தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

மாகாணசபைத் தேர்தல் மோசடிகளுடன் கூடிய தேர்தலாக இருக்கும்: சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!

மட்டக்களப்பில் பதில் அரசாங்க அதிபராக சிங்களவர் ஒருவர் நியமனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:25.54 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவரை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக நியமித்தமைக்கு எதிராக பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபராக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சின் நடைமுறைக்கு எதிராக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் விடுமுறையில் சென்றுள்ளதால் அவர் குறித்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை பதில் மாவட்ட அரசாங்க அதிபராக
நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் விடுமுறையில் செல்லும்போது அங்கு மேலதிக அரச அதிபராக கடமையாற்றுபவரே பதில் மாவட்ட அரசாங்க அதிபராக செயற்படுவது வழமையாகும்.
ஆனால் அதனை மீறி மேலதிக அரசாங்க அதிபர் ஒருவர் இருக்கும்போது அதற்கு மாறாக வேறு ஒரு மாவட்டத்தில் இருந்து பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவரை நியமித்துள்ளது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபராக இருப்பவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பதுடன் அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் பதவி வகித்தவர். மாவட்ட
செயலகத்தின் செயலாளராக வரக்கூடிய அனைத்து தகுதியையும் கொண்டிருந்த அவரை புறந்தள்ளி பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவரை நியமித்தது தொடர்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸுக்கும் மேலதிக அரசாங்க அதிபருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து மோதலே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் மோசடிகளுடன் கூடிய தேர்தலாக இருக்கும்: சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:10.10 PM GMT ]
1999ம் ஆண்டு நடைபெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலை விட இம்முறை நடைபெறும் தேர்தல் மிகவும் மோசமான வன்முறைகள் மற்றும் மோசடிகளுடன் கூடிய தேர்தலாக இருக்கும் என்பதை வெளிகாட்டும் அடிப்படையான அடையாளம் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளதாக குருணாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலைமையை தற்போதே கட்டுப்படுத்தாவிட்டால் பாரதூரமான பல பிரச்சினைகள் ஏற்படும் என சில அமைச்சர்களும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே ஆயுததாரிகளுடன் கூடிய நபர்களும் இலக்க தடுகள் இல்லாத வாகனங்களும் குருணாகல் நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஊஷி ரகத்தை சேர்ந்த நவீன துப்பாக்கிகள், மேலும் சில ஆயுதங்களுடன் இந்த நபர்கள் இரவு நேரங்களில் இலக்க தகடுகள் இல்லாத வாகனங்களில் குருணாகல் மற்றும் வாரியபொல நகரம் உட்பட பல தேர்தல் தொகுதிகளில் உலா வருகின்றனர் என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடித்தில் சுதந்திரக்கட்சியினர் கூறியுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளும், தனியார் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளும் இவர்களில் அடங்குகின்றனர். வட மேல் மாகாண சபை தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடப்பதற்கு இவர்கள் பெரும் தடையாக இருப்பார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையில் இதுவரை நடத்தப்பட்ட தேர்தல்களில் 1999 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி நடத்தப்பட்ட வடமேல் மாகாண சபை தேர்தலே மிகவும் மோசடியான தேர்தலாக கருதப்படுகிறது.
அந்த தேர்தலின் போது 47 ஆயிரத்து 290 கள்ள வாக்குகள் போடப்பட்டதாகவும் கள்ள வாக்குகள் அடங்கிய 191 பெட்டிகளை அடையாளம் கண்டதாகவும் தேர்தல் திணைக்களத்தின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten