[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 12:19.29 PM GMT ]
தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உள்ள மனித குரங்குக்கு (Orangutan) சிகிச்சையளிப்பதற்காக சென்ற மருத்துவர், அந்த குரங்கின் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனிதக் குரங்கின் தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவர், ஆபத்தான நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெலிவேரிய வன்முறை! மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யாரென கூற முடியாது: இராணுவப் பேச்சாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 12:38.16 PM GMT ]
குடிப்பதற்கு குடிநீர் கேட்டு வெலிவேரியவில் நடைபெற்ற மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய உத்தரவிட்டது யார் என்பதை தன்னால் கூறமுடியாது என தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய விசாரணைகளின் பிறகு அதனை கூறமுடியும் என்ற கூறினார்.
வெலிவேரிய சம்பவத்தில் இராணுவத்தினர் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக பல தரப்பிடம் இருந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதில் இராணுவம் தலையிட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
இராணுவம் போன்ற சட்டத்தை மதிக்க வேண்டிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இப்படியான சம்பவங்களின் போது எப்படி துப்பாக்கி பிரயோகம் செய்தனர், அதற்கு யார் உத்தரவிட்டது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளர், விசாரணைகள் நடைபெறுவதால், இந்த கேள்விக்கு தெளிவான பதிலை வழங்க முடியாது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இரண்டு வாரங்களில் இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படும் என்றார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களின் போது இராணுவம் பயன்படுத்தப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னால் ஜோதிடம் பார்க்க முடியாது என்று குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
வெலிவேரிய சம்பவத்தை கொண்டு சிலர் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்த்தனர். இராணுவம் குழப்பைத்தை ஏற்படுத்துவதற்காக அங்கு செல்லவில்லை.
பிரச்சினைக்கு தீர்வு கண்டு மூடப்பட்டிருந்த வீதியை திறக்கவே சென்றது என்றார்.
இந்த சம்பவத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட தாக்குதல் மற்றும் இடையூறுகள் தொடர்பில் தெரிவித்த அவர், நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெரியும் என கூறினார்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் இறுதியான முடிவுகளுக்கு வருவது பொருத்தமற்றது. தவறுகள் நடந்திருந்தால், இராணுவச் சட்டத்திற்கு அமைவாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
வெலிவேரிய சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான எண்ணிக்கை அரசு வெளியிட வேண்டும்- மங்கள சமரவீர
வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற இராணுவத்தினரின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெலிவேரிய கலவரத்தில் மூவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள போதும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்களின் படி மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெலிவேரிய பிரதேசத்திலிருந்து கிடைக்கும் தகவல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
குடிப்பதற்கு நீர் கேட்ட மக்கள் மீது இரக்கமற்ற வகையில் இராணுவத்தை ஏவி துப்பாக்கிச் சூட்டை நடத்தியது மட்டுமின்றி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் சம்பவத்தின் உண்மைநிலையை நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் மறைக்க அரசாங்கம் முயன்று வருகிறது.
நாட்டு மக்களையும் உலக மக்களையும் தொடர்ந்தும் முட்டாள்களாக்காது வெலிவேரிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ராஜபக்ஷ அரசு உத்தியோகபூர்வமாக வெளியிட வேண்டும்.
அத்துடன் சிவில் சமூகத்துடன் தொடர்புபட்ட ஒரு பிரச்சினைக்கு பொலிஸாரை பயன்படுத்தாது மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவத்தை அனுப்புவது போல் இராணுவத்தை அனுப்பி நிராயுத பாணிகளான அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த கட்டளையிட்டது யார் என்பதை ராஜபக்ஷ அரசாங்கம் உலகத்திற்கு வெளியிட வேண்டும்.
இந்த உத்தரவை பிறப்பித்தது ராஜபக்ஷ அண்ணனா ? அல்லது தம்பியா ? என எழுந்துள்ள சந்தேகத்தை தீர்த்து கொள்ள ரத்துபஸ்வல மக்கள் மட்டுமல்ல முழு உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten