண்மைக்காலமாக மீண்டும் நாமலின் பார்வை ஹிருணிக்கா பக்கம் திரும்பியுள்ளது.
பழைய கோபங்களை மறந்து ஹிருணிக்காவும் நாமலின் நில்பலகாய கூட்டங்களிலும் கலந்து கொள்கின்றார்.
இந்நிலையில் உதய கம்மன்பில ஆளுங்கட்சியிலிருந்து வெளியேறியதன் காரணமாக மேல் மாகாண சபையில் ஒரு அமைச்சு பதவி காலியாகியுள்ளது.
இதனை பெற்று கொள்வதற்கு ஹெக்டர் பெத்மகே உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் நாமல் ராஜபக்ஷவின் வற்புறுத்தல் காரணமாக குறித்த அமைச்சு பதவியை ஹிருணிக்காவுக்கு வழங்க ஜனாதிபதி தீர்மானிததுள்ளார்.
பெரும்பாலும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் அவர் மாகாண அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv4.html
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:32.35 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
டிசம்பர் 4 ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிப்போரின் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என தேர்தல் செயலகம் தெரிவிதுள்ளது.
தபால் மூலம் வாக்களிக்கும் அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான வாக்காளர் பட்டியல்கள் கிராம சேவையார் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் அரசாங்க அதிபர்களின் காரியங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் வேட்புமனுக்கள் டிசம்பர் 8 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv5.html
கட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்படும்: ரணில்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 05:39.23 AM GMT ]
கட்சி அரசியலுக்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்க பாடுபட போவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலிகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட அதிகாரசபை கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உற்பட ஏனைய அரசியல் கட்சிகளை சம்பந்தப்படுத்தி புதிய ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த ஐக்கிய தேசிய கட்சி எண்ணியிருந்தது.
எனினும் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க ஆதரவு வழங்கப்படும் எனவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv6.html
மைத்திரி ஏற்றிருப்பது மெகா தொடரின் பிரதான பாத்திரத்தை: டளஸ் அழகபெரும
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 06:01.14 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவின் பாத்திரமானது மெகா தொலைக்காட்சி நாடகத்தின் பிரதான பாத்திரத்திற்கு ஒப்பானது என அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பெயரிடப்படாத இந்த தொலைக்காட்சி நாடகத்திற்கு “அவளின் வைராக்கியம்” என பெயரிடுமாறு யோசனை முன்வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுருக்கமாக கூறினால் மைத்திரிபால சிறிசேனவின் வரலாறு குறித்து அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது.
எனினும் அவரது தற்போதைய செயற்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுடன் எதிர்காலம் குறித்து கவலையை ஏற்படுத்துகிறது.
அவரது செயற்பாட்டை, புரியும் மொழியில் கூற வேண்டுமாயின் இது மெகா தொலைக்காட்சி நாடகம்.
அந்த நாடகத்திற்கு பெயரிடப்படவில்லை. இதனால் அதற்கு “அவளின் வைராக்கியம்” என்று பெயர் வைக்குமாறு யோசனை கூறுகிறேன்.
இந்த தொலைக்காட்சி நாடகத்தின் தயாரிப்பாளர்கள் இலங்கையர்கள் அல்ல. இந்து சமுத்திரத்திற்கு அப்பால் பலமிக்க நாடுகளின் நபர்கள்.
நாடகத்திற்கான கதை, திரைக்கதை வசனத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எழுதியுள்ளார்.
பிரதியாக்கம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. நாடகத்தின் சண்டை இயக்குனரை எதிர்காலத்தில் காண முடியும்.
கதாபாத்திரங்களை ஏற்கும் கலைஞர்கள் தற்போது தயாராகி வருகின்றனர் என அமைச்சர் டளஸ் அழகபெரும கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgv7.html
மூட்டை முடிச்சுகளை தயார் செய்யும் அமைச்சர் ஏக்கநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 06:34.32 AM GMT ]
கலாசார அலுவல்கள் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க தனது அமைச்சின் அலுவலகத்தை காலி செய்து கொண்டிருப்பதாக சற்று முன்னர் கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
நேற்று சனிக்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கை விடுமுறை நாளான இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தன்னுடைய தனிப்பட்ட கோப்புகள், தனிப்பட்ட முறையில் கிடைத்த பரிசுகள், முக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் என்பவற்றை அமைச்சர் ஏக்கநாயக்க முன்னின்று தெரிவு செய்து அலுவலகத்தை விட்டும் அகற்றி கொண்டிருப்பதாக குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் அறிய கிடைத்துள்ளது.
இது தொடர்பான தகவல் அறிந்த ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரும், முக்கிய அமைச்சு ஒன்றின் செயலாளரும் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்கவை தொடர்புகொள்ள பல தடவைகள் முயன்றும் அவர் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த உயர்மட்ட அமைச்சர் தற்போது டீ.பி. ஏக்கநாயக்கவை நேரடியாக சந்திப்பதற்கு விரைந்து கொண்டிருப்பதாக குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgwy.html
பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம்!– அனுர பிரியதர்ஷன யாப்பா
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 06:59.39 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தும் தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச சதித்திட்டங்கள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். 
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இலங்கையில் வலுவான அரசாங்கம் ஒன்றின் ஆட்சி நடப்பதை காண சகிக்காத வெளிநாட்டு சக்திகள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்கள் கட்சியை விட்டுச் செல்வது புதிய விடயம் அல்ல எனக் கூறியுள்ளார்.
ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், கட்சியை அழிக்கும் சதிகாரர்களை புறக்கணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில், கட்சி பல வெற்றிகளை பெற்றுள்ளது. இதனை சிலர் மறந்து விட்டனர் எனவும் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw1.html

Geen opmerkingen:

Een reactie posten