woensdag 12 november 2014

கோட்டபாய 2008ம் ஆண்டு சென்று வந்த முகாமில் தான் பாலச்சந்திரன் கொல்லப்பட்டாரா ?

பொலிஸ் சீருடையில் சென்று, ஆவணத்தை தேடி அதனை எரித்த கில்லாடி திருடன் இவர் தான் !

[ Nov 12, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11455 ]
undefinedபொலிஸ் அதிகாரிகள் இருவரின் ஆவணங்களை களவாடிய குற்றச்சாட்டில் மட்டக்குளி பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். மட்டக்குளி பொலிஸ் நிலைய விசேட பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின், ஆவணங்களை அங்கே களவாடிச் சென்று பின்னர் எரித்ததாக பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் இருவரும் உண்மையிலேயே பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தானா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 24ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன் நிலையில் இவர்கள் யார் என்பது தொடர்பான முழு விபரங்களையும் நீதிமன்றில் சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் எனவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/1421.html

வெளிநாட்டு தூதுவர்களை பார்கச் செல்லும்போது கூட ஆனந்தியை பின் தொடர்ந்த சிங்கள புலனாய்வுப் பிரிவு !

[ Nov 12, 2014 03:08:38 PM | வாசித்தோர் : 5990 ]
நேற்றைய தினம் கொழும்பில், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இருந்தவேளை அவரை 24 மணி நேரமாக சிலர் பின் தொடர்ந்துள்ளார்கள். இவர்கள் யார் என்பதனை நாம் சொல்லத்தேவையே இல்லை. சிறுபிள்ளையைக் கேட்டாலும் சொல்லும் அது கோட்டபாயவின் புலனாய்வுத்துறை என்று. ஆனந்தி கொழும்பில் சில சந்திப்புக்களை மேற்கொள்ள நேற்றைய தினம்(11) சென்றுள்ளார். இவரது வழக்கறிஞரைச் சந்திக்கச் சென்ற நேரம் முதல், வெளிநாட்டு தூவர்கள் இருவரைச் சந்திக்கும் வேளை கூட, ஆனந்திடை சிங்கள புலனாய்வாளர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து தகவல்களை சேகரித்துள்ளார்கள்.
பொலிசார் இந்த மோட்டார் சைக்கிள் நபர்களை மறிக்கவே இல்லை. மேலும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆனந்தி இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிங்கள அதிகாரிகள் இதனை பொருட்படுத்தவே இல்லை என்றும் மேலும் அறியப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில் ஆனந்தி எங்கே செல்கிறார். யார் யாரைச் சந்திக்கிறார் என்ற தகவல் திரட்டப்பட்டுள்ளது. தற்போது யாழில் உள்ள முன் நாள் எம்.பி சிவாஜி லிங்கம் மற்றும் ஆனந்தி போன்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு தொடர்ந்து உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1427.html

கோட்டபாய 2008ம் ஆண்டு சென்று வந்த முகாமில் தான் பாலச்சந்திரன் கொல்லப்பட்டாரா ?

[ Nov 12, 2014 09:47:09 PM | வாசித்தோர் : 7160 ]
கமால் குணரத்ன
http://www.athirvu.com/newsdetail/1428.html

Geen opmerkingen:

Een reactie posten