[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:40.00 PM GMT ]
அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அது அறிவித்துள்ளது.
இந்தநிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான எழுத்துமூல அறிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச் டபில்யு குணதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த காலவரையறை நிறைவடைந்ததும், ஆணைக்குழு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே கடந்த ஜூலை மாதத்தில் இருந்து சர்வதேச நிபுணர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjty.html
உயர்கல்வி அமைச்சர் மாணவர்களை மிருகங்களாகவே பார்க்கின்றார்!– சுனில் ஹந்துனெத்தி
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:44.40 PM GMT ]
உயர்கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு குறித்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை மிருகங்களாகவும், பல்கலைக்கழகங்களை கட்சிக் காரியாலயங்களாகவுமே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கருதுகின்றார்.
இலங்கை வரலாற்றில் இந்த அமைச்சரின் காலத்தினைப் போன்று பலகலைக்கழகங்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டதில்லை.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையி;ன் 17 பல்கலைக்கழகங்களுக்கும் 159 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு பயிற்சி கல்லூரிக்கு மட்டும் 138 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் நியாயத் தன்மை எமக்குப் புரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjtz.html
Geen opmerkingen:
Een reactie posten