woensdag 12 november 2014

வடக்கு முதலமைச்சர் தெரியாத வடக்கு மாணவர்கள்!

மகிந்தவை ஒழிக்க பாரிய படை கொழும்பில்….

எதிர்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க, சோபித தேரர், அத்துரலிய ரத்தின தேரர், மங்களசமரவீர, கருஜெயசூர்ய உட்பட பல எதிர்கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சரத்என் சில்வா 
ஜனாதிபதியை தேர்தலில் தோற்கடிப்பதே தற்போது எமக்குள்ள ஒரேவழி.
ரணில் விக்கிரமசிங்க
நாங்கள் பொருளதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக அறிமுகப்படுத்திய முறையை தற்போதைய அரசாங்கம் குடும்பத்தின் நன்மைக்காக
பயன்படுத்துகி;றது.
சோபித தேரர்
சகல தலைவர்களும் இந்த முறையை நீக்குவதாக அனுமதியளித்தனர்.ஆனால் எவரும் இதனை செய்யவில்லை. இம்முறை இதனை நீக்குவதற்காக நாங்கள் அனைத்து கட்சிகளையும் அணிதிரட்டுகின்றோம்,அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் நாங்கள் இம்முறை இதனை செய்யலாம்.UNP-NEW-TAIMUNP-NEW-TAIM-01UNP-NEW-TAIM-02UNP-NEW-TAIM-03UNP-NEW-TAIM-04ColomboColombo-01Colombo-02

http://www.jvpnews.com/srilanka/86604.html

இலங்ககையின் போர் ஆதாரம் ஐநாவில் சூடுபிடித்தது…

இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியான 2009 ஜனவரி 20ம் திகதி முதல் 2009 மார்ச் 7ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2683 பொது மக்கள் கொல்லப்பட்டும் 7241 பேர் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா தலைமையகத்திற்கு கிடைத்திருந்த புள்ளிவிபர தரவுகள் குறித்த இரகசிய தரவுகள் அடங்கிய அறிக்கையொன்று தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே இன்னர் சிற்றி பிரஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பொது மக்களின் இழப்புக்கள் குறித்த தகவல்கள் அறிந்திருந்தும் திட்டமிட்ட முறையில் அந்த விபரங்களை மூடிமறைத்ததன் மூலம் ஐ.நா இலங்கை அரசை சர்வதேச நெருக்கடிகளில் இருந்தும் விமர்சனங்களில் இருந்தும் காப்பாற்றுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது.
இதனாலேயே பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் அது குறித்த எந்தத் தகவல்களும் தங்களுக்கு தெரியாது என்று ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர்கள் உட்பட ஐ.நா சார்பில் பேசவல்ல அதிகாரிகள் அனைவரும் அந்தக் காலப் பகுதியில் கூறிவந்ததாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
குறிப்பாக 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மைக்கல் மொன்டாஸிடம், இலங்கையில் இடம்பெறும் போரில் பொது மக்களின் உயிரிழப்புக்கள் 1200க்கு அதிகமா அல்லது குறைவா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தாங்கள் பொது மக்களை பாதுகாக்கவே பாடுபடுகின்றோமே தவிர உயிரிழந்த சடலங்களை எண்ணிக்கொண்டிருக்கவில்லை என்று கூறி பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் ஐ.நா சபைக்கு வன்னியில் பொது மக்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்புக்கள் குறித்த குறைந்தபட்ச புள்ளிவிபரங்கள் அப்போது அறிக்கையாக ஐ.நா தலைமையகத்திற்கு கிடைத்துள்ளது.
அந்த சமகால தரவுகளுக்கமைய 2009 ஜனவரி 20ம் திகதி முதல் 2009 மார்ச் 7ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2683 பொது மக்கள் கொல்லப்பட்டும், 7241 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இதுபோன்ற மிகவும் மோசமான போர் குற்றங்கள் குறித்த தரவுகளை மூடிமறைத்ததால், இன்றைய தினம் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற போர் குற்றங்களை ஆவணப்படுத்தும் முக்கிய நிகழ்விலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து அக்கறை செலுத்தப்படாது புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.
அதேவேளை இலங்கை குறித்து விசாரணை நடத்திவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழு, இலங்கைக்கு விஜயம் செய்யாது இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை தயாரிப்பது எவ்வாறு என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் போர் குற்றங்கள் குறித்த ஆவணப்படுத்தல் பேரவையிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/86619.html

ஜெயாவின் 10 ஆண்டுகள் தடையை உறுதிப்படுத்திய தமிழக அரசிதழில்

சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது.
அதில், ‘லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி முதல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினரில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார். தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 ஆண்டுகளும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும்.
எனவே, தற்போதைய நிலையில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் இழந்தார். அவரது தகுதியிழப்பு குறித்து முறையான அரசாணை, கடந்த 8-ம் தேதி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயால்லிதா சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களில் விடுதலை அல்லது தண்டனையில் மாற்றம் இல்லாவிட்டால், தற்போதைய உத்தரவுப்படி ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
http://www.jvpnews.com/srilanka/86622.html

மன்னார் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அதேயிடத்தை சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 40) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் புலிகள் இயக்கத்தின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் என்றும் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியேறியவர் என்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மேசன் வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் இவர், சம்பவ தினம் இரவு, தனது வீட்டு முற்றத்தில் சீமெந்துக் கற்களை வெட்டிக்கொண்டிருந்த போது அங்கு புகுந்த ஆயுததாரிகள் சிலர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரவில்லையெனவும், சடலம் இன்னமும் அப்புறப்படுத்தப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/86625.html

வடக்கு முதலமைச்சர் தெரியாத வடக்கு மாணவர்கள்!



அதற்கு அங்கிருந்த மாணவர்களில் இருவர் மட்டுமே சி.வி.விக்னேஸ்வரன் என பதில் கூறினார்கள். வேறு எவரும் முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. பொது அறிவு விடயங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும்படி அப்பாடசாலை ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறினேன். மாணவர்கள் பாடக்கல்வியை எவ்வளது தூரத்திற்கு கற்கின்றார்களோ அந்தளவுக்கு பொது அறிவும் இருக்க வேண்டும். பொது அறிவு மாணவர்களுக்கு அவசியமானதொன்று. மாணவர்களின் பல்தரப்பட்ட அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு நூல்களை அன்பளிப்பு செய்து வருவதாகவும் மூர்த்தி மேலும் கூறினார்.???????????????????????????????
http://www.jvpnews.com/srilanka/86628.html

Geen opmerkingen:

Een reactie posten