dinsdag 18 november 2014

மீளமைப்பு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன! தமிழ்மொழி புள்ளி 152ஆக குறைப்பு!

நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானம்! இன்று பொதுமக்களுக்கு அறிவிப்போம்!- ஜாதிக ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:18.14 PM GMT ]
அரசாங்கத்தில் பங்காளியாக தொடர்ந்தும் இருப்பதா? அல்லது விலகிச் செல்வதா? என்பது தொடர்பில் நாட்;டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.
ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழு தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்ää அரசியலமைப்பில் மாற்றங்களை செய்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து சுயாதீன தேர்தல் ஒன்றை நடத்தவேண்டும் என்று அந்தக்கட்சி கோரி வருகிறது.
எனினும் அரசாங்கம் அதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் காலஅவகாசத்தை கோரியிருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை 6.மணி முதல் இரவு 9 மணி வரை கூடிய ஜாதிக ஹெல உறுமயவின் மத்தியகுழு நாட்டுக்கு நன்மை பயக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த முடிவு இன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjs5.html
தனியாக தீர்மானம் எடுக்க முடியாது! கட்சி கேட்டுக்கொண்டால் போட்டியிட தயார்!- ரணில் விக்ரமசிங்க
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:26.08 PM GMT ]
பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் யாப்பிற்கு அமைய செயற்குழுவினை கூட்டி வேட்பாளர் தெரிவு பற்றி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளராக கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரியவை நியமிக்குமாறு தேசிய பிக்குகள் முன்னணியின் ஆலோசகர் கிராம்பே ஆனந்த தேரர் நேற்று ரணிலை சந்தித்து கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் வேட்பாளர் பற்றி பேசுவதனை விடவும் தேர்தலை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர் தொடர்பான பரிந்துரைகள் கட்சியின் செயற்குழுவில் வைத்து ஆராயப்படும்.
யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து தனியான தீர்மானம் எடுக்க முடியாது.
தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக நான் வெளிநாடு செல்கின்றேன்.
எனது வெளிநாட்டுப் பயணத்தின் போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் கட்சியின் செயற்குழு வேட்பாளர் தெரிவு தொடர்பில் கூடி ஆராயும்.
செயற்குழுவின் தீர்மானத்திற்கு ஏற்பவே பொது வேட்பாளர் நிர்ணயிக்கப்படுவார் என ரணில் விக்ரமசிங்க, கிராம்பே ஆனந்த தேரரிடம் தெரிவித்துள்ளார்.
கட்சி கேட்டுக்கொண்டால் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயார்!- ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கட்சி கேட்டுக்கொண்டால் தாம் போட்டியிடுவது தொடர்பில் சிந்திக்க முடியும் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த அவர், ஏற்கனவே ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை தேர்தலில் போட்டியிடச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகிறது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்..
எனினும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச வெளியிடும் பிரகடனத்தை தமது கட்சி எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் தமது கட்சி அனைத்து முரண்பாடுகளையும் மறந்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகியுள்ளதாக ரணில் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjs6.html
மீளமைப்பு புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன! தமிழ்மொழி புள்ளி 152ஆக குறைப்பு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:34.35 PM GMT ]
மீளமைப்பு செய்யப்பட்ட 2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
நேற்று மாலை இந்தப் புள்ளிகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி சிங்கள மொழி மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் 163 ல் இருந்து 157 ஆகவும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான புள்ளிகள் 159 ல் இருந்து 152 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன
இதன் காரணமாக புலமைப்பரிசில் நிதியத்துக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக அதிகரிக்கும் என்று வரவுசெலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjs7.html

Geen opmerkingen:

Een reactie posten